Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் முதல் பணக்காரரின் பல லட்சம் கோடி மதிப்பு பொக்கிஷங்கள் இங்கேதான் இருக்கிறது!

உலகின் முதல் பணக்காரரின் பல லட்சம் கோடி மதிப்பு பொக்கிஷங்கள் இங்கேதான் இருக்கிறது!

ஐதராபாத் நிசாம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள புதையலை எங்கு வைத்திருக்கிறார் தெரியுமா?

By Udhaya

இந்தியாவில் புதையலுக்கா பஞ்சம் என்று கூட கேட்கலாம். அந்த அளவுக்கு நிறைய கோட்டைகள், கோயில்களில் புதையல்கள் நிறைந்துள்ளன. அவற்றை சில அமானுஷ்ய கதைகள் கூறி நம்மை நெருங்கவிடாமல் வைத்திருப்பதுதான் ராஜதந்திரமோ என்னவோ. இப்படி நிறைய மன்னர்களைப் பார்த்திருப்போம். அப்படி ஒரு பொக்கிஷத்தை பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த மன்னர் பற்றியும், புதைத்து வைக்கப்பட்ட கோட்டை பற்றியும்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மிர் ஒஸ்மான் அலிகான் பகதூர்

மிர் ஒஸ்மான் அலிகான் பகதூர்

மிர் ஒஸ்மான் அலிகான் என்பவர் ஐதராபாத்தின் கடைசி மன்னர் ஆவார். இவர் மிகப்பெரிய அளவு சொத்து வைத்திருந்தார். உலகின் முதல் பணக்காரர் என்று செய்தி வெளியிட்டு இவரை ஆங்கில நாளேடு ஒன்று பெருமைப் படுத்தியது. இவரது சொத்து மதிப்பு 210.8 பில்லியன் டாலர்களாம். இவ்வளவு சொத்தையும் எங்கே வைத்திருந்தார் தெரியுமா?

wikipedia

 பூமிக்கடியில் புதையல்

பூமிக்கடியில் புதையல்

காலியாகிப் போன கஜானாவை இவர் தலைமையேற்ற பின் நிரப்பும் பணியில் தீவிரமாக செயல்பட்டார். இதனால் அவரது ஆட்சியில் நாடு செல்வசெழிப்பாக மாறியது. பின் மன்னராட்சி முடியும் தருவாயில் அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரராக அறியப்பட்டார்.

இவர் வாழ்ந்துவந்த அரண்மனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த அரண்மனையில்தான் இவரின் புதையல்கள் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இது பற்றி மிகவும் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால்.....

Wikipedia

 கிங்க் கோத்தி அரண்மனை

கிங்க் கோத்தி அரண்மனை

முகலாய மன்னர்களின் கட்டிடக்கலை மிகவும் சிறப்பானதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு ஒப்பானதாகவும் இருக்கிறது. இவர்கள் அரண்மனைகளை மிகவும் அதிக பொருட்செலவில் கட்டிமுடிப்பார்கள்.

அரண்மனைகளின் ஒவ்வொரு இடத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள் என்று நாம் படித்திருக்கிறோம் அல்லவா.

அப்படி அழகின் உருவாய் அமைந்துள்ளதுதான் இந்த கிங்கோத்தி அரண்மனை. இது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தின் காச்சிகுடா ரயில் நிலையத்திலிருந்து வெகு அருகில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. இது ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ வரை தூரம் கொண்டது. மேலும், இங்கு செல்ல 10 நிமிடங்கள் கூட ஆகாது.

காச்சிகுடா ரயில் நிலைய சாலையிலிருந்து நாராயணகுடா சாலையைப் பிடித்து, அங்கிருந்து, கிங்கோத்தி சாலையை அடையலாம். இந்த சாலையில் முடிவில் அமைந்துள்ளது இந்த அரண்மனை.

கமல் கான்

கமல் கான்

இந்த மாளிகையை கமல் கான் என்னும் செல்வந்தர்தான் கட்டினார். இதன் அழகைப் பார்த்து மயங்கிய நிசாம் இதை விலைக்கு வாங்கிவிட்டார். மேலும் தன்னுடைய மொத்த அரண்மனைகளிலேயே நிசாமுக்கு மிகவும் பிடித்த இடம் இதுதானாம்.

13 வயதில் இந்த மாளிகைக்கு வந்துள்ளார் நிசாம். அதன்பிறகு அவர் தந்தை வாழ்ந்து வந்த மாளிகைக்குகூட போகவில்லை. இதே அரண்மனையில் காலம் முழுவதையும் கழித்தார் என்பதிலிருந்தே இந்த இடம் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம். ஆனால் அப்படி முக்கியத்துவம் வாய்ந்ததற்கு என்ன காரணம் தெரியுமா?

