Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் முதல் மனிதன் தமிழன் - இந்தியாவையே தலைச்சுற்றச் செய்த ஆய்வு #NPH 7

உலகின் முதல் மனிதன் தமிழன் - இந்தியாவையே தலைச்சுற்றச் செய்த ஆய்வு #NPH 7

உலகின் ஆதி மொழி, மூத்த மொழி, முதன்மை மொழி என தமிழ் பல்வேறு நபர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் பேசுபவர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழிக்காரர்களும் மனிதர்கள் ஆதியில் பேசிய மொழி தமிழ் என்றே பெருமைக் கொள்கின்றனர். ஆனால் ஒறு சிலர் தமிழின் உண்மையான வரலாறு வெளியில் தெரிந்தால் தங்கள் மொழி பாதிக்கப்படும் என்றும், எப்படி தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்னதாகவே செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை இப்போது வெறும் அறிக்கையாக வாசித்து பிறர் பெற்ற பிள்ளைக்கு தன்பெயர் இடுகிறார்களோ அதுபோல, தமிழின் சிறப்புகளையும், தமிழர்களின் பெருமைகளையும் தங்களுடையது என்று சிலர் கொட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.

பெண்களுக்கு தடை நீக்கம்! மேலாடையின்றி ஈர உடையுடன் பக்தர்கள் வழிபடும் கோவில்!

அவர்களை அச்சம் கொள்ளவைக்கும் அதிர்ச்சி நிறைந்த தகவல்கள் இந்த கட்டுரையில் உள்ளது. உலகின் முதல் மனிதன் தமிழனாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்ற ஆதாரம் இப்போது கிடைத்துள்ளது. அந்த இடத்தைப்பற்றியும், வரலாற்றைப் பற்றியும் அறிய இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள். இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History

எங்கே கிடைத்துள்ளன?

எங்கே கிடைத்துள்ளன?

ஆதி மனிதன் பேசிய மொழி தமிழ்தான் என்று இதுவரை குத்துமதிப்பாகத்தான் பேசி வந்தோம். ஆனால் இப்போது இந்த ஆதாரம் அவை உண்மையென நிரூபிக்கிறது.

பழங்கால நம்பிக்கை மற்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் வரை நிறைய ஆய்வாளர்கள் கூறிவருவது மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடத்துக்கும் சென்றுள்ளான் என்பதுதான். அதற்கான ஆதாரம் என்பது அங்கு பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள், வேட்டைபொருள்கள்தான். ஆனால் அதைவிட அதிக நாட்களுக்கு முன்னரே தமிழகத்தில் இந்த கருவிகள் மிகவும் மேம்பட்ட முறையில்பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்தியாவே அதிர்ச்சியடையச் செய்யும் தகவல்தானே.

இது சென்னைக்கு அருகிலுள்ள அதிராம்பாக்கத்தில் கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு பிரம்மாண்டமான வரலாற்று ஆய்வுக்குரிய பகுதியாகும்.

சென்னையிலிருந்து எப்படி செல்வது

சென்னையிலிருந்து எப்படி செல்வது

சென்னையிலிருந்து இரண்டு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இது 68கிமீ தூரம் கொண்டது. இங்கு வரலாற்று ஆய்வுகள் நடந்துவருகின்றன.

இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடம். இங்கு செல்வதற்கு ஆவடி வழியாகவும், திருவள்ளூர் வழியாகவும் இரண்டு வித வழித்தடங்கள் உள்ளன.

நீண்டநாள் நம்பிக்கை

நீண்டநாள் நம்பிக்கை

மனிதன் முதலில் எங்கு தோன்றினான் என்பது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய கேள்விதான். நான்கு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியதாக ஒரு ஆதாரம் இருந்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆப்ரிக்காவிலிருந்து இருந்து மனிதன் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

PC: Commons.wikimedia

 கற்காலத்தில் தமிழக பகுதிகள்

கற்காலத்தில் தமிழக பகுதிகள்

நாம் முன்னர் படித்த வரலாற்றுப்பகுதிகளில் கற்கால தமிழர்கள் என்னவெல்லாம் செய்தார்கள், அவர்களின் பாரம்பரியம் எப்படி என்பது குறித்த நிறைய தகவல்களை படித்தோம். ஆனால் இதையெல்லாம் அரசு பெரிதாக எடுக்கவில்லை. அப்போவே கற்கருவிகள், சாயஆலைகள், உலோகங்களை உருக்கும் ஆலை என நிறைய முன்னேறி இருந்ததை படித்திருக்கிறோம். அதற்கும் மேலாக கிட்டத்தட்ட 3.85 லட்சம் வருடங்களுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்ட ஆயுத கற்கள் தமிழகத்தின் தலைநகருக்கு அருகேயே கிடைத்திருப்பது, இங்கேயே மனிதன் தோன்றியுள்ளான் என்பதையே காட்டுகிறது.

PC: antiquity.ac.uk

இதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

இதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

தமிழகத்தில் நிறைய இடங்கள் நிச்சயம் தொல்லியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற நிலையில் தற்போது இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக ஆய்வுகளங்களைப் பற்றி பார்க்கலாம்.

தமிழகத்தின் மிக முக்கிய தொல்லியல் களங்களாக, கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, பூம்புகார், குற்றாலம், தரங்கம்பாடி, கங்கைகொண்ட சோழபுரம், கோவலன் பொட்டல், தேரிருவேலி, கொடுமணல் என என்னற்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வியலை பற்றிய விவரங்களை காண ஆய்வு நடத்தப்பட்ட இடங்களாகும். இவற்றைப் பற்றி இன்னொரு பதிவில் தெளிவாகக் காண்போம்.

