தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள்
போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை. காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. அஸ்ஸாமின் மிக முக்கிய தலங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
அஸ்ஸாம் அற்புதங்கள்
இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும், கிழக்கில் நாகலாந்து மற்றும் மணிப்பூரையும் தெற்கில் மிஜோரத்தையும் தனது அண்டை மாநிலங்களாக கொண்டுள்ளது. அஸ்ஸாம் வழங்கும் காட்டுயிர் சுற்றுலா அஸ்ஸாம் மாநிலம் காட்டுயிர் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.
Porikolpok Oxom
சுற்றுலாப்பயணிகள்
இங்குள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவை அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலா செயல்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள தேசியப்பூங்காக்கள் பல அரியவகை காட்டு உயிரினங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சாகச பொழுது போக்கு அம்சங்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன. கஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் அஸ்ஸாம் மாநில சுற்றுலா அம்சங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
Satyadeep Karnati
உலக பாரம்பரிய ஸ்தலம்
இது யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அளவில் அருகி வரும் பல உயிரினங்கள் இந்த கஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வசிக்கின்றன. இவற்றில் இந்திய காண்டாமிருகம் முக்கியமான ஒரு விலங்காகும். இது தவிர கோல்டன் லாங்குர் குரங்கு, பெங்கால் ஃப்ளோரிகன். பிக்மி ஹாக், வெள்ளைச்சிறகு மர வாத்து போன்றவை இங்கு வசிக்கும் உயிரினங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிகமான அளவில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாகவும் இது புகழ் பெற்றுள்ளது.
Gitartha Bordoloi
பறவைகள்
பலவகையான பறவையினங்களும் இங்கு வசிக்கின்றன. புலம்பெயர் பறவைகள், இருப்பிடப்பறவைகள், நீர்ப்பறவைகள், வேட்டைப்பறவைகள் போன்ற பலவகைப்பாடுகளில் இவை காணப்படுகின்றன.கஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் தவிர்த்து அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மனஸ் தேசியப்பூங்காவும் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் பல்லுயிர்பெருக்க இயற்கை ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதல் புலிகள் சரணாலயமான இந்த மனஸ் பூங்காவில் இதர விலங்குகளும் ஏராளம் வசிக்கின்றன.
தேசிய இயற்கை பூங்காக்கள்
அற்புதமான இயற்கை அழகுக்காகவும் புகழ் பெற்றுள்ள இது நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது. பொபிடோரா காட்டுயிர் சரணாலயம், ஒராங் தேசியப்பூங்கா மற்றும் நாமேரி தேசியபூங்கா ஆகியவை அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள இதர தேசிய இயற்கை பூங்காக்களாக அமைந்துள்ளன. அஸ்ஸாம் சுற்றுலாவின் இதர சுவாரசிய அம்சங்கள் செழிப்பான காட்டுயிர் அம்சங்கள் மட்டுமல்லாது கோயில்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் போன்றவற்றையும் அஸ்ஸாம் மாநிலம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது.
Diganta Talukdar
பொழுதுபோக்கு
இது தவிர ஆற்றுப்பயணம், ஆற்று மிதவைப்படகு சவாரி, தூண்டில் மீன் பிடிப்பு, சிகரமேற்றம், மலையேற்றம், மலைச்சைக்கிள் சவாரி, பாரசூட் பறப்பு மற்றும் ஹேங் கிளைடிங் போன்ற பல சாகச பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு காத்திருக்கின்றன. கோல்ஃப் விளையாட்டுப்பிரியர்கள் இங்குள்ள கோல்ஃப் மைதானங்களுக்கு விஜயம் செய்து பங்கேற்பு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
Kalai Sukanta
கலாச்சாரம்
அஸ்ஸாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள் சந்தைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற அம்சங்களையும் அஸ்ஸாம் மாநிலம் அபரிமிதமாக கொண்டுள்ளது. அஸ்ஸாமிய திருவிழாக்கள் யாவும் அவர்களது தனித்தன்மையான பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.
Sumantbarooah
திருவிழாக்கள்
பிஹு, ரொங்கேர், பைஷாகு, ஜொன்பில் மேளா மற்றும் பய்கோ போன்றவை இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பிடத்தக்கவை. அஸ்ஸாம் மாநிலம், பல்வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. இயந்திரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு நடுவிலும் வாழ்க்கையின் உண்மையான சாரம் மற்றும் வளமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை எங்கெங்கிலும் காண முடிகிறது. அநேகமாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு தேசியப் பூங்காவோ அல்லது அருகி வரும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு வனவிலங்குகள் சரணாலயமோ அமையப்பெற்றுள்ளது.
Sumantbarooah
வனவிலங்குகள் சரணாலயங்கள்
பல்வேறு அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்ந்திருக்கும் அஸ்ஸாமின் வனவிலங்குகள் சரணாலயங்கள் தாவர வளத்திலும் சிறந்து விளங்குகின்றன. இன்று அஸ்ஸாம் என்றாலே அது காசிரங்கா தேசியப் பூங்கா தான் என்னும் அளவுக்கு இப்பூங்கா மிகவும் பிரபலமாக உள்ளது. இப்பூங்கா, அருகி வரும் விலங்கினமான ஒற்றைக் கொம்புடைய காண்டா மிருகத்தை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கிறது. அஸ்ஸாமின் மாநில விலங்கான ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம், மேலும் பல வனவிலங்கு சரணாலயங்களிலும் காணப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்குச் செல்லாமல் அஸ்ஸாம் செல்லும் பயணம் நிறைவடைவதில்லை. இவற்றுள் சிலவற்றிலாவது ஒன்றிரண்டு நாட்களை கழிக்கும் வண்ணம் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயண நிரலை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
Yathin S Krishnappa
எப்படி செல்லலாம்?
போக்குவரத்து வசதிகள் அஸ்ஸாம் பிரதேசம் மற்ற மாநிலங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாட்டி நகரத்தில் ‘லோகப்பிரியா கோபிநாத் போர்டோலோய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்' விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா இந்திய பெருநகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நாட்டின் இதர பகுதிகளுடன் அஸ்ஸாம் மாநிலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
Kaushik s