Search
  • Follow NativePlanet
Share
» »சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஓட்டளித்த ஊர் எது தெரியுமா?

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஓட்டளித்த ஊர் எது தெரியுமா?

By Naveen

இமயமலையின் சாரலில் அமைந்திருக்கும் ஹிமாச்சல பிரதேச பல அரிய, பேரழகு கொண்ட, நவநாகரீகத்தின் பற்களினால் பாதிக்கப்படாத அற்புதமான இடங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது.

ஆப்பிள் தோட்டங்களும், பழமையான கோயில்களும், பிரமிப்பில் ஆழ்த்தும் இயற்கை காட்சிகளும் நிறைந்திருக்கும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அதிகம் அறியப்படாத ஒரு அழகிய ஊர் தான் கல்பா ஆகும்.

தனது இயற்கை அழகுக்காக மட்டுமில்லாமல் வேறொரு வரலாற்று சிறப்புமிக்க காரணத்திற்காகவும் புகழ்பெற்ற கல்பாவை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கல்பா:

கல்பா:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கின்னார் மாவட்டத்தில் சட்லஜ் நதி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஒரு சிறிய அழகிய நகரம் தான் கல்பா ஆகும்.

Sumita Roy Dutta

கல்பா:

கல்பா:

இந்த ஊரின் வரலாற்று சிறப்புகளில் ஒன்று இங்கே தான் 1951ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலின் முதல் வாக்கு பதிவு நடந்த இடமாகும்.

இந்தியாவின் முதல் ஓட்டை அளித்தவர் கல்பாவை சேர்ந்த ஷ்யாம் சரண் நேகி என்பவராவார்.

Gili Chupak

கல்பா:

கல்பா:

ஆப்பிள் தோட்டங்கள் நிறைந்திருக்கும் கல்பாவில் ஹிந்து மற்றும் பௌத்த மதம் பரவலாக பின்பற்றப்படுகிறது.

சிறிய நகரமேன்றாலும் இங்கே ஏராளமான ஹிந்து மற்றும் பௌத்த கோயில்கள் இருக்கின்றன.

Manojkhurana

கல்பா:

கல்பா:

கல்பா நகரம் அமைந்திருக்கும் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் சட்லஜ் நதி பாய்ந்தோட, மறுபக்கம் 'சில்கோசா' என்ற ஊசியிலை மரம் நிறைந்த வனப்பகுதியால் சூழப்பட்டிருக்கிறது.

சமீப காலம் வரை பழமையான கோயில்கள் இருக்கும் ஆன்மீக ஸ்தலமாக மட்டுமே கல்பா அறியப்பட்டிருக்கிறது.

Amareshwara Sainadh

கல்பா:

கல்பா:

கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை கூட சுற்றுலாப்பயணிகள் வெகு அரிதாகவே வரும் இடமாக இருந்த கல்பா இப்போது உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டுமில்லாமல் இயற்கையையும், அமைதியையும் விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிகம் வரும் இடமாக மாறியுள்ளது.

Michael Scalet

கல்பா:

கல்பா:

கல்பாவில் சுற்றுலாப்பயணிகள் தங்க ஐந்து இடங்கள் மட்டுமே இருக்கின்றன. கல்பா நகருக்கு வரும் முன்பாக கின்னார் மாவட்டத்தின் தலைநகரான ரேகாங் பியோ என்ற ஊரில் நுழைவு அனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.

சுற்றுலாப்பயணிகள் இங்கிருக்கும் சில தனியார் ரிசார்ட்டுகளில் தங்கிக்கொள்ளலாம்.

Anurupa Chowdhury

கல்பா:

கல்பா:

இமய மலையின் பேரழகை ரசிக்க கல்பா மிகச்சிறந்த இடமாகும். கல்பாவில் இருந்து ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான கைலாஷ் மலையில் சிவபெருமானின் பனிலிங்கம் இருக்கும் பாறை குகையை இங்கிருந்தபடி பார்க்கலாம்.

Sumita Roy Dutta

கல்பா:

கல்பா:

இங்கே தினமும் நிகழும் ஒரு அதிசய நிகழ்வாக சொல்லப்படுவது ஒரு நாளில் சூரியனின் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப கைலாஷ் மலையின் நிறம் மாறுவதை இங்கிருந்து காணலாமாம்.

Goutam1962

கல்பா:

கல்பா:

இதமான சீதோஷன நிலை நிலவும் கோடை காலத்தில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் கல்பாவிற்கு வருகின்றனர். தோட்டங்களில் விளையும் ஆப்பிள்களை சுவைத்தபடியே கல்பாவில் நகர வாழ்கையின் இரைச்சலில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியாக சில நாட்களை கொண்டாடலாம்.

Carlos Adampol Galindo

கல்பா:

கல்பா:

கல்பாவில் உள்ள ஹிந்து கோயிலொன்றின் வேலைப்பாடுகள் நிறைந்த நுழைவு வாயில்!!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X