Search
  • Follow NativePlanet
Share
» »ஆடி வெள்ளி: சூரிய தோஷம் போக்கும் குற்றம் பொறுத்த நாதர்!

ஆடி வெள்ளி: சூரிய தோஷம் போக்கும் குற்றம் பொறுத்த நாதர்!

பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சூரிய தோஷத்தில் இருந்து விடுபட வரும் ஆடி வெள்ளியில் எந்த தலத்தில் பரிகாரம் செய்ய வேண்டும் என தெரியுமா ?

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்ன இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாக கருதப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

இன்னும் திருமணம் ஆகலையா ? உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க!இன்னும் திருமணம் ஆகலையா ? உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க!

சூரியனும் சுக்கிரனும் நெருங்கி நிற்கையில் இருதரப்பு யோகமும், இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது. இன்னும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சூரிய தோஷத்தில் இருந்து விடுபட வரும் ஆடி வெள்ளியில் எந்த தலத்தில் பரிகாரம் செய்ய வேண்டும் என தெரியுமா ?

சூரிய சுக்கிர இடைவெளி

சூரிய சுக்கிர இடைவெளி


ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சூரியனும் நெருங்கிய பாகையில் நின்றுவிட்டால் அது பெண்ணிற்கு இருதார யோகத்தை தந்துவிடுகிறது. அதே நேரத்தில் ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் குறிப்பிட்ட இடைவெளிக்கு மேல் சென்று இருவருக்கும் இடையில் ஒரு வீடு இடைவெளி அமைந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் அமைவது என்பது காணல் நீராகிவிடுகிறது. இத்தகைய சூழலில் நீங்கள் தவித்துக் கொண்டிருந்தால் இந்த ஆடி வெள்ளியன்று குற்றம் பொறுத்தநாதரை வழிபடுவது சிறந்தது.

Ssriram mt

குற்றம் பொறுத்த நாதர்

குற்றம் பொறுத்த நாதர்


நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிரு பகுதியில் அருள்பாலிக்கிறார் குற்றம்பொறுத்தநாதர். நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால், ஜெயங்கொண்டம் அல்லது கும்பகோணம் வழியாக 163 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் தலைஞாயிறு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அடைய முடியும்.

தல சிறப்பு

தல சிறப்பு


சிவனின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 27வது தலமாகும். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் இத்தல இறைவள் அனுமனால் பூஜிக்கப்பட்டவர். அனுமனுக்கு ஏற்பட்டிருந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள தலைஞாயிறு தலத்தில் சிவனை வேண்டி தவமிருக்க வேண்டும் என ராமர் அறிவுருத்தினார். அதன்படியே அனுமனும் தவமிருக்க தோஷம் நீங்கியது. சிவனின் கருணையால் நெகிழ்ந்த அனுமன் தன் பெயரால் ஒரு லிங்கம் பிரதிஸ்ட்டை செய்து வழிபாடு நடத்தினார். இதனாலேயே இத்தலம் இன்றும் திருக்குரக்கா என்று அழைக்கப்படுகிறது.

Urban Kalbermatter

கோவில் அமைப்பு

கோவில் அமைப்பு


குற்றம் பொறுத்த நாதர் கோவிலில் மூலவர் குற்றம் பொறுத்த நாதர் கிழக்கு நோக்கியும், அம்மையார் கோல்வளைநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மூலவர் சன்தியைச் சுற்றிலும் விநாயகர், துர்க்கை அம்மன், லிங்கோத்பவர், பிரம்மா காசியளிக்கின்றனர். சீர்காழியில் இருப்பது போலவே சட்டைநாதர் உயர்ந்த சன்னதியில் உள்ளார். இவரை வழிபட மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டைநாதரை வழிபட வேண்டும்.

Nsmohan

வழிபாடு

வழிபாடு

சூரியன் தனக்கு ஏற்பட்டிருந்த சாபத்தில் இருந்து விடுபட பல தலங்களில் சிவனை வேண்டி வழிபட்டார். அவ்வாறு சூரியன் வழிபட்ட தலங்கள் அனைத்தும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகிறது. அந்த வகையில் திருஞாயிறு தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக திகழ்கிறது. ஜாதக ரீதியாக சூரிய தோஷம் உள்ளவர்கள் ஆடி மாதத்தில் வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் இத்தலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கி பயணடையலாம்.

Shailesh.patil

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


இத்தலத்தில் வேண்டி பரிகாரம் பெற்றவர்கள் இங்கே அருள்பாலிக்கும் மூலவர் மற்றும் கோல்வளை நாயகி அம்மையாருக்கு புது ஆடைகள் சாற்றியும், இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Muthukumaran pk

தலவரலாறு

தலவரலாறு


ஒருமுறை இந்திரன் புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்த போது வழியில் விமானம் தடைபட்டு நின்றது. அப்போது கீழே சிவதலம் இருப்பதை உணர்ந்த இந்திரன் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தார். தடைகளும் நீங்கி விமானம் பறக்கத் தொடங்கியது. இதன்மூலம் லிங்கத்தின் சிறப்பை உணர்ந்த இந்திரன் லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்று தோல்வியுற்றான். இதை அறிந்த ராவணன் இத்தலத்தில் சிவபெருமானின் திருவடியில் விழுந்து தன் மகனின் குற்றத்தை மன்னிக்குமாறு வேண்டினார். சிவபெருமானும் அதை மன்னித்தால். இதனால் இத்தல இறைவன் குற்றம் பொறுத்த நாதர் என பெயர்பெற்றது.

Nelliwinne

நடை திறப்பு

நடை திறப்பு


அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

பா.ஜம்புலிங்கம்

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் நாகப்பட்டினம் செல்ல பேருந்து வசதிகள் எளிய முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து 52 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணத்திலிருந்தும், நாகப்பட்டினத்திற்கு 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தஞ்சாவூரிலிருந்தும், நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X