Search
  • Follow NativePlanet
Share
» »ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் எங்கே இருக்கிறது. எப்படி செல்லலாம் என்பதுபற்றிய பதிவு இது.

மாபெரும் ஞானி என்றழைக்கப்படுபவர் அகத்தியர். இவருக்கு தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன. என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆர்ப்பரிக்கும் அருவிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த கோயில் மிகவும் வித்தியாசமானதாகவும், காண்போர் கண் வியக்கும் ஒன்றாகும் இருக்கிறது. இந்த கட்டுரையில் தமிழகத்தின் மத்திய நகரமான திருச்சியில் இருந்து இந்த அருவிக்கு எப்படி செல்லலாம் என்று பார்ப்போம்.

காவிரியில் அகத்தியர்

காவிரியில் அகத்தியர்

குடகு மலையில் அகத்தியர் தவம் செய்தபோது காகம் அவரது கமண்டலத்தைத் தட்டிவிட அது காவிரியாய் ஆனது என்று தொன்னம்பிக்கை உள்ளது. காடுகளில் விரிந்து பரந்து பாய்வதால் காவிரி என்று பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

EanPaerKarthik

வடக்கே காவிரி தெற்கே?

வடக்கே காவிரி தெற்கே?

வடக்கே குடகில் ஆர்ப்பரித்து வீழ்ந்து ஓடி காவிரியாய் பாயும் அருவி, தமிழ்நாட்டின் நடுப்பகுதியான திருச்சி வந்தடைகிறது. காவிரியைப்போலவே அகத்தியரால் பாராட்டப்படும் மற்றொரு நீர் ஆதாரமான தென்னகத்தின் காவிரிக்கு திருச்சியிலிருந்து புறப்படுவோம் வாருங்கள்.

Ashwin Kumar

 திருச்சி - மதுரை

திருச்சி - மதுரை

நம் பயணம் திருச்சியிலிருந்து மதுரை நோக்கி நகர்கிறது. திருச்சியிலிருந்து மதுரைக்கு இரண்டு வழித்தடங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

அடிக்கடி பயன்படுத்திவரும் பயணிகளிடமும், வாகன ஓட்டுநர்களிடமும் கேட்டால் விராலிமலை வழியாக செல்லும் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக கூறுகின்றனர்.

மாற்றுப்பாதையாக மணப்பாறை, திண்டுக்கல் வழியையும் குறிப்பிடுகின்றனர் அவர்கள். முதலில் திருச்சி - விராலிமலை - மதுரை வழியைப் பார்க்கலாம்.

விராலி மலை வழி

விராலி மலை வழி

திருச்சியிலிருந்து விராலிமலை வழியாக 135கிமீ தூரம் கொண்ட இந்த பாதையில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் உள்ளன.

வழித்தடம்

திருச்சி - பஞ்சாப்பூர் - ஆலந்தூர் - காதலூர் - விராலிமலை - கொடும்பலூர் - மருங்காபுரி - துவாரங்குறிச்சி- மேலூர் - மதுரை

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து நம் பயணம் தொடங்குகிறது. ஒருவேளை நீங்கள் திருச்சி சுற்றுலா பற்றி அறிய விரும்பினால் இதை சொடுக்குங்கள்.

திருச்சி நகரை தாண்டுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், புறநகர் பகுதிக்கு பின் போக்குவரத்து நன்கு வேகம் கொடுக்க ஆரம்பித்துவிடும். அனுமதிக்கப்பட்ட அளவு வேகத்தில் நம் பயணத்தை விராலிமலை நோக்கி செலுத்துவோம்.

இடையில் விநாயகர் கோயில், கோரை ஆறு, மணிகண்டம் ஏரி, கருப்பசாமி கோயில், மணிகண்டம் மசூதி என பல இடங்கள் இருக்கின்றன. நம் பயணத்தில் கல்குளத்துப்பட்டி எனும் கிராமத்தைத் தாண்டியதும் தாய் உணவகம் ஒன்று வருகிறது. அந்த இடத்தில் ஒரு டோல் கேட் அமைந்துள்ளது. டோல்கேட் தவிர்க்க முயன்றால் ஒரு மூன்றிலிருந்து நான்கு கிமீ சுற்றவேண்டி வரும். விருப்பமுள்ளவர்கள் கிராமத்துக்குள் சென்று சுற்றி அக்கலயக்கன்பட்டி வழி டோல்பிளாசாவை தவிர்க்கலாம்.

