Search
  • Follow NativePlanet
Share
» »பானம் குடிக்கும் நரசிம்மர்... எங்கே இருக்கு இந்த அதிசயக் கோவில் ?

பானம் குடிக்கும் நரசிம்மர்... எங்கே இருக்கு இந்த அதிசயக் கோவில் ?

சென்னையில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவிற்கு உட்பட்ட விஜயவாடாவில் உள்ள கோவில் ஒன்றில்தான் இந்த அதிசயம் அன்றாடம் நிகழ்கிறது. கும்மிடிப்பூண்டி, குடூர், நெல்லூர், குண்டூர் வழியாக கிர

PC : praveen

இந்தியாவில் பரவலாக இந்துக்களுக்கான கோவில்கள் உள்ளன. இதில் ஆன்மீக சிறப்பு வாய்ந்த கோவில்களில் சில அதிசயங்களும் நடைபெற்று வருவதை செய்திகள் வாயிலாக, இலக்கியங்களில் என நாம் கண்டு வருகிறோம். தொங்கும் தூண், பால் வடியும் சிலை, வியர்க்கும் அம்மன், கண் திறக்கும் திருமாள் என பல அதிசயங்கள் திருத்தலங்களில் அரங்கேரிவருகிறது. அதேப் போன்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றிலும் ஒரு வியக்கும் அதிசயம் உள்ளது. அங்கே என்ன நிகழ்கிறது, எப்படிச் செல்லலாம், கோவிலின் சிறப்பு உள்ளிட்டவற்றை வாங்க போய் பார்க்கலாம்.

எப்படிச் செல்லாம் ?

எப்படிச் செல்லாம் ?

Map

சென்னையில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவிற்கு உட்பட்ட விஜயவாடாவில் உள்ள கோவில் ஒன்றில்தான் இந்த அதிசயம் அன்றாடம் நிகழ்கிறது. கும்மிடிப்பூண்டி, குடூர், நெல்லூர், குண்டூர் வழியாக கிருண்ணா நதியைக் கடந்தால் விஜயவாடாவை அடையலாம்.

நரசிம்மர் ஆலயம்

நரசிம்மர் ஆலயம்

PC : Gladiatorkp

விஜயவாடாவிற்கு முன்னதாக சுமார் 41 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குண்டூர். இங்கே உள்ள மங்களகிரி மலையில் அருள்மிகு நரசிம்மர் திருக்கோவிலில் நரசிம்மர் அருள்பாளித்து வருகிறார். பித்தளை வாயுடன் கூடிய இவரே பானம் அருந்தும் அதிசயத்தையும் நிகழ்த்தி வருகிறார்.

திருத்தல சிறப்பு

திருத்தல சிறப்பு

PC : griannan

மங்களகிரிமலையின் மீது யானை வடிவ மலையில் பஞ்ஜபாண்டவர்கள் வழிபட்ட பானக நரசிம்மர் திருத்தலம் உள்ளது. நரசிம்மரை வழிபட்டு பானகம் கொடுத்தால் சகல பிரச்சனைகளும் விலகும் என்பது தொண்நம்பிக்கை. இதற்காகவே, சன்னதியில் பானகமும் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

மங்களகிரி சிறப்பு

மங்களகிரி சிறப்பு

PC : mangalagiri

மங்களகரமான மலையே மங்களகிரி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மஹா விஷ்ணு அமர்ந்துள்ள ஸ்ரீரங்கம், சலகமாத்ரி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற இந்தியாவில் உள்ள எட்டு மகாசேஷத்திரத்தில் இதுவும் ஒன்றாகும். பானக நரசிம்மர் சுவாமி கோவில், மலை அடிவாரத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில், மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி கோவில் என மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன.

மங்களகிரி வரலாறு

மங்களகிரி வரலாறு

PC : GourangaUK

பாரியாத்ரா என்ற அரசரின் மகனான ஹரஸ்வ ஸ்ருங்கி இந்தியாவில் பல புனித இடங்களுக்கு சென்று தவம் செய்துவிட்டு பின் இறுதியாக புனிதத் தலமான மங்களகிரிக்கு வந்தான். அங்கு மூன்று வருடம் ஸ்ரீ மஹா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். பின்னாளில் ஸ்ருங்கி, யானை வடிவம் பெற்று மலையாக உருமாறி விஷ்ணுவின் இருப்பிடமாகவே உருவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் என்னவோ, எந்தக் கோணத்திலிருந்து மலையைப் பார்த்தாலும் யானை வடிவிலேயே தெரிவது இதன் தனிச் சிறப்பாக உள்ளது.

