Search
  • Follow NativePlanet
Share
» »பழமை புதுமையின் அற்புத கலவை - புதுதில்லி

பழமை புதுமையின் அற்புத கலவை - புதுதில்லி

சரித்திரம் படைத்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். ஒரு சாதாரண மனிதன் இந்திய தலைநகரில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். முன்னேற்றமும், வளர்ச்சியுமே தங்களுக்கு தேவை என தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள் புது தில்லி மக்கள். கி.மூ ஆறாம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை பல்வேறு ராஜ்யங்களின் தலைநகராகவும், சுதந்திர இந்தியாவின் ஆட்சிபீடம் செயல்படும் இடமாகவும் இருக்கும் தில்லியில் வரலாறு பொதிந்த பழமையான கட்டிடங்களும், சுற்றுலாத்தலங்களும் ஏராளமாக இருக்கின்றன. அந்த இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

காதலர் தின சிறப்பு சலுகையாக விமான கட்டணங்களில் ரூ.8000 வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்

 சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

என்னதான் இந்தியர்கள் நவீன அறிவியலுக்கு சவால் விடும் பல கட்டிடங்களை கட்டியிருந்தாலும் 20ஆம் நூற்றாண்டுக்கு பிறகு அப்படிப்பட்ட கோயில்கள் எதுவும் கட்டப்படாமலேயே இருந்தன. அந்தக் குறையை போக்கும் விதமாக, பாரம்பரிய கோயில்களோடு போட்டிபோடக்கூடிய நவீன படைப்பாக சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.

 சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் டெல்லி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்திலும் தலைநகர் டெல்லியில், யமுனா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

 சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வைஷ்ணவ ஞானி சுவாமிநாராயண் அவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலை ஐந்து ஆண்டுகள் மொத்தம் 11,000 கட்டிடக்கலை வல்லுனர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். அக்ஷர்தாம் கோயிலின் சுவரில் 20,000க்கும் மேற்ப்பட்ட இந்து கடவுள்கள் மற்றும் ரிஷிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

மேலும் இதனுள் இரவில் ஒளிவிளக்குகளால் வர்ணஜாலம் நிகழ்த்தப்படும் யக்னபுருஷ் குண்ட் என்ற நீருற்று இருக்கிறது. உலகத்திலேயே மிகப்பெரிய படிக் கிணறு என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது. யோகி ஹர்டே கமல் என்ற தாமரை வடிவிலான தோட்டம் ஒன்றும் இங்கே உள்ளது. இங்கே வானில் இருந்து பார்த்தால் தெரியும்படியான வகையில் மார்டின் லூதர் கிங் & விவேகானந்தரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில்

எண்ணற்ற விசயங்கள் பொதிந்திருக்கும் இந்த சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்கு தில்லிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் 75% மேல் நிச்சயம் சென்று பார்ப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. நீங்களும் டெல்லிக்கு சென்றால் இங்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.

இந்தியா கேட் :

இந்தியா கேட் :

தில்லி என்றதுமே நம் நினைவுக்கு வரும் ஓரிடம் புதுதில்லியின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தியா கேட் தான். முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளுக்காக போரிட்டு மடிந்த 82,000 இந்திய - பிரிட்டிஷ் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னமாகும். சர் எட்வின் லுதின்ஸ் என்பவரால் இந்தியா கேட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா கேட் :

இந்தியா கேட் :

இந்த கட்டிடத்தில் முதலாம் உலகப்போரில் பெர்சியா, மெசப்பட்டோமியா, கிழக்கு ஆப்ரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போரிட்டு இறந்த வீரர்களின் பெயர், எந்த அணியின் சார்பாக போரிட்டார், எங்கே இறந்தார் போன்ற விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தியா கேட் :

இந்தியா கேட் :

பின்னர் 1971 ஆம் நடைபெற்ற பங்களாதேஷ் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 1972ஆம் ஆண்டு இங்கே அமர் ஜவான் ஜோதி நினைவகம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும் இந்திய பிரதமர் இந்த நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செய்கிறார். நமக்காக வீரர்கள் செய்யும் தியாகங்களை நினைத்து பார்க்க தூண்டும் இந்த அமர் ஜவான் ஜோதி.

Photo: Viren Kaul

தாமரை கோயில் :

தாமரை கோயில் :

நவீன இந்திய கட்டிடக்கலை அதியசங்களில் ஒன்றுதான் இந்த தாமரி கோயில். அனைத்து மதங்களும் ஒன்றே, அனைவருக்கும் இறைவன் ஒருவரே என மத வேறுபாடுகளை கடந்து மனிதகுல ஒற்றுமையை வலியுறுத்தும் 'பஹா ஐ' என்ற சித்தாந்ததத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்த தாமரை கோயில்.

தாமரை கோயில் :

தாமரை கோயில் :

பளிங்கு கற்களால் ஆன 27 தாமரை இதழ்களால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள 9 வாசல்களும் இக்கோயிலின் மைய மண்டபத்தை நோக்கி நம்மை இட்டுச்செல்கின்றன.

தாமரை கோயில் :

தாமரை கோயில் :

இந்த மைய மண்டபத்தில் கிரேக்க நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேகமான மார்பில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2500 ஒரே நேரத்தில் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்ய முடியும்.

தாமரை கோயில் :

தாமரை கோயில் :

மேலும் தாமரை கோயிலை சுற்றி மிக அழகானதொரு தோட்டமும், குளங்களும் அமைந்திருக்கின்றன. புதுதில்லியில் இருக்கும் பஹாபூர் என்ற இடத்தில் இக்கோயில் அமைத்திருக்கிறது. தில்லியில் இருந்து பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகள் மூலம் இந்த கோயிலை அடையலாம்.

செங்கோட்டை :

செங்கோட்டை :

ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் பாரத பிரதமர் கொடியேற்றி உரை நிகழ்த்தும் இடம் தில்லியில் சாந்தினி சௌக் பகுதியில் இருக்கும் செங்கோட்டை ஆகும். அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்திய புராதன சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். முகலாய அரசர்களின் இருப்பிடமாக விளங்கிய இக்கோட்டையின் பெரும்பகுதி பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

செங்கோட்டை :

செங்கோட்டை :

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கே வருகின்றனர். மாலை நேரத்தில் முகலாயர்களின் வரலாற்று பெருமைகளை சொல்லும் விதமாக ஒலி-ஒளி காட்சிகள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

செங்கோட்டை :

செங்கோட்டை :

செங்கோட்டையை தாண்டி சாந்தினி சௌக் பகுதியில் தில்லிக்கே உரிய சுவையான உணவுகளை வீதியோர கடைகளில் சுவைத்திடலாம். முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்களை இங்கு நாம் பார்க்க முடியும்.

ஜம்மா மஸ்ஜித் :

ஜம்மா மஸ்ஜித் :

தாஜ் மஹாலை கட்டிய ஷாஹ் ஜகானால் கட்டப்பட்ட மற்றுமொரு மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்று தான் ஜம்மா மஸ்ஜித் மசூதி. 1650ஆம் அடிக்கல் நாட்டப்பட்டு 1656ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் 25,000 பேர் தொழுகை செய்யும் அளவிற்கு மிக பிரமாண்டமான மசூதி இது.

ஜம்மா மஸ்ஜித் :

ஜம்மா மஸ்ஜித் :

இதனுள்ளே மான் தோளில் எழுதப்பட்ட குரானின் முதல் பிரதியின் ஒரு பாகம் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கட்டாயம் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய இடம் இந்த ஜம்மா மஸ்ஜித் ஆகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X