Search
  • Follow NativePlanet
Share
» »மும்பைக்கு ஏன் இந்த பெயர் வந்ததென்று தெரியுமா?

மும்பைக்கு ஏன் இந்த பெயர் வந்ததென்று தெரியுமா?

By Naveen

மும்பை நவீன இந்தியாவின் முகம். பாலிவுட் சினிமா, உச்ச நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள், நகரம் முழுக்க பரவிக்கிடக்கும் பிரிட்டிஷ் இந்தியாவின் பழமையான கட்டிடங்கள், காற்றுக்கூட புகமுடியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழியும் ரயில்கள் என மும்பை ஒவ்வொரு இந்தியனும் செல்ல நகரம் ஆகும். ஏதேதோ கனவுகளை சுமந்துகொண்டு வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குள் சிறு நம்பிக்கையை விதைக்கும் இந்த கனவு நகரத்துக்கென்று ஒரு சிறிய கதை உண்டு.

மும்பை அமைந்திருக்கும் தீபகற்பத்தில் இருக்கும் ஒரு சிறிய கோயிலில் அந்த கதை ஆரம்பமாகியது. வாருங்கள், அது என்னவென்று தெரிந்துகொள்வோம்.

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

மும்பையின் பூர்வ குடி விவசாயிகளான அகிறிக்களுக்கும், மீனவர்களான கோலிகளுக்கும் குல தெய்வமாய் விளங்கிய மும்பாதேவி அம்மனின் பெயரில் இருந்து தான் 'மும்பை' என்ற சொல் வந்திருக்கிறது.

தெற்கு மும்பையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பத்தில் புலேஷ்வர் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

Magiceye

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

துர்கையின் ரூபமான மகா அம்பா தேவி வீற்றிருக்கும் இக்கோயில் 1675ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இக்கோயில் முதலில் இப்போது பயன்பாட்டில் இல்லாத பழமையான ரயில் நிலையமான போரி பந்தர் அமைந்திருக்கும் இடத்தில் இருந்திருக்கிறது.

18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அக்கோயில் இடிக்கப்பட்டு இப்போதுள்ள புலேஷ்வர் என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

Pablo Ares Gastesi

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

இக்கோயிலை பற்றி சொல்லப்படும் புராணக்கதைப்படி முன்னொரு காலத்தில் 'மும்பாரகன்' என்ற அரக்கன் இப்பகுதியில் வாழ்ந்துவந்த மக்களுக்கு பெருங்கொடுமை இளைத்துவந்திருக்கிறான். அவனது அட்டூழியம் தாங்க முடியாத மக்கள் பிரம்ம தேவரிடம் வேண்டியிருக்கின்றனர்.

Pablo Ares Gastesi

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

பிரம்மதேவரோ மும்பாரகனை வதைக்க எட்டு கைகளை உடைய ரௌத்ரத்தின் ரூபமான காளியை பூமிக்கு அனுப்பியுள்ளார். தன்னுடைய முடிவு உறுதி என்றுணர்ந்த அரக்கன் மும்பாரகன் காளியிடம் என்னுடைய பெயரை தாங்கி நீங்கள் இவ்விடத்தில் கோயில் கொள்ளவேண்டும் என்று வேண்டியிருக்கிறான். அதன்படியே காளி மும்பாதேவியாக இங்கே கோயில் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இங்கே மும்பாதேவி வெள்ளி கிரீடம், தங்க மூக்குத்தி மற்றும் நெக்லஸ் ஆகியவற்றை அணிந்தபடி புலி வானகத்தில் வீற்றிருக்கிறார்.

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

இன்றைய நவீன மும்பையின் ஆன்மீக அடையாளமாக கணபதியும், விநாயகர் சதுர்த்தியும் மாறிவிட்ட நிலையிலும் இன்றும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மும்பாதேவி கோயிலுக்கு தினமும் வருகை தருகின்றனர்.

இக்கோயில் இருக்கும் புலேஷ்வர் பஞ்சு மற்றும் இரும்பு வியாபாரத்தின் மையமாக திகழ்வதால் எப்போதும் பரப்பரபாகவே இயங்கும் ஓரிடமாக இருக்கிறது.

Adam Cohn

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

அடுத்த முறை மும்பை செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் பழமையான இந்த மும்பாதேவி கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்ய மறந்துவிடாதீர்கள்.

சத்ரபதிசிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து வெறும் இரண்டு கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

Magiceye

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் இடம் !!

carol mitchell

மும்பாதேவி கோயில் !!

மும்பாதேவி கோயில் !!

மும்பையை பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்...

24 மணிநேரத்தில் மும்பையில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ?

மும்பைக்கு போயிட்டு இதெல்லாம் செய்யாம வந்துடாதீங்க பாஸ் ...

மும்பையின் முகங்கள் !!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X