விராலி மலை

விராலி மலை

சற்று நேரத்தில் விராலி மலை வந்துவிடும். இங்கு காணவேண்டிய இடங்களாக விராலிமலை முருகன் கோயிலும், விராலிமலை மயில்கள் சரணாலயமும் அமைந்துள்ளது.

C.KUMARASAMY,THENNAMBADI

 விராலிமலை - மதுரை

விராலிமலை - மதுரை


விராலிமலை பகுதிக்குள் நாம் செல்லும்போதே போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிடும். ஒருவேளை விராலி மலை ஊருக்குள் செல்வதைத் தவிர்க்கவேண்டுமானால், நான்குவழிச்சாலையிலேயே பயணித்துவிடுவது சிறந்தது.

திருச்சி மேலூர் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. விராலி மலையிலிருந்து நான்குவழிச்சாலையை அடையும் இடத்தில் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. தேவையெனில் அடைத்துக்கொள்ளலாம்.

இந்த வழியில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

பின்னர் சற்று தொலைவில், புதுக்கோட்டை - மணப்பாறை சாலை குறுக்கிடும். எனினும் மேம்பாலம் இருப்பதால் அச்சமின்றி வேகமாகவே சென்றுவிடலாம். மேம்பாலம் தாண்டியதும் சில கிமீ தொலைவிலேயே உணவகம் ஒன்று அமைந்துள்ளது. கொட்டாம்பட்டி வழியாக மேலூரை அடைகிறோம். மேலூர் அருகே அழகர் கோயில் பாதுகாக்கப்பட்ட காடுகள் அமைந்துள்ளது.

மேலூர் - மதுரை

மேலூர் - மதுரை


மேலூரிலிருந்து 30கிமீ தொலைவில் மதுரை அமைந்துள்ளது. 45 நிமிடங்களில் அடைந்துவிடமுடியும். பின் அங்கிருந்து நம் பயணத்தை ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தொடங்கலாம். அதே வேளையில் நீங்கள் மணப்பாறை வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், இப்படித்தான் உங்கள் பயணம் அமைந்திருக்கும்.

திருச்சி - மணப்பாறை - மதுரை

திருச்சி - மணப்பாறை - மதுரை

இந்த பாதை 168கிமீ தூரம் கொண்டது. முதல் பாதையை விட 33கிமீ அதிக தூரம் உடையது என்றாலும் இயற்கையை ரசித்துக்கொண்டே, கிராமங்கள் வழியாக டோல்கேட் பயமின்றி பயணம் செய்ய ஏதுவானதாக இருக்கிறது.

சிறுமலைப் பாதுகாப்பு காடுகள்

சிறுமலைப் பாதுகாப்பு காடுகள்

மணப்பாறை முறுக்குக்கு பெயர்பெற்ற ஊராகும். இந்த வழியில் நிறைய கோயில்களும், சுற்றுலா அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. சிறுமலை பாதுகாப்பு காடுகளும் இந்த பாதையில் அமைகிறது. திண்டுக்கல் வழியாக மதுரையை 3 மணி நேரங்களில் அடைந்துவிடமுடியும். தேவையற்ற நெரிசல்கள், நேரவிரயத்தைத் தவிர்க்க, மதுரைக்குள் செல்லாமல் திருமங்கலத்துக்கு வருவது சிறந்ததாகும்.

Harish Kumar Murugesan

அருவிகளின் நடுவே அகத்தியர் கோயில்

அருவிகளின் நடுவே அகத்தியர் கோயில்


இப்போது நாம் மதுரையிலிருந்து அகத்தியர் ஆர்ப்பரிக்கும் அருவிக்கு போகிறோம்.
இதற்கும் இரண்டு வழிகள் இருக்கின்றன.

1. திருநெல்வேலி வழி
2. குற்றாலம் வழி

திருநெல்வேலி வழியின் சிறப்பம்சங்கள்

திருநெல்வேலி வழியின் சிறப்பம்சங்கள்


இது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் வழி

நான்கு வழிச்சாலை என்பதால் போக்குவரத்து விரைவில் முன்னேறும்

அநேக ஓட்டுநர்கள் பரிந்துரைக்கும் வழி இதுவாகும்.

arunpnair

குற்றாலம் வழி சிறப்பம்சங்கள்

குற்றாலம் வழி சிறப்பம்சங்கள்

சுற்றுலாப் பிரியர்கள் தேர்ந்தெடுக்கும் வழி

பயணதூரம் குறைவு, என்றாலும் பயண நேரம் அதிகம்.

