Search
  • Follow NativePlanet
Share
» »செட்டிநாடு தெரியும். குட்டநாடு பற்றி தெரியுமா?

செட்டிநாடு தெரியும். குட்டநாடு பற்றி தெரியுமா?

By Naveen

காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய செட்டிநாட்டை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். அல்லது செட்டிநாட்டை பற்றி தெரியாதவர்கள் கூட செட்டிநாட்டு உணவுகளை பற்றி தெரிந்துவைத்திருப்பார்கள். மணமணக்கும் அறுசுவை உணவுகளுக்கும், ஒரு வீதி அளவுக்கு நீண்டிருக்கும் பெரிய பெரிய வீடுகளுக்கும் பெயர்போன செட்டிநாடு தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அதுபோலவே கேரளத்திலும் குட்டநாடு என்ற இடம் உள்ளது. கேரளத்தின் மொத்த அழகும் இங்கே குவிந்திருக்கிறது எனலாம். நீண்ட ஓடைகளுக்கும், கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை போர்த்தியது போல இருக்கும் வயல்களும் உள்ள குட்டநாட்டுக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாருங்கள்.

குட்டநாடு !!

குட்டநாடு !!

ஆலப்புழா, பந்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கியது தான் இந்த குட்டநாடு ஆகும்.

இந்தியாவிலேயே அதிக கடல்மட்டத்திற்கு கீழ் பகுதியாக இது சொல்லப்படுகிறது.

Toji Leon

குட்டநாடு !!

குட்டநாடு !!

குட்டநாடுகடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது.

உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி என்ற சிறப்பையும் குட்டநாடு பெற்றுள்ளது.

Sourav Niyogi

குட்டநாடு !!

குட்டநாடு !!

கேரளத்தின் நான்கு முக்கிய ஆறுகளான பம்பா, மீனாச்சில், அச்சன்கோவில், மனிமலா ஆகியவை இந்த பகுதியில் பாய்கின்றன. இத்தனை ஆறுகள் பாய்வதால் இங்கே பசுமைக்கு பஞ்சமேயில்லை.

Toji Leon

குட்டநாடு !!

குட்டநாடு !!

குட்டநாட்டுக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதை பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்த பகுதி முழுக்க அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாகவும், ஒருமுறை ஏற்ப்பட்ட காட்டுத்தீயில் வனமே மொத்தமாக அழிந்துபோனதாம். அதன் பிறகு 'சுட்ட நாடு' அதாவது 'எரிந்த பகுதி' என்று விளிக்கப்பட்டிருக்கிறது.

சுட்ட நாடு என்பதே மருவி 'குட்டநாடு' என்றானதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

-Reji

குட்டநாடு !!

குட்டநாடு !!

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல கேரளத்தின் நெற்களஞ்சியமாக குட்டநாடு திகழ்கிறது. குட்டநாட்டில் உள்ள கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாடு ஏரியை ஒட்டிய பகுதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்கள் இருப்பதை காணலாம்.

ஏராளமான தமிழ் படங்களில் நாம் பார்க்கும் வயல் சார்ந்த காட்சிகள் இங்கே தான் படமாக்கப்படுகின்றன.

Sreejith P Chakkatu

குட்டநாடு !!

குட்டநாடு !!

குட்டநாட்டின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக படகு வீடுகள் இருக்கின்றன. அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கும் குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

இவையே காஷ்மீரில் இருப்பது போல படகுவீடுகளாக மாற்றப்பட்டு சுற்றுலாப்பயணிகள் சில நாட்கள் தங்கி குட்டநாட்டின் அழகை ரசிக்க ஏதுவானதாக இருக்கின்றன.

Sreejith P Chakkatu

குட்டநாடு !!

குட்டநாடு !!

குட்டநாட்டில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று கோட்டயம் மாவட்டத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்திருக்கும் குமரகம் பறவைகள் சரணாலயம் தான்.

Saneesh MP

குட்டநாடு !!

குட்டநாடு !!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை போன்றே இங்கும் உலகெங்கிலும் இருந்து பலவகையான பறவைகள் வருகின்றன. மிகவும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் இந்த பூங்காவிற்கு wildlife Photography ஆர்வமுடையவர்கள் நிச்சயம் செல்ல வேண்டும் .

ravelling Slacker

குட்டநாடு !!

குட்டநாடு !!

தேனிலவு செல்ல திட்டமிடுபவர்கள் குட்டநாட்டுக்கு வருவது மிகச்சிறந்த தேர்வாக அமையும். ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான வசதிகள் கொண்ட படகு வீடுகளில் மிதந்தபடியே குட்டநாட்டின் பசுமை பேரழகை துணையுடன் கண்டு மகிழலாம்.

e900

குட்டநாடு !!

குட்டநாடு !!

குட்டநாட்டின் நன்னீர் ஏரிகளில் கிடைக்கும் கரிமீனை இஞ்சி, தேங்காய், மிளகு போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்ட மசாலாவில் பிரட்டி வாழையிலையில் வைத்து பொறித்து தரப்படும் கரிமீன் வறுவலை விட சுவையான மீனை உங்கள் வாழ்கையில் நிச்சயம் ருசித்திருக்க முடியாது.

இதனையும் கட்டாயம் தவறவிடாதீர்கள்.

e900

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

Sourav Niyogi

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

Navaneeth Ashok

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

-Reji

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடு - புகைப்படங்கள் !!

குட்டநாடன் புன்ஜையிலே தித்தை தக !!

Reji Jacob

Read more about: kerala alleppy lake
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X