PC: antiquity.ac.uk

அருகிலுள்ள காணவேண்டிய இடங்கள்

அருகிலுள்ள காணவேண்டிய இடங்கள்

அதிரம்பாக்கம் பூண்டி ஏரிக்கு அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இதன் அருகினில் திருவள்ளூர், மாமண்டூர், சுருட்டப்பள்ளி, காரனி, ஊத்துக்கட்டை, திருப்பதி உள்ளிட்ட இடங்கள் காணவேண்டிய தளங்களாகும்.

சுருட்டப்பள்ளி நீர்வீழ்ச்சி

சுருட்டப்பள்ளி நீர்வீழ்ச்சி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் சுருட்டப்பள்ளி ஆகும். இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சி சென்னை மாநகர மக்களின் வாரவிடுமுறை கால சுற்றுலாத் தளமாக பார்க்கப்படுகிறது.

இங்கு அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது இல்லை. எனவே நிம்மதியான சிறப்பான ஒரு பயணத்தை திட்டமிட்டு இங்கே சென்று புத்துணர்ச்சியாக திரும்பி வரலாம்.

எப்படி செல்வது

எப்படி செல்வது

சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை எண் 51ல் செல்வது சிறப்பானதாகும். மேலும் திருவள்ளூர் வழியாகவும் தேநெஎ 50ஐத் தொடர்ந்து செல்லமுடியும். ஏறக்குறைய 60 கிமீ தொலைவு வரும் இந்த பயணத்தை, இப்படியே முடித்துக்கொள்ளலாமா? அருகிலுள்ள சுருட்டப்பள்ளி கோயிலுக்கும் போய் வரலாமே!

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர்

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர்

சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான கோயில் இந்த சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயில் ஆகும். மற்ற சிவ தலங்களில் இருப்பதைப் போல் இல்லாமல், இந்த கோயிலின் சிவபெருமான் பள்ளிகொண்ட வடிவில் இருக்கிறார்.

இந்த கோயிலில், பிரம்மா, விஷ்ணு, சந்திரா, குபேரா, சூர்யா, இந்திரா, கணேசா, கார்த்திகேயா என நிறைய தெய்வங்கள் இருக்கின்றன.

రవిచంద్ర

குடியம் கற்கால குகைகள்

குடியம் கற்கால குகைகள்

சுருட்டப்பள்ளியிலிருந்து தெற்கே தமிழக எல்லையில் அமைந்துள்ளது இந்த வகை குகைகள். இவை மிகவும் பழமையானது. இதைக் காணும்போது நம் பழமையையும், கற்காலத்தையும் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

Rameshyanthra

பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரி

சுருட்டப்பள்ளியிலிருந்து பழவேற்காடு ஏரி 2 மணி நேரத்துக்கும் குறைவான பயண தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட காலத்தில் நிறைய நீர் இருக்கும். சுற்றுலாவுக்கு வருபவர்கள் இங்கு மகிழ்ந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள். மேலும் அருகிலேயே சென்னை மாநகரம் அமைந்துள்ளது.

McKay Savage

காளஹஸ்தி

காளஹஸ்தி

ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில் நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு மாநகராட்சியாகும். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவிலுள்ள முக்கிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி எனும் பெயரில் ஸ்ரீ, காள மற்றும் ஹஸ்தி ஆகிய மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஸ்ரீ என்ற சொல் சிலந்தியையும், காள எனும் சொல் பாம்பையும், இறுதியாக வரும் ஹஸ்தி எனும் சொல் யானையையும் குறிக்கின்றன.

Krishna

வெய்யிலிங்கல கோணா’ நீர்வீழ்ச்சி

வெய்யிலிங்கல கோணா’ நீர்வீழ்ச்சி

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை. தெலுங்கு மொழியில் இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு" ஆயிரம் லிங்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு" என்பது பொருள். நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உள்ள மலைகள் சிவலிங்கங்கள் போன்று காட்சியளிப்பதே இப்படி ஒரு பெயர் ஏற்படக்காரணமாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காகவே ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வந்தால் சரும வியாதிகள் குணமாகும் என்று கருதப்படுகிறது. அது தவிர பாவங்களை கழுவும் தெய்வீக சக்தியும் இதற்கு உள்ளதாக ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.

துர்கா கோயில்

துர்கா கோயில்

துர்கா கோயில் எனப்படும் இந்த ஆலயம் சக்தியின் வடிவமான துர்க்கையம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடந்தோறும் ஈர்க்கிறது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வடக்காக 800 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின்மீது இந்த கோயில் அமைந்துள்ளது. அகலமான படிக்கட்டுகள் மூலமாக இந்த கோயிலுக்கு ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. துர்க்கா தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள சன்னதி மற்ற காளஹஸ்தி கோயில்களோடு ஒப்பிடும்போது மிகச்சிறியது என்றாலும் இந்த கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகளால் மிகவும் விரும்பி தரிசிக்கப்படுகிறது.

Srikar Kashyap

 பூண்டி ஏரி

பூண்டி ஏரி

பூண்டி ஏரி சென்னைக்கு நீர் தரும் ஏரியாகும். இது அந்த அளவுக்கு சுற்றுலாத் தளம் இல்லை என்றாலும், சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இடம்தான். திருவள்ளூர் வருபவர்கள் இந்த பூண்டி ஏரிக்கும் சென்று வரலாம். மேலும் அருகில், செல்லியம்மன் கோயில், வைத்ய வீரராகவ சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், மணக்குலவிநாயகர் கோயில், திரௌபதியம்மன் கோயில் என எக்கச்சக்க வழிபாட்டுத் தளங்களும் உள்ளன.

Read more about: travel history chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more