Search
  • Follow NativePlanet
Share
» »பூக்கள் சற்றே ஓய்வெடுக்கும் அற்புத சொர்க்கத்திற்கு செல்வோம் வாருங்கள்

பூக்கள் சற்றே ஓய்வெடுக்கும் அற்புத சொர்க்கத்திற்கு செல்வோம் வாருங்கள்

By Naveen

பூக்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எவ்வளவு முரடனாக இருந்தாலும் நன்மணம் வீசும் பூவை முகர்ந்து பார்த்தால் குழந்தையின் குதூகலத்தை பெற்றுவிடுவான். கலவியிலோ, இறப்பிலோ மனிதனின் எல்லா முக்கிய தருணங்களின் போதும் பூக்களுக்கென்று ஓரிடம் இருக்கவே செய்கிறது.

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்காணலில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு செல்பவரா நீங்கள்?. அப்படி என்றால் இமய மலையில் இயற்கையாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் மலர் கண்காட்சிக்கும் ஒருமுறை சென்று வாருங்கள்.

உத்த்ரகண்ட் மாநிலத்தில் உள்ள பேரழகுமிக்க பூக்களின் பள்ளத்தாக்கை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பூக்களின் பள்ளத்தாக்கு !

பூக்களின் பள்ளத்தாக்கு !

வேறெங்கும் காணக்கிடைக்காத மலர்கள் மற்றும் விலங்குகளின் வசிப்பிடமான பூக்களின் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா உத்தரகாண்ட் மாநிலத்தில் மேற்கு இமய மலையில் அமைந்துள்ளது.

Alosh Bennett

பூக்களின் பள்ளத்தாக்கு !

பூக்களின் பள்ளத்தாக்கு !

தோராயமாக கடல் மட்டத்தில் இருந்து 3500 மீட்டர் உயரத்தில் இந்த பூக்களின் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது.இந்த பூங்கா 8கி.மீ நீளமும், 2கி.மீ அகலமும் கொண்டதாகும்.

இதன் கிழக்கு எல்லையில் நந்தாதேவி தேசிய பூங்கா உள்ளது.

Prashant Ram

பூக்களின் பள்ளத்தாக்கு !

பூக்களின் பள்ளத்தாக்கு !

1930கள் வரை வெளியுலகத்திற்கு தெரியாத ஓரிடமாகவே இது இருந்துவந்துள்ளது.1931ஆம் ஆண்டு ட்ரெக்கிங் பயணம் செய்ய வந்து வழி தவறிய மூன்று ஆங்கிலேயர்களால் தான் இவ்விடம் பற்றி தெரியவந்திருக்கிறது.

அப்போதிலிருந்து தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் பலர் இங்கு வந்து இங்குள்ள அரிய உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

Prashant Ram

பூக்களின் பள்ளத்தாக்கு !

பூக்களின் பள்ளத்தாக்கு !

வழிதவறி இங்கு வந்த ஆங்கிலேய மலையேற்ற வீரர்களில் ஒருவரான பிரான்க் ஸ்மைத்(Frank Smythe) என்பவர் தான் இவ்விடத்திற்கு பூக்களின் பள்ளத்தாக்கு(Valley of Flowers) என்று பெயர் சூட்டியுள்ளார்.

1982ஆம் ஆண்டு இவ்விடம் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

Pradeep Kumbhashi

பூக்களின் பள்ளத்தாக்கு - எப்போது செல்லாம்?

பூக்களின் பள்ளத்தாக்கு - எப்போது செல்லாம்?

பூக்களின் பள்ளத்தாக்கு கோடை காலமான ஜூன் மாதம் முத்தம் அக்டோபர் மாதம் வரை மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற மாதங்களில் இங்கே கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் கோடை காலத்தில் மட்டும் தான் இங்கே பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

Pradeep Kumbhashi

பூக்களின் பள்ளத்தாக்கு - என்ன செய்யலாம் இங்கே?

பூக்களின் பள்ளத்தாக்கு - என்ன செய்யலாம் இங்கே?

இந்த பூங்காவை சுற்றிபார்க்க மற்ற தேசியப்பூங்காவில் இருப்பது போல ஜீப் அல்லது யானை சவாரிகள் எதுவும் இல்லை. நீண்ட தூரம் ட்ரெக்கிங் செய்வதன் மூலம் மட்டுமே இப்பூங்காவை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடலாம்.

இந்த பூங்காவை 17கி.மீ ட்ரெக்கிங் பயணத்தின் மூலம் மட்டுமே அடையமுடியும்.

Mor

பூக்களின் பள்ளத்தாக்கு - எப்படி அடைவது?

பூக்களின் பள்ளத்தாக்கு - எப்படி அடைவது?

பூக்களின் பள்ளத்தாக்கில் இருந்து 38கி.மீ தொலைவில் உள்ள ஜோஷிமத் என்ற நகரம் தான் இப்பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் நகரமாகும். ஜோஷிமத் நகரம் டெல்லியில் இருந்து 500கி.மீ தொலைவில் உள்ளது. எனவே சாலை மூலம் ஜோஷிமத் நகரை அடைத்து அங்கிருந்து ட்ரெக்கிங் பயணம் துவங்கும் இடத்திற்கு வாடகை கார் மூலம் செல்லாம்.

Aileen

பூக்களின் பள்ளத்தாக்கு - எப்படி அடைவது ?

பூக்களின் பள்ளத்தாக்கு - எப்படி அடைவது ?

ஜோஷிமத் நகரில் இருந்து ஒருமணி நேர பயண தொலைவில் உள்ள கோவிந்த் காட் என்ற இடத்தில் இருந்து இந்த பூங்காவிற்கு செல்லும் ட்ரெக்கிங் பாதை ஆரம்பமாகிறது.

இந்த பூங்காவிற்கு செல்லும் முன்பாக வனத்துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டியது அவசியம். இந்த அனுமதி மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

__sandip__

பூக்களின் பள்ளத்தாக்கு!!

பூக்களின் பள்ளத்தாக்கு!!

ட்ரெக்கிங் செய்வதில் ஆர்வமுடையவராக இருந்தால் நிச்சயம் இந்த பூங்காவிற்கு ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.

ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை இது திறந்திருக்கும்.

JnM_RTW

பூக்களின் பள்ளத்தாக்கு!!

பூக்களின் பள்ளத்தாக்கு!!

பூக்களின் பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் புஷ்பவதி ஆறு !!

Lihi Koren

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X