Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள்!

தமிழகத்தில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள்!

தமிழகத்தில் பல சரணாலயங்கள் இருக்கும் நிலையில் குறிப்பிடத்தக்க இன்றளவும் கூட அதிகப்படியான பாதிப்புகளைச் சந்திக்காத ஏழு புகழ்பெற்ற சரணாலயங்கள் குறித்துதான் பார்க்கப்போகிறோம்.

​இந்தியாவை பொருத்தவரை தமிழகம் சுமார் 17 சதவிகிதம் வனப்பரப்பைக் கொண்டுள்ளதாக கணக்கெடுக்கபள் மூலம் தகவல் வெளியாகிறது. நாகரீகமும், தொழில்நுட்பமும் அடையும் வளர்ச்சி இந்த வன நிலப்பரப்பை குறைத்துக் கொண்டு வருவது ஒரு புறம் இருக்க பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும், விலங்குகள், பறவைகளுக்கான சரணாலயங்களும் மறுபுறம் விலங்குகள் மீதான காதலர்களை ஈர்த்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பல சரணாலயங்கள் இருக்கும் நிலையில் குறிப்பிடத்தக்க இன்றளவும் கூட அதிகப்படியான பாதிப்புகளைச் சந்திக்காத ஏழு புகழ்பெற்ற சரணாலயங்கள் குறித்துதான் பார்க்கப்போகிறோம்.

முதுமலை

முதுமலை

முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகம் மட்டுமின்றி நாடளவில் மிகவும் பிரபலமானது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை கொண்டுள்ளது இந்த சரணாலயம். சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள இங்கு நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடமாக உள்ளது. அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் சுற்றுலாப் பயணிகளை, இயற்கை ஆர்வலர்கள் இதை நோக்கி ஈர்க்கிறது.

Taz

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்


வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாகும். இது அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. மாபெரும் மாநகரான சென்னைக்கு அருகில் இது அமைந்திருந்தாலும் சரணாலயத்தின் உட்கட்டமைப்பு ஏதோ ஓர் அடர் வனப்பகுதிக்குள் நுழைவதைப் போன்ற தோற்றத்தையே நம் மனதில் உணர்த்துகிறது.

Karthik Easvur

தனுஷ்கோடி நீர் பறவை சரணாலயம்

தனுஷ்கோடி நீர் பறவை சரணாலயம்


உலகம் முழுவதும் உள்ள பறவைக் காதலர்கள் குறிப்பிட்ட காலங்களில் இங்கு வந்து தங்கி இங்கு வசிக்கும் பறவைகளின் குணாதிசயங்களை கவனித்து செல்கின்றனர். மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் உணவிற்காகவும், இதன் சீதோஷன நிலைக்காகவும் பலவித நீர்ப்பறவைகள் இப்பகுதியை நோக்கி படையெடுக்கின்றது. ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயரும் பறவைகள் பெருமளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருவதும் வழக்கம்.

Raj

மஹாபலிபுரம் முதலைப்பண்ணை

மஹாபலிபுரம் முதலைப்பண்ணை


இந்தியா மற்றும் ஆப்பிரிக்க முதலைகளை பாதுகாப்பான சூழலில் வளர்த்து இனப்பெருக்கம் செய்யும் நோக்கத்துடன் துவங்கப்பட்டதுதான் மஹாபலிபுரம் முதலைப்பண்ணை. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து இந்த முதலைகள் இயற்கை சூழலில் திறந்த வெளி குளங்களில் வசிப்பதை பார்த்து ரசிக்கலாம்.

Rasnaboy

திருநெல்வேலி

திருநெல்வேலி

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

திருநெல்வேலியில் அமைந்துள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பெரும்பாலும் டிசம்பர் மாதத்திலேயே பல நாட்டுப் பறவைகள் இடம்பெயர்வது வழக்கம். சுமார் 40-க்கும் அதிகமான இனப் பறவைகள் இவ்வாறு இடம்பெயர்ந்து வந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. நீங்கள் பறவைகள் ரசிகர்களாக இருந்தால் இக்காலகட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு தவறாமல் பயணம் செய்யலாம்.

K Hari Krishnan

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

களக்காடு வனவிலங்கு சரணாலயம்


திருநெல்வேலியில் அமைந்துள்ள மற்றொரு சரணாலயம் களக்காடு வனவிலங்கு சரணாலயம். புலிகளுக்கான சரணாலயமாக இது அறிவிக்கப்பட்டிருந்தாலும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளே இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. முன்னதாகவே வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்தால் இச்சரணாலயத்தின் அடர் பசுமை மரக்காடுகளுக்கு நடுவே பயணித்து முழு அழகையும் ரசிக்கலாம்.

Amiya418

வல்லநாடு காட்டுயிர் பூங்கா

வல்லநாடு காட்டுயிர் பூங்கா


தமிழ்நாட்டில் பிளாக்பக் வகை மான்கள் அதிகம் காணப்படும் பூங்கா வல்லநாடு காட்டுயிர் பூங்கா தான். வல்லநாடு காட்டுயிர் பூங்கா என்று அழைக்கப்படும் இது தென்னிந்தியாவில் புள்ளி மான்கள் அதிகம் காணப்படும் இடமாக உள்ளது.

Rei

பெல்லிக்கல்

பெல்லிக்கல்

கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பெல்லிக்கல் சரணாலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகு முழு சொர்க்கத்தை நம் கண் முன் நிறுத்தும். அரிய வகை கருப்பு சிறுத்தை, சாம்பார் மான், யானை, கரடி என பல இன விலங்குகளின் சங்கமமாக இச்சரணாலயம் திகழ்கிறது. இப்பகுதிக்கு பயணம் செய்தால் நிச்சயம் திரும்பி வரும் எண்ணமே இருக்காது.

RameshSharma1

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X