Search
  • Follow NativePlanet
Share
» »பெர்முடா போன்றே மர்மம் நிறைந்த முக்கோண சிவன் கோவில்கள்..!

பெர்முடா போன்றே மர்மம் நிறைந்த முக்கோண சிவன் கோவில்கள்..!

இன்றுவரை விடைதெரியா புதிராகத்தான் உள்ள பெர்முடா முக்கோணம் போன்றே பல மர்மங்கள் நிறைந்த முக்கோண வடிவில் அமைந்துள்ள சிவன் கோவில்கள் எங்னே உள்ளது தெரியுமா ?

பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வின்வெளிக்கு பயணித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் நம்மாள் இன்று வரை பெர்முடா முக்கோணத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்தும், மர்மங்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடியவில்லை. காரணம், அங்கே நிகழும் தொடர் மாற்றங்களும், நிகழ்வுகளும் தான். இது வேற்றுகிரகவாசிகளின் நுழைவு வாயிலா ?. அல்லது, அங்கேதான் வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நீழ்கிறது. ஆனால், இன்றுவரை விடைதெரியா புதிராகத்தான் உள்ளது பெர்முடா முக்கோணம். இந்த முக்கோணத்தைப் போன்றே பல மர்மங்கள் நிறைந்த முக்கோண வடிவில் அமைந்துள்ள சிவன் கோவிலும் உள்ளது. அதுவும் நம் நாட்டில். அக்கோவிலில் நிகழம் சம்பவங்களும், அது எந்தெந்த கோவில்கள் எனவும் பார்க்கலாம் வாங்க.

முக்கோணக் கோவில்கள்

முக்கோணக் கோவில்கள்


பெர்முடா முக்கோணம் எப்படி புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை முக்கோண வடிவில் இணைக்கப்பட்டுள்ளதோ அதேப் போன்று ஒரிசாவிலும் வெவ்வேறு பகுதியில் அமைந்துள்ள மூன்று கோவில்கள் முக்கோண வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. இதில், வியக்கத்தகுந்த விசயம் என்னவென்றால் இங்கேயும் பல அமானுஷ்யம் நிறைந்த அல்லது மர்மமான நிகழ்வுகள் அரங்கேருவது ஆகும். பெர்முடா போன்ற சவாலான கோவில்களாக உள்ள லிங்கராஜா கோவில், ஜெகன்நாதர் கோவில், கொனார்க்கில் உள்ள சூரியக்கோவில் குறித்து அறிந்துகொள்வோம்.

Bernard Gagnon

புபனேஷ்வர் ஆலயம்

புபனேஷ்வர் ஆலயம்


புபனேஷ்வர் எனும் இந்நகரத்தின் பெயரானது சிவபெருமானை குறிக்கும் திரிபுவனேஷ்வர் எனும் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. எனவே இங்குள்ள கோவில்கள் யாவுமே சிவபெருமானை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றன. ஒரு சில கோவில்கள் மட்டுமே இதர தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிவன் கோவில்களில் முக்கியமான கோவில்களாக அஷ்டசாம்பு கோவில்கள், பிரிங்கேஷ்வர சிவா கோவில், பியாமோகேஷ்வரா கோவில், பாஸ்கரேஷ்வர் கோவில், என பல இருந்தாலும் லிங்கராஜா கோவிலே மிகவும் பிரசிதிபெற்றதாக உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இது இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக்கோவிலின் பகுதிகள் கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சில நூல்களில் இருந்ததாக கூறப்படுகிறது.

G.-U. Tolkiehn

லிங்கராஜா

லிங்கராஜா


லிங்கராஜர் என்னும் இக்கடவுளின் பெயர் லிங்கங்களின் அரசர் என்ற பொருளைத் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
இக் கோவில் 55 மீட்டர்கள் உயரமான இதன் விமானத்துடன் புவனேஸ்வரில் உள்ள கோவில்களில் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோவிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோவில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

SUDEEP PRAMANIK

ஜெகன்நாதர் கோவில்

ஜெகன்நாதர் கோவில்


பூரியில் அமைந்துள்ள இந்த ஜெகன்நாதர் கோவில் சோழ மன்னர் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிற சைவ கோவில்களைப் போல அல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது. உலகிலேயே இதுபோன்ற மரத்தால் ஆன மூலவர் வழிபாட்டு முறை உள்ள ஒரே கோவில் இதுவாகும். இக்ககோவிலுக்கே உள்ள சிறப்பு என்றால் அது கோவில் கோபுர நிழல் தான். இந்த கோவில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை யாராலும் கார்க்க முடியாது என்றால் பாருங்களேன்.

SATHWIKBOBBA

முக்கோணத் தொடர்பு

முக்கோணத் தொடர்பு


பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியின் மீது செல்லும் கப்பல்களும், வான்வெளியில் பறக்கும் விமானமும் எப்படி விபத்திற்கு உள்ளாகிறதோ அதேப்போன்ற மர்மங்களும் இக்கோவிலின் மேலே நடக்கிறது. இந்த கோவிலின் மேல் பறவைகள் எதும் பறப்பதில்லை. அதே நேரத்தில் இந்த கோபுரத்தில் எந்த பறவைகளும் அமர்வதுமில்லை. பொதுவாகவே கோவில் கோபுரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் எந்நேரமும் இருக்கும். ஆனால், பறவைகள் நெருங்கவே அஞ்சப்படும் இக்கோவில் வியப்பின் உச்சம் தானே.

NahidSultan

சூரியக்கோவில், கொனார்க்

சூரியக்கோவில், கொனார்க்


கொனார்க் நகரத்தின் முக்கிய அடையாளமான சூரியக்கோவில் கடந்து போன ஒரு ஆதி நாகரிகத்தின் வாசனை சிறிதும் மறையாமல் வீற்றிருக்கிறது. கற்களில் வடிக்கப்பட்ட மஹோன்னத கட்டிடக்கலை அற்புதங்களை கொண்ட இந்திய புராதன சின்னங்களின் மத்தியில் இந்த கோவில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 24 சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ஒரு தேர் அமைப்பு வெகு நுணுக்கமான சிற்பக்கலை அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. சூரியக்கடவுளின் வாகனமாக இந்த தேர் உன்னதமான ஒரு கற்பனைப் படைப்பாகவும், கட்டிடச் சிற்பக்கலை நிர்மாணமாகவும் கருதப்படுகிறது. இந்த அற்புதமான கோவிலின் சில பகுதிகள் கால ஓட்டத்தில் சிறிது சேதமடைந்து காணப்பட்டாலும் இதன் பொலிவு இன்றளவும் குறையாமல் பார்வையாளர்களை பிரமிக்கச்செய்கிறது.

Mayank Choudhary

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X