Search
  • Follow NativePlanet
Share
» »மீண்டும் வந்த கிளி... கண்ணீர் வடித்த அம்மன்... எங்கே தெரியுமா ?

மீண்டும் வந்த கிளி... கண்ணீர் வடித்த அம்மன்... எங்கே தெரியுமா ?

நம்ம ஊருல என்னதான் விதவிதமான கோவில்களும், சாமிகளும் இருந்தாலும் பெரும்பாலம் நாம் நாடிச் செல்வது அம்மன் கோவிலையே. ஆதி சக்தி வாய்ந்தவளாகவும், அகிலம் ஆள்பவலாகவும் அம்மனே போற்றப்படுகிறால்.

PC : Peenumx

நம்ம ஊருல என்னதான் விதவிதமான கோவில்களும், சாமிகளும் இருந்தாலும் பெரும்பாலம் நாம் நாடிச் செல்வது அம்மன் கோவிலையே. ஆதி சக்தி வாய்ந்தவளாகவும், அகிலம் ஆள்பவலாகவும் அம்மனே போற்றப்படுகிறது. அம்பாள், உலகநாயகி, காமாட்சி, அகிலாண்டேஸ்வரி, காலபைரவி, சம்பூர்ணதேவி, சரஸ்வதி தேவி, துர்க்கை, பத்ரகாளி, மீனாட்சி என இன்னும் பல அம்மன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு சிறப்பு

ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு சிறப்பு

PC : Saba rathnam

இத்தெய்வங்கள் அனைத்திற்கும் பெரும்பாலும் உருவ வழிபாட்டு நடக்கிறது. இதில், பல ஆலயங்களில் விசித்திரமான சில சம்பவங்களும் அவ்வப் போது நடைபெறுவது நாம் அறிந்ததே. பால் குடிக்கும் அம்மன், வியர்க்கும் அம்மன், கண் சிமிட்டும் அம்மன் என அன்றாடம் செய்திகளும், ஊர் மக்களும் பேசக் கேட்டிருப்போம். அப்படி சிறப்புமிக்க அம்மனைப் பற்றியும், அந்தக் கோவில் எங்கே உள்ளது ?, எப்படிச் செல்வது உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள வாங்க போகலாம்.

கண்ணீர் வடிக்கும் அம்மன்

கண்ணீர் வடிக்கும் அம்மன்

PC : Alain6963

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கோவிலின் பேச்சியம்மன் சிலையில் சில தினங்களுக்கு முன்பு எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று அம்மனின் திருமுகத்தை பார்த்தவாறே அமர்ந்து கொண்டிருக்கிறது. அம்மனும் அக்கிளியை பார்ப்பதைப் போல காட்சியளிப்பதும், கண்களில் கண்ணீர் வடிவதும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தினரிடையே வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே பேச்சியம்மனின் கிளி சில வருடங்களுக்கு முன்பு எங்கேயோ சென்றுவிட்டதாகவும், தற்போது மீண்டும் அது வந்துவிட்டதால் மகிழ்ச்சிப் பெருக்கில் அம்மன் கண்ணீர் விட்டு அழுகிறார் எனவும் ஊர் பெரியவர்கள் கூறிவருகின்றனர்.

எங்கே இருக்கு தெரியுமா ?

எங்கே இருக்கு தெரியுமா ?

PC : Saba rathnam

மலைகளின் அடிவாரத்தில் குற்றால அருவி மற்றும் தென்காசிக்கு அருகில் உள்ளது கடையநல்லூர். இங்கே கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 100 ஆண்டுகள் பழமையான குறுக்கிட்டான் கருப்பசாமி கோவில் வளாகத்தில் தான் பேச்சியம்மனுக்கு என தனி சன்னதியும் உள்ளது. சங்கரன் கோவிலில் இருந்து சிந்தாமணி வழியாகவும், ஆவுடையாபுரம் வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளன.