சாலைகள் நல்ல தரமானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் சுற்றுலா நோக்கோடு வருபவர்களுக்கு நாங்கள் பரிந்துரைப்பது இந்த வழியைத்தான்.

Jeya2lakshmi

 மதுரை - குற்றாலம் - பாபநாசம்

மதுரை - குற்றாலம் - பாபநாசம்

மதுரையிலிருந்து பாபநாசம் 200கிமீ தூரத்தில் உள்ளது. திருமங்கலம் தாண்டி கரிசல்பட்டி கண்மாயிலிருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம்.

நெடுஞ்சாலை எண் 744ல் தொடர்ந்து பயணித்தால் வழியில் ஆயிரம் கண்ணுடையாள் கோயில், எல்லம்மாள் ஓவம்மாள் கோயில், பாப்பம்மாள் கோயில், முனியான்டி கோயில், புதுப்பட்டி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்றவை வரும்.

நீண்ட தூர பயணத்தின்போது, தெ.குன்னத்தூர் அருகே சில உணவகங்கள் கண்ணுக்கு தென்படும். உணவருந்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். அதற்குள் அருகிலுள்ள நீர்நிலைகள் சுற்றுலாத் தளங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

இங்கு பெரியதாக சுற்றுலா அம்சங்கள் ஏதுமில்லை என்றாலும் கோயில்களும், கண்மாய்களும், காடு ஒன்றும் உள்ளது. இங்கு அநேக பறவைகள் வந்துசெல்கின்றன

அருகில் தேவன்குறிச்சி கண்மாய், கீழாங்குளம் கண்மாய், தேவன்குறிச்சி மலை, மலைக்கோயில், பெத்தன்ன சுவாமி கோயில், கல்லுப்பட்டி ஏரி, புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் கோயில் என நிறைய உள்ளன.

Dr.mohaideen

திருவில்லிப்புதூர்

திருவில்லிப்புதூர்

திருவில்லிப்புதூர் வழியாக குற்றாலத்தை நெருங்க நெருங்க மேற்குத் தொடர்ச்சி மலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இங்குள்ள கிராமங்கள் பெரும்பாலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. திருவில்லிப்புதூரில் அணில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது.

Lilo Johnson

குற்றாலம்

குற்றாலம்

தென்காசி வழியாக இந்த பாதையில் சென்றாலும் இந்த வழித்தடத்துக்கு மிக அருகே குற்றாலம் அமைந்துள்ளது.

குற்றாலம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்கவும்.

Mdsuhail

பாபநாசம்

பாபநாசம்

ஒருவழியாக பாபநாசத்தை வந்தடைந்துவிட்டோம். இங்குதான் ஆர்ப்பரிக்கும் அருவிகள் மத்தியில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் உள்ளது. காவிரிக்கு சற்றும் சளைக்காத தாமிரபரணி இந்த மலையில்தான் உற்பத்தியாகிறது.

Bastintonyroy

 அகத்தியர் அருவி

அகத்தியர் அருவி

பாபநாசம் ஊரிலிருந்து இரண்டு மூன்று கிமீ தூரம் மலையில் பயணிக்கவேண்டும். பாபநாசம் மலையேற்றம் குறித்து இன்னொரு பதிவில் மிக தெளிவாக பார்க்கலாம்.

Bastintonyroy

 பூமி செழிக்க பொதிகை மலை

பூமி செழிக்க பொதிகை மலை

பூமி செழிக்க பொதிகைமலையில் அகத்தியர் கொட்டியதால் அது பாணதீர்த்தமாக அறியப்படுகிறது. இங்கு பாணதீர்த்தம் உட்பட பல தீர்த்தங்கள் அருவிகளாக உள்ளன.

கல்யாணதீர்த்தம், பழைய பாபநாசம் என்று அழைக்கப்படும் அகத்தியர் தீர்த்தம் என நிறைய அருவிகள் உள்ளன. சிலவற்றுக்கு அனுமதியின்றி போக முடியாது.

கல்யாண தீர்த்தம் அருகே அகத்தியரின் காலடித் தடம் இருக்கிறதாகவும் நம்பப்படுகிறது. இங்குதான் ஆர்ப்பரிக்கும் அருவிகளுக்கிடையே அகத்தியர் தன் மனைவி சகிதம் அமர்ந்திருக்கிறார்.

Read more about: travel temple waterfalls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X