Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டில் நாம் காணவேண்டிய காடுகள் எவை தெரியுமா? #காட்டுயிர்வாழ்க்கை 16

தமிழ்நாட்டில் நாம் காணவேண்டிய காடுகள் எவை தெரியுமா? #காட்டுயிர்வாழ்க்கை 16

தமிழ்நாட்டில் நாம் காணவேண்டிய காடுகள் எவை தெரியுமா? #காட்டுயிர்வாழ்க்கை 16

By Udhaya

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் காடுகளைப் பற்றியும், அங்கு வாழும் சூழல் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் தமிழகத்தில் இருக்கும் சூழல் காடுகள், அவைகளில் வாழும் சூழ்நிலை அமைப்புகள், சாகசப் பயணங்கள், காட்டுயிர் வாழ்க்கைப் பற்றி இந்த பதிவில் காணலாம். தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலைகளையும். சில கிழக்கு குன்றுகளையும் கொண்டுள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பசுமையாகவும், புத்துணர்ச்சி மிக்கதாகவும் காணப்படும்.

மராட்டிய காடுகளில் மனம் மயக்கும் சுற்றுலா #காட்டுயிர்வாழ்க்கை 15மராட்டிய காடுகளில் மனம் மயக்கும் சுற்றுலா #காட்டுயிர்வாழ்க்கை 15

பொள்ளாச்சி

பொள்ளாச்சி


பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

Divyacskn1289

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன. இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.

Divyacskn1289

 பழவேற்காடு

பழவேற்காடு

தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது. டச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை; போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்தருக்கின்றனர்.
McKay Savage

சுற்றுலா

சுற்றுலா

கடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருக்கும் இந்த இடம், முந்தைய நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது. சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும். பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது.

Santhosh Janardhanan .

முதுமலை

முதுமலை

முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும். வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.

Srinath1996

 உயிரினங்கள்

உயிரினங்கள்

வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி மற்றும் மறியமான் ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன. அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யானைகள் இந்த சரணாலயத்தில் அலைந்து திரிகின்றன.
moorthygounder

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது. வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.
Phoenix bangalore

சென்னையில் இருந்து

சென்னையில் இருந்து


சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பை பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்லுகிறது. இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், "வேட்டையாடும் களம்" என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Vinoth Chandar

கொல்லிமலை

கொல்லிமலை


இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை வருடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இங்கு காணப்படும் ஆகாய கங்கை என்ற அருவி மிகவும் புகழ்பெற்றது. கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த 'ஓரி திருவிழா' நிறைய மக்களை இப்பகுதிக்கு வரவழைக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் இங்கு அமைந்திருக்கும் மேலும் இரண்டு சுற்றுலா இடங்களாகும்.
Docku

 மலைத்தொடர்

மலைத்தொடர்

கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

Karthickbala

Read more about: travel forest kolli hills summer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X