Search
  • Follow NativePlanet
Share
» »அல்வாவுக்கு புகழ்பெற்ற நம்ம திருநெல்வேலி நகரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

அல்வாவுக்கு புகழ்பெற்ற நம்ம திருநெல்வேலி நகரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

அல்வா என்றாலே அடுத்த நொடி நம் ஞாபகத்துக்கு வருவது மண் மணம் மாறாத திருநெல்வேலி நகரம் தான். எங்கு காணினும் நிறைந்திருக்கும் பசுமை, அளவில்லா அன்பு பாராட்டும் மக்கள், அதி சுவையான தாமிரபரணி ஆறு என அற்புதங்கள் நிறைந்திருக்கும் இந்த திருநெல்வேலி நகரத்திற்கு கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும்.

குறிப்பாக இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக திருநெல்வேலி வந்து புகழ்பெற்ற இருட்டுக்கடையில் கிடைக்கும் அதிசுவையான அல்வாவை ருசிக்க வேண்டும். ஆன்மீகமும், அறுசுவையும் நிறைந்திருக்கும் இந்த அல்வா நகரத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 திருநெல்வேலி :

திருநெல்வேலி :

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர்கூடம் என்ற மலையில் உற்பத்தியாகும் வற்றாத நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது நெல்லை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி நகரம்.

இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Prakash

 திருநெல்வேலி :

திருநெல்வேலி :

திருநெல்வேலி நகரமானது தமிழகத்தில் நாகரீகம் தழைத்த பழமையான இடங்களில் ஒன்றாகும். கி.மு 200 ஆம் ஆண்டு வாக்கில் மதுரையை தலைநகரமாக கொண்டு தென் தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இந்நகரம் இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் .

Kannan B

 திருநெல்வேலி :

திருநெல்வேலி :

பின் கி.பி 10ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியின் கீழ் திருநெல்வேலி இருந்துள்ளது. அதன் பின்னர் 13நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியின் கீழும் மதுரை நாயக்கர்கள், விஜயநகர பேரரசர்கள், பாளையக்காரர்கள் போன்றவர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு கடைசியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்நகரம் வந்துள்ளது.

Simply CVR

 திருநெல்வேலி :

திருநெல்வேலி :

1799ஆம் ஆண்டு திருநெல்வேலியை ஆண்ட கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் நடந்த 'பாலிகர்' போரின் முடிவில் பாளையக்காரர்கள் தோல்வியுற்றதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட கர்நாடிக் ஒப்பந்தத்தின் படி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் முழு உரிமையையும் பிரிட்டிஷார் பெற்றனர் என்பது நெல்லையில் நடந்த குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.

 திருநெல்வேலி :

திருநெல்வேலி :

திருநெல்வேலி நகரில் நாம் சுற்றிப்பார்க்கவும் சுவைத்து மகிழவும் ஏராளமான இடங்கள் இருக்கின்றன. இன்னமும் நவீன யுகத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து தன் சுயத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் வெகுசில நகரங்களில் ஒன்றான இந்த திருநெல்வேலியை கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

Kannan B

நெல்லையப்பர் கோயில் :

நெல்லையப்பர் கோயில் :

தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான சிவாலங்களில் ஒன்று தான் திருநெல்வேலி நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயில் ஆகும். நின்றசீர் நெடுமாறன் என்ற அரசனால் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே நெல்லையப்பர் சந்ததியும் அவரது உமையாள் காந்திமதி அம்மன் சந்ததியும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.

Simply CVR

நெல்லையப்பர் கோயில் :

நெல்லையப்பர் கோயில் :

இக்கோயிலில் தான் தமிழர் கட்டிட்டக்கலையின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் 'இசைத்தூண்கள்' இருக்கின்றன. மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தூண்களை தட்டினால் ஒவ்வொரு தூணும் பிரத்யேகமான இசையை எழுப்புகின்றன. இன்றுவரை இது எப்படி சாத்தியம் என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.

Suresh Eswaran

நெல்லையப்பர் கோயில் :

நெல்லையப்பர் கோயில் :

இந்த நெல்லையப்பர் கோயிலில் தான் தமிழ் முனிவரான அகஸ்தியருக்கு சிவபெருமான் தரிசனம் தந்ததாகவும், சீதையை தேடி இலங்கைக்கு போகும் வழியில் மாரீச்சன் என்ற அரக்கனை கொன்ற பின் ராமபிரான் அப்போது மூங்கில் காட்டின் மத்தியில் வீற்றிருந்த நெலையப்பரை வழிபட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.