வியப்பூட்டும் நரசிம்மர்

வியப்பூட்டும் நரசிம்மர்

PC : Adityamadhav83

இக்கோவிலில் நரசிம்மருக்கு என பிரத்யேக உருவச் சிலை எதுவும் கிடையாது. நரசிம்மரின் அகலமான வாய்ப்பகுதி மட்டும் உள்ளது. வெங்கலத் தகட்டினால் சுற்றியும் மூடப்பட்டிருக்கும் வாயில் பானகம் என்னும் வெல்லம் கரைத்த நீர் விடப்படும் போது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் "மடக்... மடக்..." என பருகும் சத்தம் கேட்கும். சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இதுவே தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சென்னை - விஜயவாடா

சென்னை - விஜயவாடா

PC : Vin09

சந்ரகட்சி ஜங்சன் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் எக்ஸ்பிரஸ், கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா, மங்களகிரிக்கு இயக்கப்படுகின்றன. விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் மங்களகிரி மலைக்கு உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

PC : Wikipedia

விஜயவாடாவைச் சுற்றிலும் விஜயேஸ்வர கோவில், மொகலாராஜபுரம் குகைகள், சுப்ரமணிய சாமி கோவில், சிபார் டிஸ்னி லேண்ட், கனக துர்கா கோவில், உன்டவலி குகைகள் என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இப்பகுதிகள் விஜயவாடா நோக்கிய உங்களது பயணத்தை முழுமைப் பெறச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்காது.

விஜயேஸ்வர கோவில்

விஜயேஸ்வர கோவில்

PC : Srikar Kashyap

விஜயேஸ்வரர் கோவில் விஜயவாடாவில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்திரகீலாத்ரி மலையின் மீது அமைந்துள்ள மிக அற்புதமான சிற்பக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் கோவிலாகும். இதனைக் காண ஆண்டுதோரும் சுற்றுலாப் பயணிகளும், வரலாற்று ஆய்வாலர்களும் வந்த வண்ணமே இருப்பர். ஆன்மீகத்தையும் கடந்து ஆச்சரியமிக்க கல்வெட்டுக்களை காண இங்கு பயணம் செய்ய வேண்டும்.

மொகலாராஜபுரம் குகைக் கோவில்

மொகலாராஜபுரம் குகைக் கோவில்

PC : Kalli navya

புராதான தோற்றத்துடன் வியக்கவைக்கும் சிற்ப வடிவங்களைக் கொண்டது மொகலாராஜபுரம் குகைக் கோவில். தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள், சிற்பங்கள் பண்டைய நாகரீகத்தை வெளிப்படுத்தும். மேலும், இந்தக் குகையில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் ஆன்மீகத் தலமாகவும் இது கருதப்படுகிறது.

சுப்ரமணிய சாமி கோவில்

சுப்ரமணிய சாமி கோவில்

PC : Krishna Chaitanya Velaga

விஜயவாடாவில் இருந்து சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களில் ஒன்று சுப்ரமணிய சாமி கோவில். இது கிருஷ்ணா நதியை நோக்கியவாறு வீற்றிருக்கும் இந்திரகீலாத்ரி மலையில் உள்ளது.

சிபார் டிஸ்னி லேண்ட்

சிபார் டிஸ்னி லேண்ட்

PC : Tuxyso

உங்களது இந்த பயணத்தை வெறும் ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி சிறந்த விடுமுறைகால பொழுதுபோக்கு பயணமாக மாற்ற விரும்பினால் தவறாமல் சிபார் டிஸ்னி லேண்ட்-க்கு போய்ட்டு வாங்க. விஜயவாடாவின் மையத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த நவீன பொழுதுபோக்கு பூங்கா குடும்பத்தினருடன் இன்பமாக கழிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். குறிப்பா, உங்களுடைய குழந்தைகளை மேலும் உற்சாகமடையச் செய்யும் இந்த சிபார் டிஸ்னி லேண்ட்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X