Search
  • Follow NativePlanet
Share
» »சிவபெருமான் தஞ்சமடைந்த இடத்தில் தோன்றிய விபூதி அருவி...

சிவபெருமான் தஞ்சமடைந்த இடத்தில் தோன்றிய விபூதி அருவி...

பஸ்மாசுரன் என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்தான் இந்த யானா என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

கர்நாடகாவில் அமைந்துள்ள யானா வானுயர்ந்த பயமுருத்தும் பாறைகளுக்காகவே பெயர்பெற்றது. தற்சமயம் இயற்கை ரசிகர்களாலும், சாகசப் பிரியர்களும் அதிகம் தேர்வு செய்யப்படும் இடமாக உள்ளது. ஆனால், பஸ்மாசுரன் என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்தான் இந்த யானா என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

அஞ்சியோடிய சிவன்

அஞ்சியோடிய சிவன்


ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடு வேண்டும் என்ற வரத்தினை சிவபெருமானிடம் இருந்து பெற்றான். ஆனால், அந்த அரக்கன் பெற்ற வரத்தை சிவனிடயே சோதிக்க எண்ணி அவரை துரத்திக்கொண்டு ஓட, பஸ்மாசுரனிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் இந்த யானாவில் உள்ள பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று.

Ramesh Meda

விபூதி அருவி

விபூதி அருவி


யானாவுக்கு வரும் பயணிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம் விபூதி அருவி. இதை சூழ்ந்து காணப்படும் பசுமையான காடுகளும், மூங்கில் தோட்டங்களும், காட்டுப் பூக்களும் இதனுடைய அழகுக்கு அழகு சேர்ப்பதாய் உள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களின் காரணமாகவே இதற்கு விபூதி அருவி என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

Shash89

பிரம்மிக்க வைக்கும் வழித்தடம்

பிரம்மிக்க வைக்கும் வழித்தடம்


விபூதி அருவிக்கு செல்லும் வழி குறுகியதாக காணப்படுவதால் பயணிகள் நடந்து தான் அருவியை அடைய முடியும். அப்படி நீங்கள் நடந்து செல்கையில், பாதையின் வலப் புறத்தில் இருக்கும் விவசாய நிலங்களும், இடப்புறம் காணப்படும் பசுமையான காடுகளும் பயணத்தினால் ஏற்படும் தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

Vinodtiwari2608

பைரவேஸ்வரா கோவில்

பைரவேஸ்வரா கோவில்


யானாவில் அமைந்துள்ள பைரவேஸ்வரா கோவில் தவறவிடக் கூடாத தலமாக உள்ளது. குகைக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படும் பைரவேஸ்வரா கோவில். இது பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

Sharada Prasad CS

தான்தோன்றி லிங்கம்

தான்தோன்றி லிங்கம்


பைரவேஸ்வரா கோவிலில் உள்ள தான்தோன்றி லிங்கம் வேண்டும் வரங்களை கொடுக்க வல்லமை கொண்டது என்பது தொன் நம்பிக்கை. இந்த லிங்கத்தின் மீது பாறைகளில் இருந்து வழியும் நீர் இடைவிடாது சொட்டிக் கொண்டிருப்பதால் இதற்கு கங்கோத் பவா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அதோடு துர்கா தேவியின் வெங்கல சிலை ஒன்றும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Paneer06

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கர்நாடகாவில் அமைந்துள்ள யானாவிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஹூப்ளி. சென்னையில் இருந்து ஹூப்ளி விரைவு ரயில், வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன. பெங்களூரை அடைந்தும் யானாவிற்குச் செல்லலாம்.

Goudar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X