Search
  • Follow NativePlanet
Share
» »கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் லட்சுமி சக்கரம் கொண்ட விநாயகர் - எந்த ராசிக்கு?

கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் லட்சுமி சக்கரம் கொண்ட விநாயகர் - எந்த ராசிக்கு?

By Udhaya

விநாயகரை கவனித்ததுண்டா அவரது நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். தும்பிக்கை அவரின் வலப்புறம் சுழிந்து காட்சியளிக்கும். வலது முன் கையில் ஒரு தந்தத்தையும், பின் கையில் அங்குசமும், இடது முன் கையில் பலாப்பழமும், பின் கையில பாசக்கயிறும் கொண்டு இருப்பதை நாம் கவனித்திருக்கிறோம் அல்லவா. ஆனால் லட்சுமியின் அம்சமான இந்த ஒரு விசயத்தை கவனித்திருக்கிறோமா... அதுதான் தும்பிக்கை. தும்பிக்கையில் சக்கரம் ஒன்றை தாங்கி இருக்கிறார் விநாயகர் எனும் பிள்ளையார். இவர் இல்லாத கோயில்களே இல்லை எனும் அளவுக்கு நிறைய பெரிய கோயில்களிலும் முதற்கடவுளாய் இவரைத்தான் வணங்கிவிட்டு பின் உள் செல்வார்கள். அப்படிப்பட்ட விநாயகரை வணங்கினால், கோடி கோடியாய் கொட்டும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆமா.. எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கோயில்களுக்கு சென்றால் இப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள் எந்தெந்த கோயில்களுக்கு எப்படி எல்லாம் பயணிக்க வேண்டும், யார் யார் செல்லவேண்டும், அருகிலுள்ள சுற்றுலா தளங்கள் எவை என அனைத்தையும் இந்த பதிவில் காண்போம்.

அருள்மிகு பால விநாயகர் கோயில்

அருள்மிகு பால விநாயகர் கோயில்

சென்னை வடபழநியில் அமைந்துள்ள இந்த கோயிலின் மூலவர் விநாயகர் ஆவார். இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி, சூரசம்ஹாரம், நவராத்திரி விழாக்களோடு ஜனவரியில் ஆனமுகன் எழுந்தருளிய தினம் என்று ஜனவரி 26ம் நாளை கொண்டாடுகின்றனர்.

தலச் சிறப்பு

இந்த கோயிலின் மூலவரான பிள்ளையார் அரசமரத்திலிருந்து சுயம்பு வாக தோன்றியவர் என்று நம்பப்படுகிறது. இதுவே இந்த தளத்தின் சிறப்பாகும்.


நடை திறப்பு

இந்த கோயிலின் நடை, காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு, பின் மதியம் 11மணிக்கு அடைக்கப்படும். பின் மாலை 5 முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும்.

மற்ற தெய்வங்கள்

இங்கு பால விநாயகரோடு அரச மரத்தில் உதித்த 21 விநாயகர்களும் இருக்கின்றனராம். பின் துர்க்கை, லட்சுமி நாராயணன், அனுமன் என நிறைய தெய்வங்கள் இருக்கின்றன. விநாயகரின் தம்பியான முருகர் தன் இரு மனைவி மார்களுடன் காட்சி தருகிறார். அவரின் இருபுறமும் கண்ணாடி பதியப்பட்டு பல பிம்பங்களில் முருகன் உருவம் தெரிகிறது.

எப்படி செல்வது

ஆற்காடு சாலையில் போரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோயில். கிண்டியிலிருந்து உதயம் தியேட்டர் தாண்டி செல்லும் வழியில் கண்ணம்மள் தெருவில் அமைந்துள்ளது.

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் நல்ல செய்தி உடனே வரும். கூடவே பணமழை கொட்டும். உழைப்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். ஏதேனும் தோஷம் இருந்தால் இந்த கோயிலுக்கு மூன்று முறை சென்று வர நீங்கும். இவ்வளவு தூரம் வரமுடியாதவர்கள் உங்கள் ஊரின் அருகேயுள்ள கோயில்களில் ஏதேனும் பால விநாயகர் சன்னதிக்கு சென்று வழிபடுங்கள்.

Rosemania

பிரசன்ன விநாயகர் ஆலயம்

பிரசன்ன விநாயகர் ஆலயம்

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருக்கும் இந்த கோயில் மேட்டு விநாயகர் கோயில் அல்லது பிரசன்ன விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருகார்த்திகை தீபம், தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என பல திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தலச் சிறப்பு

திப்பு சுல்தானால் வணங்கப்பட்ட ஆதி விநாயகர் இவராவார். காசி விஸ்வநாதருக்கு பின் புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இந்த கோயில் சைவ வைணவ இணைப்பு தளமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தளமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவே இந்த தளத்தின் சிறப்பாகும்.

