Search
  • Follow NativePlanet
Share
» »தெலுங்கானாவின் அந்த 5 கோட்டைகளைப் பற்றி தெரியுமா?

தெலுங்கானாவின் அந்த 5 கோட்டைகளைப் பற்றி தெரியுமா?

தெலுங்கானாவின் அந்த 5 கோட்டைகளைப் பற்றி தெரியுமா?

By Udhaya

தெலங்கானா பகுதி இஸ்லாமிய மன்னர்களால் பல காலம் ஆளப்பட்டதால் இந்திய மற்றும் பெர்சிய தாக்கம் இங்கு வாழும் மக்களிடையே இயற்கையாகவே காணப்படுகின்றன. அதோடு தென்னகத்தை சேர்ந்திருந்தாலும், வட இந்தியாவில் கொண்டாடப்படும் சில திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர 'பத்துகம்மா பண்டுகா', போனாலு, சமக்க சாராலம்மா ஜாதரா போன்ற பிராந்திய திருவிழாக்களும் இங்கே கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றிலும் மிக முக்கியமான வரலாற்று சான்றுகள் எவை என்றால், அது நிச்சயம் கோட்டைகள் தான். வாருங்கள் தெலுங்கானா மாநிலத்தின் அந்த 5 கோட்டைகளைப் பற்றி பார்க்கலாம்.

ரச்சகொண்டா கோட்டை

ரச்சகொண்டா கோட்டை

ரச்சகொண்டா கோட்டைப்பகுதி 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வேலமா அரசர்கள் தலைநகரமாக விளங்கியதாகும். தென்னிந்தியாவிலேயே அதிகம் மதிக்கப்படாத ஒரு ராஜவம்சம் என்றால் அது இந்த வேலமா வம்சமாகத்தான் இருக்க முடியும்.

இவர்கள் பாமனி முஸ்லிம் அரசர்களோடு கூட்டு சேர்ந்து ‘கொண்டவீட்டு ரெட்டி அரசர்'களுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். வாரங்கல் கப்பய்ய நாயக்கர்களுடனும் இந்த வேலமா அரசர்கள் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டினர். இருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆர்வம் உள்ள பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த கோட்டைப்பகுதிக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன் விஜயம் செய்கின்றனர்.

Ylnr123

வாரங்கல் கோட்டை

வாரங்கல் கோட்டை

வாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. 1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது புத்திரியான ராண் ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்கிறது. அக்கால தென்னிந்திய கலைஞர்களின் கற்பனையில் இப்படியெல்லாம் கூட தோன்றியிருக்கின்றனவா, இப்படிப்பட்ட கைவினைத்திறனும் அறிவும் கொண்டவர்களா நம் முன்னோர்கள், இப்படிப்பட்ட கலைத்திறமைகள் முடியாட்சி நடத்திய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனவா, என்றெல்லாம் நம்மை திகைக்க வைத்து, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு மஹோன்னத ஸ்தலம்தான் இந்த வாரங்கல் கோட்டைஸ்தலம்.

Manoj K

தேவரகொண்டா கோட்டை

தேவரகொண்டா கோட்டை

தேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. 14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா அரசர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் ராஜ்ஜியத்துக்கு வலிமையான கேந்திரமாக இந்த கோட்டையை அவர்கள் நிர்மாணித்துள்ளனர். பல நூற்றாண்டுக்காலம் பராமரிப்பின்றி இன்று இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோட்டை ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தொல்லியல் நிபுணர்கள் இங்கு அதிகம் விஜயம் செய்கின்றனர்.
wiki

நிஜாமாபாத் கோட்டை

நிஜாமாபாத் கோட்டை

நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம். மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் வீற்றிருப்பதால் அம்மாநிலத்திலிருந்தும் அதிகப்பயணிகள் இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர்.

Rizwanmahai

மேடக் கோட்டை

மேடக் கோட்டை


மேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.

Fazilsajeer

Read more about: travel fort telangana hyderabad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X