Kannan B

நெல்லையப்பர் கோயில் :

நெல்லையப்பர் கோயில் :

இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்கள் என்றால் அது ஐப்பசி மாதத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருக்கல்யாணம் தான். அது தவிர ஆரூட தரிசன நாட்களிலும், தங்கத்தேர் பவனியின் போதும் தமிழகம் முழுக்க இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

kulasekaran Seshadri

நெல்லையப்பர் கோயில் :

நெல்லையப்பர் கோயில் :

நெல்லையப்பர் கோயிலானது திருநெல்வேலி நகரின் மையத்தில் அமைந்திருப்பதால் இதனை அடைவது வெகு சுலபமாகும். பெரும் வரலாற்று பழமையும், தமிழர் கட்டிடக்கலையின் பெருமையையும் தாங்கி நிற்கும் இக்கோயிலுக்கு கட்டாயம் ஒருமுறை சென்று வாருங்கள். நெல்லையப்பர் கோயிலைப்பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

sowrirajan s

இருட்டுக்கடை அல்வா :

இருட்டுக்கடை அல்வா :

கோதுமை, சக்கரை, நெய் போன்றவை கொண்டு தாயரிகப்படும் அதிசுவையான உணவுப் பண்டம் தான் அல்வா ஆகும். இது 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் திருநெல்வேலியில் உள்ள 'லட்சுமி விலாஸ்' என்ற பலகாரக்கடையில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இருட்டுக்கடை அல்வா :

இருட்டுக்கடை அல்வா :

பின்னர் 1900களில் நெல்லையப்பர் கோயிலை ஒட்டி ஆரம்பிக்கப்பட்ட இருட்டுக்கடையில் தயாரிக்கப்பட்ட அமிர்தத்துக்கு இணையான அதியற்புதமான சுவையுடைய அல்வா திருநெல்வேலியின் புகழை உலகெங்கும் கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.

மாலை நேரத்தில் மட்டுமே அல்வா விற்கப்படும் இக்கடையின் முன்பாக அல்வா வாங்குவதற்கு தினமும் கிட்டத்தட்ட அடிதடியே நடக்கிறது என்று சொல்லலாம்.

பாபநாசம் :

பாபநாசம் :

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் பாபநாசம் ஆகும். திருநெல்வேலியில் இருந்து அறுபது கி.மீ தொலைவில் இருக்கும் இந்த ஊரில் பாபநாசர் கோயில், பாபநாசம் அணை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அணை, கரையார் அணை போன்ற இடங்கள் சுற்றிப்பார்க்க சிறந்தவையாகும்.

Prabhu B Doss

பாபநாசம் :

பாபநாசம் :

பாபநாசத்தில் இருக்கும் வன தீர்த்தம் அருவி.

பாபநாசம் :

பாபநாசம் :

புகழ்பெற்ற பாபநாசர் கோயிலின் புகைப்படம். நவ கயிலாயங்களில் சூரியனுக்கு உகந்த கோயிலான இங்கு வந்து இறைவனை மனதார வழிபட்டால் தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

சித்திரை பெருவிழா இங்கு நடக்கும் முக்கியமான திருவிழாவாகும்.

பாபநாசம் :

பாபநாசம் :

சற்றும் மாசுபடாத இயற்கை அழகு நிறைந்திருக்கும் பாபநாசத்திற்கு அமைதியை ரசிக்க விரும்பும் எவரும் நிச்சயம் ஒருமுறையேனும் வர வேண்டும்.

பாபநாசத்தில் இருக்கும் கரையார் அணை.

இதர சுற்றுலா ஈர்ப்புகள் :

இதர சுற்றுலா ஈர்ப்புகள் :

இவை தவிர களக்காடு முண்டாந்துரை புலிகள் சரணாலயம், தென்காசி, குற்றாலம் அருவி, சங்கரன்கோயில், அம்பாசமுத்திரம் போன்ற இடங்களுக்கும் வாய்ப்பிருந்தால் ஒருமுறை தவறாமல் சென்று வாருங்கள்.

Flickr

எப்படி அடைவது :

எப்படி அடைவது :

அல்வா நகரான இந்த திருநெல்வேலியை பற்றிய மேலதிக தகவல்களையும், இந்நகரை ரயில் மூலமாகவும், விமானம் மற்றும் சாலை மார்கமாகவும் எப்படி அடைவது என்பது போன்ற விவரங்களையும் தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Steve

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X