நடை திறப்பு

இந்த கோயிலின் நடை, காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பின் மதியம் 12 மணிக்கு அடைக்கப்படும். பின் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும்.

மற்ற தெய்வங்கள்

இங்கு விநாயகர் ஆறு அடி உயரம் கொண்ட உருவமாக இருக்கிறார். எலியின் மீது பிரம்மாண்டமாக இருக்கிறார். இதன் கூரையில் 12 ராசிக்குரிய குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

காசிவிஸ்வநாதரும், காசி விசாலாட்சி, முருகப் பெருமான், வள்ளி தெய்வயானை, பிரம்மனும், ஆஞ்சநேயரும் என நிறைய தெய்வங்கள் காணப்படுகின்றன.

எப்படி செல்வது

பொள்ளாச்சியிலிருந்து பழனி செல்லும் சாலையில் அரை மணி நேரத்தில் சென்றடையும் தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். இது பொள்ளாச்சியிலிருந்து 28கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே நல்ல திசைதான். எனவே அதிக உழைப்பும், அதிக வரவும் உங்களுக்கு வந்துகொண்டேதான் இருக்கும். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், இருக்கும் சிற்சில தடைகள் கூட நீங்கி நல்ல வழி பிறக்கும்.

Vijay Bandar

 108 நன்மை தரும் விநாயகர் கோயில்

108 நன்மை தரும் விநாயகர் கோயில்

அருள்மிகு நூற்றியெட்டு நன்மை தரும் விநாயகர் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக 108 நன்மை தரும் விநாயகரும், உற்சவராக பஞ்சலோக விநாயகரும் காட்சி தருகிறார்கள். விநாயகருக்கு கொண்டாடப்படும் எல்லா விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தலச் சிறப்பு

இந்த கோயிலின் சிவபெருமான் மீது சித்திரை 1 ம் தேதி அன்று குறிப்பிட்ட நேரம் சூரிய ஒளி விழுகிறது. இதுவே தலச் சிறப்பு.

நடை திறப்பு

இந்த கோயிலின் நடை, காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு, பின் மதியம் 12 மணிக்கு அடைக்கப்படும். பின் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும்.

மற்ற தெய்வங்கள்

இந்த கோயிலில் விநாயகர், பஞ்ச லோக விநாயகராகவும், 108 நன்மைகள் தரும் விநாயகராகவும் உள்ளார். அண்ணாமலை, உண்ணாமலை அம்மன், சீனிவாசபெருமாள், சொர்ன பைரவர், மகாலட்சும், தேவி கருமாரி, அனுமன், துர்க்க, முருகன் என நிறைய தெய்வங்கள் உள்ளன.

எப்படி செல்வது

பொள்ளாச்சியிலிருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது திண்டுக்கல். இதன் அருகில் இருக்கும் கோபால சமுத்திரக்கரை எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த கோயில்.

108 நன்மைகள் செய்யும் இந்த விநாயகரை 108 முறை சென்று வணங்கினால் நல்ல வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் 3 முறை சுற்றி வர முழுப்பலனையும் அடையலாம் என்றும் கூறப்படுகிறது.

Jonas Buchholz

வெற்றி விநாயகர் கோயில்

வெற்றி விநாயகர் கோயில்

திருப்பரங்குன்றம் வெற்றி விநாயகர் கோயில் மதுரை அருகே அமைந்துள்ளது. வழக்கமாக எல்லா விநாயகர் கோயில்களிலும் விநாயகர் சம்பந்தமான எல்லா பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படும். அதே போல் இந்த கோயிலில் ஆனி உத்திரம், வேலாயுத பகவானுக்கு எலுமிச்சை பழ விளக்கு, நவராத்திரி பண்டிகை என எல்லா கடவுளுக்குரிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

தலச் சிறப்பு

எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக இங்கு ரெட்டை மருத மரங்கள் இருக்கின்றன. இது இந்த கோயிலின் தனித் தன்மை சிறப்பாக பார்க்கப்படுகிறது.

நடை திறப்பு

இந்த கோயிலின் நடை, காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பின் மதியம் 10 மணிக்கு அடைக்கப்படும். பின் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும்.

மற்ற தெய்வங்கள்

இந்த கோயிலில் விநாயகர்,தட்சினாமூர்த்தி உட்பட நிறைய தெய்வங்கள் உள்ளன.

எப்படி செல்வது

மதுரையிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். இங்குதான் அமைந்துள்ளது அந்த வெற்றி விநாயகர் கோயில்.

கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பாக தொழில் செய்ய, நல்ல கல்வி பெற, கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த கோயிலுக்கு செல்லுங்கள். விடுபட்ட ராசிக்காரர்கள் மிக தைரியசாலிகள். துன்பம் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடக் கூடியவர்கள். எது வந்தாலும் முகத்துக்கு நேராக எதிர்கொள்ளுங்கள். வெற்றி நமதே.

Photo Dharma

Read more about: travel trip temples chennai tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X