Search
  • Follow NativePlanet
Share
» »குஜராத் பக்கத்துல இப்படியொரு வரலாற்றுப் பூமியா ?

குஜராத் பக்கத்துல இப்படியொரு வரலாற்றுப் பூமியா ?

குஜராத் மாநிலத்திற்கு உட்பட்ட அகமதாபாத், உதய்பூர், துவாரகை, கட்ச், பதான் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல பழமையான கட்டிடங்களில் பல சிதிலமடைந்த நிலையிலும், சிலவை தனது பொழிவை இழக்காமலும்

Saad Akhtar

குஜராத் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது மகாத்மா, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட நம் தேசத் தலைவர்கள் பிறந்த ஊர். இந்துக்களின் ராஜியமும், வன்முறைகளும் நிறைந்த பகுதி. சோமநாதபுரம், தரங்கா, கிர்நார் மலை போன்ற ஆன்மீகத் தலங்களும், லோத்தல் போன்ற தொல்லியற் களங்களும் உள்ள மாநிலம் என்பது மட்டுமே. இதைத் தவிர இன்னும் ஏராளமான கவணிக்கப்படவேண்டிய பகுதிகள் குஜராத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நகரத்திற்கும், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலத்திற்கும் தான் இன்று நாம் பயணிக்கப் போகிறோம்.

பழமை நகரம்

பழமை நகரம்

Suman Wadhwa

இந்தியாவிலேயே பழமைவாய்ந்த குடியிருப்புகளும், திருத்தலங்களும் சற்று அதிகமாக காணப்படும் பகுதி குஜராத். இந்த மாநிலத்திற்கு உட்பட்ட அகமதாபாத், உதய்பூர், துவாரகை, கட்ச், பதான் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல பழமையான கட்டிடங்களில் பல சிதிலமடைந்த நிலையிலும், சிலவை தனது பொழிவை இழக்காமலும் காட்சியளிக்கின்றன.

குஜராத்தின் தலைநகரம் ?

குஜராத்தின் தலைநகரம் ?

Bracknell

குஜராத் மாநிலத்தில் பாழடைந்த நிலையில் காணப்படும் பழமையான நகரம் சம்பனேர். அகமதாபாத்தில் இருந்து 146 கிலோ மீட்டர் தூரத்திலும், வதோதராவில் இருந்து சுமார் 49 கிலோ மீட்டர் தொலைவிலும் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் அமைந்துள்ள இது ஒரு காலத்தில் குஜராத்தில் தலைநகரமாக செயல்பட்ட மாபெரும் நகரமாகும்.

வரலாறு

வரலாறு

Phso2

சவ்தா வம்சத்தின் முக்கியமான அரசராக இருந்த வனராஜ் சவ்தா என்பவரால் 8-ஆம் நூற்றாண்டில் சம்பனேர் நகரம் நிறுவப்பட்டிருக்கிறது. 15-ஆம் நூற்றாண்டில் சம்பநேர் நகருக்கு அருகிலிருக்கும் பவகத் நகரை கஹிசி சவுஹான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்துவந்திருக்கின்றனர். 1482-ஆம் ஆண்டு சம்பனேர் நகரை கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து குஜராத்தின் சுல்தானான மஹ்முத் பேகதா வெற்றிபெற்று இந்த நகரத்தை கைப்பற்றியுள்ளார்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

Farrukh Beg

இந்த வெற்றிக்குப்பின் மஹ்முத் பேகதா, சம்பனேர் நகரை முஹமெதாபாத் என்று பெயர் மாற்றி, 23 வருடங்கள் அந்நகரில் தங்கி சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார். பின்னர் காலப்போக்கில் இங்கு வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிடவே சம்பனேர் நகரம் பாழடைந்து போயிருக்கிறது.

ஜமா மசூதி

ஜமா மசூதி

Bernard Gagnon

சம்பனேர் நகரம் தற்போது வரை கவனிக்கப்பட காரணமாக இருப்பது சுல்தான் பேகதாவால் கட்டமைக்கப்பட்ட ஜமா மசூதி தான். குஜராத்தில் இருக்கும் மிகச்சிறந்த வரலாற்றுக் கட்டிடங்களில் ஒன்றான இந்த மசூதியில் முப்பதடி உயரமுள்ள இரண்டு மிகப்பெரிய தூண்கள், 172 தூண்களுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

அருகில் என்னவெல்லாம் உள்ளது ?

அருகில் என்னவெல்லாம் உள்ளது ?

Samadolfo

குஜராத்தில் இந்து சமய மக்களின் எண்ணிக்கை 80 சதவிகிதத்திற்கு மேல் காணப்பட்டாலும், வதோதரா முதல் சம்பனேர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் இசுலாமிய மசூதிகளே அதிகளவில் காணப்படுகின்றன. இதில், சகர் கான் தர்கா, நஜினா மஸ்ஜித், கேவ்டா மஸ்ஜித், கமனி மஸ்ஜித், இட்டேரி மஸ்ஜித் என பல தொன்மைமிக்க மசூதிகள் வரலாற்றுச் சுவடுகள் மிக்கவையாகும். மேலும், தபா துங்ரி, சிந்தவி மாதாஜி கோவில், தப்லவாவ் அனுமான் கோவில், பதர் காளி மந்திர், சாட் கமன் உள்ளிட்ட கட்டிடக் கலைநயமிக்க கோவில்களும் உள்ளது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

சென்னையில் இருந்து வதோதரா செல்ல நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்- ஜோத்பூர் வார ரயில், சென்ட்ரல் - அகமதாபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன. மேலும், சென்னையில் இருந்து குறைந்த கட்டணத்தில் வதோதரா செல்ல விமான சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X