சென்னை - கடையநல்லூர்

சென்னை - கடையநல்லூர்

Map

சென்னையில் இருந்து 605 கிலோ மீட்டரும், மதுரையில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது பேச்சியம்மன் ஆலயம். சென்னையில் இருந்து இங்கு வரத் திட்டமிடுவோர் சென்னை- திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழியாக ஸ்ரீரங்கம், மதுரை, ராஜபாளையம் என பயணிக்க வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை அந்தோதையா, சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் என சென்னையில் இருந்து கடையநல்லூருக்கு ரயல் சேவைகளும் உள்ளது.

அருகில் என்னவெல்லாம் இருக்கு ?

அருகில் என்னவெல்லாம் இருக்கு ?

Map

கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே தனித்து சிறந்த ஆன்மீகத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில், மாவடிக்கால் பத்திரகாளியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்,
முத்தாரம்மன் கோயில், முப்புடாதியம்மன் கோவில், பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோவில் உள்ளிட்டவை இப்பகுதியில் மிகவும் பிரசிபெற்ற கோவில்களாகும்.

இதேப்போன்ற சிறப்புடைய கோவில்

இதேப்போன்ற சிறப்புடைய கோவில்

PC : Bernard Gagnon

தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் அம்மன் கோவில்கல் பல்வேறு தனிச்சிறப்புகளைப் பெற்றுள்ளன. அவற்றுள் மதுரை பேச்சியம்மன், கடலூர் புற்றுமாரியம்மன், திருநெல்வேலி பேராத்துச் செல்வி, நாமக்கல் பிடாரி செல்லாண்டியம்மன் உள்ளிட்டவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிதும் சக்தி வாய்ந்த கோவில்களாகவும், வேண்டியதை அருளும் வள்ளமை கொண்டவையாகவும் போற்றப்படுகிறது.

மதுரை பேச்சியம்மன்

மதுரை பேச்சியம்மன்

மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவில் கோட்டையூர்- வடக்கம்பட்டி சாலையில் உள்ளது பேச்சியம்மன் கோவில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டார் குறைபாடுகள் நீங்கி பேச்சுத் திறமை மேலோங்கும் என்பது தொன்நம்பிக்கை. மேலும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் பேச்சியம்மனை வணங்கி அர்ச்சனை செய்வதன் மூலம் தோஷம் நீங்கி பலன் பெருகும்.

கடலூர் புற்றுமாரியம்மன்

கடலூர் புற்றுமாரியம்மன்

PC : kannabiransundaram

சென்னையில் இருந்து மாமல்லபுரம், பாண்டிச்சேரி வழியாக சுமுர் 280 கிலோ மீட்டர் பயணித்தால் கடலூர் மாவட்டம், கொத்தங்குடியை அடையலாம். இங்குள்ள புற்றுமாரியம்மன் கோவில் கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் உள்ளிட்டவற்றை நீக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும். சுமார், 15 அடி உயரத்தில் புற்று வடிவில் அருள்பாலிக்கும் அம்மனை வணங்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணமே இருப்பர்.

திருநெல்வேலி பேராத்துச் செல்வி

திருநெல்வேலி பேராத்துச் செல்வி

PC : Ramamanivannan

மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ளது பேராத்துச் செல்வி ஆலயம். இந்தக் கோவிலில் உள்ள அம்மனின் திருஉருவம் ஆற்றில் கிடைத்ததாகவும், ஏழை பக்தர் ஒருவர் கோவில்கட்டி வழிபட்டதாகவும் கதை உள்ளது. இந்தக் கோவிலுக்கு எதிரே சுடலைமாடன், பேச்சியம்மன் சன்னதி உள்ளது.

நாமக்கல் பிடாரி செல்லாண்டியம்மன்

நாமக்கல் பிடாரி செல்லாண்டியம்மன்

PC : Jagadeeswarann99

மதுரையில் இருந்து 164 கிலோ மீட்டர் தூரத்திலும், நாமக்கல் மத்தியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில். இங்கு மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி உள்ளிட்டோருக்கும் தனித் தனியே சன்னதிகள் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X