Search
  • Follow NativePlanet
Share
» »செப்டம்பரில் அந்தமான் போனா சும்மா ஜாலியா என்ஜாய் பண்லாமாம் தெரியுமா?

செப்டம்பரில் அந்தமான் போனா சும்மா ஜாலியா என்ஜாய் பண்லாமாம் தெரியுமா?

செப்டம்பரில் அந்தமான் போனா சும்மா ஜாலியா என்ஜாய் பண்லாமாம் தெரியுமா?

புதுமணத் தம்பதிகளா? இல்லை திருமணம் ஆகப்போகிறதா? இப்போலாம் முன்னமாரி இல்லைங்க. உங்க மனம் விரும்பிய நபருடன் இந்த மாசம் அந்தமான் போங்க.. அப்படி என்ன விஷேசமா? அட... போயித்தான் பாருங்களேன்!

முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்'ஸ்கூபா டைவிங்' எனப்படும் அற்புதமான 'கடலடி காட்சிப்பயணம்', விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள்.

இந்திய பயணிகளுக்கு 'விசா' மற்றும் 'பணமாற்றம்' போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் 'ஸ்கூபா டைவிங்' அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.

வனங்களில் உல்லாசம்

வனங்களில் உல்லாசம்

இயற்கை வளம் கொஞ்சமும் குறையாத கடற்கரைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன.

Aravindan Ganesan

 அரியவகை பறவைகள்

அரியவகை பறவைகள்


இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும் வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம்.

Aravindan Ganesan

 தேனிலவுக்கு சிறந்த இடம்

தேனிலவுக்கு சிறந்த இடம்


இது போன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலை பயணிகள் சிரமமில்லாமல் ரசித்து மகிழ்வதற்காக இங்குள்ள உள்ளூர் மக்கள் இயற்கையோடு இயைந்த கட்டமைப்புகளையும், ரிசார்ட் வசதிகளையும் உருவாக்கி சூழலின் தூய்மை கெடாமல் ஒரு ஒழுங்குட்பட்டு பேணிவருகின்றனர்.

Aravindan Ganesan

 நீங்கள் கண்டிராத தாவரங்கள்

நீங்கள் கண்டிராத தாவரங்கள்


அந்தமான் நிகோபார் தீவுகளில் 2200 வகையான தாவர இனங்கள் காணப்படுகின்றன என்பதும், இவற்றில் 1300 வகைகள் இந்திய நிலப்பகுதியில் வளர்வதில்லை என்பதும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளின் தனித்தன்மையான இயற்கை வளத்தை எடுத்துச்சொல்ல போதுமானது.

Rajeev Rajagopalan

 கடல் அலங்காரப் பொருள்கள்

கடல் அலங்காரப் பொருள்கள்

அலங்கார சங்குச்சிப்பிகள், முத்துச்சிப்பிகள், கடல் பொருட்கள் போன்றவற்றுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் விளங்குகின்றன. இந்தியாவின் ரகசிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தீவுப்பகுதி குறிப்பிடப்படுவது ஏன் என்பதை இங்கு விஜயம் செய்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

Rajeev Rajagopalan

 வாழ்வின் அதீத சுகம்

வாழ்வின் அதீத சுகம்

நீங்கள் இதுவரை சென்றதில்லை எனில் உங்களின் அடுத்த சுற்றுலாப்பயணத்துக்கான ஸ்தலமாக இந்த தீவுப்பகுதியை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிடலாம். இங்குள்ள ‘ஹேவ்லாக்' தீவின் ‘ராதாநகர்' கடற்கரையை ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரையாக ‘டைம்' பத்திரிகை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[email protected]

 தெள்ளத்தெளிவான நீர்

தெள்ளத்தெளிவான நீர்


ஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல் உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் இந்த ‘ஹேவ்லாக்' கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று.

_e.t

 தீவுகள்

தீவுகள்

அந்தமான் தீவு பயணத்தின்போது பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு அம்சம் ‘ஜாலிபாய் தீவு' ஆகும். மேலும், ஹேவ்லோக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் ‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' (தேசிய கடற்பூங்கா) அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்' என்று அழைக்கப்படுகிறது.

[email protected]

 சூழலியல் சுற்றுலாத்தளம்

சூழலியல் சுற்றுலாத்தளம்

சுற்றுப்புற மாசுப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு, சூழலியல் சுற்றுலாத்தலமாக பரமாரிக்கப்படும் இந்த தீவுப்பகுதிகளில் அப்பழுக்கற்ற தீவுக்கடற்கரையின் சொர்க்கம் போன்ற சூழலை பயணிகள் தரிசிக்கலாம்.

Ananth BS

 இயற்கையின் அதிசயங்கள்

இயற்கையின் அதிசயங்கள்

உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீந்தித்திரியும் கடலுயிர்கள், படிகம் போன்ற நீலப்பச்சை நீருக்கடியில் தரிசனம் அளிக்கும் பவழப்பாறை திட்டுகள்/வளர்ச்சிகள், விதவிதமான மலர்த்தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் என்று ‘இயற்கையின் அதிசயங்களை' எல்லாம் சுமந்து வீற்றிருக்கும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்வது அவசியம்.

Steve Childs

 தீவுச்சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் போக்குவரத்து மார்க்கங்கள்

தீவுச்சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் போக்குவரத்து மார்க்கங்கள்

இந்த வண்ணத்துப்பூச்சி கூட உங்களை அந்தமானுக்கு இட்டுச்செல்லும். ஆனால் இயற்கை என்னதான் உங்களை பட்டாம்பூச்சி போல அழகாகப் படைத்திருந்தாலும் உங்களால் பறக்கமுடியாதமாதிரி அமைத்துவிட்டது. நிச்சயமாக உங்கள் அழகின்மீதுள்ள பொறாமையாகத்தான் இருக்கும்.

எனினும் அந்தமானுக்கு கடல்வழியாகவும், ஆகாயமார்க்கமாகவும் செல்லமுடியும். இந்தியாவின் முக்கிய துறைமுகங்களிலிருந்து கப்பல் போக்குவரத்தும், கிட்டத்தட்ட அனைத்து விமானநிலையங்களிலிருந்தும் விமான சேவையும் வழங்கப்படுகிறது. சோ நோ வொரிஸ். லெட்ஸ் என்ஜாய்.

Ajith U

 விமான சேவை

விமான சேவை


அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் ‘போர்ட் பிளேர்'க்கு விமான சேவைகளை இயக்குகின்றன.

Avik Sarkar

 நான் கௌரி

நான் கௌரி


இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான ‘நான்கௌரி' எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர் துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.

COMSEVENTHFLT

 விமானம் மூலம்

விமானம் மூலம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்கர் விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மும்பை நகருக்கும், போர்ட் பிளேருக்கும் இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Kai Hendry

 சாலை மூலம்

சாலை மூலம்


அந்தமான் நிக்கோபார் தீவுகளை சாலை மூலமாக அடைவது முடியாத காரியம். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நீங்கள் சென்றடைந்த பின்பு முக்கிய சுற்றுலாப் பகுதிகளான போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களை அடைவதற்கு அந்தமான் டிரங்க் ரோடு உங்களுக்கு வசதியாக இருக்கும்.

mamta tv

 கடல் மூலம்

கடல் மூலம்

சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களிலிருந்து தினமும் ஃபெர்ரி சேவைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலம் நீங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அடைந்து விட முடியும்.

NASA Goddard Space Flight Center

Read more about: travel tour andaman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X