Search
  • Follow NativePlanet
Share
» »மழைக் காலத்தில் போகவேண்டிய சுற்றுலாத் தலங்கள்!

மழைக் காலத்தில் போகவேண்டிய சுற்றுலாத் தலங்கள்!

பணிபோல் பொழியும் மலைச் சாரலுடன் கூடிய இந்த சீசனில் கூடுதல் அழகுடன் இருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க.

வருடம் முழுவதும் செல்லக்கூடிய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அதோடு சீசனுக்கு ஏற்ப செல்ல வேண்டிய சுற்றுலா தளங்களும் இருக்கின்றன. தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தற்போது பருவமழை காலம் தொடங்கி மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சமவெளிப் பகுதிகளிலேயே பகல் நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஜில்லென்ற சூழலை உணர முடிகிறது. இந்த சீசனில் கூடுதல் அழகுடன் இருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


தமிழகத்தின் ஒரு பகுதியிலும், கர்நாடகாவிற்கு சற்று அருகிலும் இருக்கக் கூடிய ஓர் அழகிய கடல் மாநிலம் தான் இந்த பாண்டிச்சேரி. அற்புதமான பிரெஞ்சு காலனிகளும், சூரிய ஒளியில் அவற்றின் அழகு மிகுந்த மிளிரும் தோற்றமும் கண்களை கூசச் செய்யும். அதிலும், மதியப் பொழுதில் கூட பணிபோல் பொழியும் மலைச் சாரலுடன் இந்த வண்ணமிகு கட்டிடங்கள் எவ்வாறு ஒளிரப்போகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமா, பாண்டிச்சேரியின் அழகுமிகுந்த கடற்கரைகளில் அமர்ந்து சாரலுடன் அலையை ரசிக்கும் அனுபவம் வார்த்தைகளில் அடங்காது.

Rafimmedia

கோட்லிகாட் கோட்டை

கோட்லிகாட் கோட்டை


கோட்லிகாட் என்னும் இந்த பேத் கோட்டை கர்ஜத் நகரத்துக்கு மிக அருகில் உள்ள பேத் எனும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி மாத்தேரான் மலைகளை பின்னணியில் கொண்டுள்ளதால் அற்புதமான இயற்கைக்காட்சிகளுடன் காட்சியளிக்கின்றது. இங்கிருந்து கொங்கணப்பிரதேசத்தின் இயற்கை எழிலை நன்றாக ரசிக்க முடிகிறது. இந்த கோட்டைக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு குகையில் பைரோபா கடவுளின் விக்கிரகம் உள்ளது. பசுமை நிறைந்த சூழல் வருடத்தின் எந்த காலத்திலும் ரம்மியமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் மழைக் காலத்தில் கருமேகம் சூழ, மரங்களின் நடுவே ஊடுருவிச் செல்லும் மழை மேகங்களை கண்டு ரசிக்கலாம்.

Ccmarathe

மூணார்

மூணார்


மூணார் குறித்து பெரும்பாலும் நாம் அறிந்திருந்தாலும் இது புதுபுது தோற்றத்தில் நம்மை ஈர்க்கக் கூடியதாகவே உள்ளது. பிற மாநிலங்களில் வெயில் வாட்டியெடுத்தாலும் கூட மூணார் ஜில்லென்ற கொட்டும் பணிக் காலநிலையுடன் இருக்கும். அதுவும் மழைக் காலத்தில் இங்கே சுற்றுலாப் பயணம் மேற்கொண்டீர்கள் என்றால் கணக்கில் அடங்காத அருவிகளை கண்டு மகிழ கண்கள் கோடி வேண்டும்.

AdityaPKumar

மௌசின்ராம்

மௌசின்ராம்

மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ராம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. நீங்கள் மழையை கொண்டாட ஆரம்பிக்க, மேகலயாவின் இந்த கிராமங்கள் பாதி மழைப்பருவத்தை கடந்து விட்டன. மௌசின்ராம் உலகின் ஈரப்பதமான இடங்களில் ஒன்றாகும், தீவிரமான மழைப்பொலிவு, காசி மலைகள் மற்றும் சில சுவாரஸ்யமான குகைகளையும் கண்டு ரசிக்கலாம்.

தடியாண்டமோல்

தடியாண்டமோல்


கூர்கிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தடியாண்டமோல். கர்நாடக மாநிலத்தின் 3-வது உயரமான மலைச்சிகரமான தடியாண்டமோல் எனும் இந்தப் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் மீத தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறிய பின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை. மேலும், கர்நாடகாவின் பிரபல சுற்றுலாத் தலமான கூர்கிலிருந்து 61 கிலோ மீட்டர் தொலைவிலும், கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிக்கு வெகு அருகிலும் இருப்பு நீர்வீழ்ச்சி அமையப்பெற்றுள்ளது. மழைக் காலத்தில் இதில் ஆற்பறித்துக் கொட்டும் நீர் விழும் பாறையையும், பார்க்கும் மனதையும் கரைத்துவிடும்.

L. Shyamal

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X