சுற்றுலா

சுற்றுலா

இந்த அரண்மனைக்கு நீங்கள் சென்று பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கச்சிகுடா ரயில் நிலையத்திலிருந்து அருகில் இருக்கிறது. இதன் முகவரி கிங்க் கோத்தி சாலை, அரசு மருத்துவமனையின் அருகில், ஐதராபாத், தெலங்கானா ஆகும்.

காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இந்த இடம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

Cephas 405

 கட்டிட அமைப்பு

கட்டிட அமைப்பு

இந்த மாளிகையானது மூன்று கட்டிடங்களைக் கொண்ட அழகிய அமைப்பைக் கொண்டதாகும். ஒன்று மேற்கத்திய பாணியிலும், மற்ற இரண்டும் இந்திய முகலாய பாணியிலும் அமையப்பெற்றவையாகும்.

மேற்கத்திய பாணி கட்டிடம் இடிக்கப்பட்டது தற்போது அது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த அரண்மனை அருகே மசூதி ஒன்றும் அமைந்துள்ளது.

Bhaskaranaidu

சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்

இந்த மாளிகையைச் சுற்றி நிறைய இடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமாக நேரு விலங்கியல் பூங்கா, பெத்தம்மா கோயில், அஷ்டலக்மி அம்மன் கோயில், பைகா நினைவிடம் ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

மேலும், நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை பட்டியலில், கோல்கொண்டா கோட்டை, சார்மினார், சடார் ஜங்க் அருங்காட்சியகம், நிசாம் அருங்காட்சியகம், உசேன் சாகர் ஏரி, புத்தர் நினைவிடம், படகு சவாரி, பிர்லா கோயில், ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

J.M.Garg

ஸ்னோ வேர்ல்டு

ஸ்னோ வேர்ல்டு

ஹைதராபாத் நகரத்தில் உள்ள இந்த ஸ்னோ வேர்ல்டு நாட்டிலேயே முதல் உல்லாச பொழுதுபோக்கு வளாகமாக அறியப்படுகிறது. 2004ம் ஆண்டின் முற்பகுதியில் இது திறக்கப்பட்டது. ஒரு நாளில் சுமார் 2400 பயணிகள் விஜயம் செய்யும்படியான வசதியை இது கொண்டுள்ளது. பெயருக்கேற்றபடி செயற்கை பனி வளாகத்தை கொண்டுள்ள இந்த பொழுதுபோக்கு மையத்தில் பனிக்குளிரை அனுபவித்து மகிழலாம். டன் கணக்கில் செயற்கை பனித்துகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டி பொம்மைகள் உருவாக்கியும் பனியில் விளையாடியும் மகிழலாம். நான்கு முறை வடிகட்டப்பட்ட நீரைக்கொண்டு இந்த பனித்துகள்கள் உருவாக்கப்படுவதால் சிறு குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்பு குறித்த அச்சம் வேண்டியதில்லை.

Bssasidhar

 நிசாம் அருங்காட்சியகம்

நிசாம் அருங்காட்சியகம்

இங்கு வருகைத் தருபவர்கள் கட்டாயம் மறக்காமல் செல்லவேண்டிய இடம் நிசாம் அருங்காட்சியகம் ஆகும். நிஜாம் மன்னர்களின் அரண்மனைப்பகுதியின் ஒரு அங்கமாக உள்ள இந்த மியூசியத்தில் ஏராளமான ஓவியங்கள், ஆபரணங்கள், அரிய பரிசுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பழமையான கார்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நிஜாம் மன்னர்களுக்கு பரிசாக கிடைத்த ஏராளமான பொருட்கள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கலாரசனையோடு சேகரித்த அரும்பொருட்கள் ஆகியவை இங்குள்ள சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.

அதுமட்டுமல்லாமல் நிஜாம் ராஜ வம்சத்தினரின் நவீன அந்தஸ்து அடையாளங்களான ரோல்ஸ்ராய்ஸ் கார் மற்றும் ஜாகுவார் கார் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை வின்டேஜ் கார் பிரியர்களை வெகுவாக கவர்கின்றன.

Randhirreddy

ஆஸ்மன் கர் அரண்மனை

ஆஸ்மன் கர் அரண்மனை

ஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஆஸ்மன் கர் அரண்மனை ஒரு மலையின்மீது கம்பீரமாக அமைந்துள்ளது. மலையில் வீற்றுள்ளதால் ‘ஆகாய வீடு' எனும் பொருள் தரும்படியான ஆஸ்மன் கர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை தற்போது தொல்லியல் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பயனுள்ள அருங்காட்சியகமாக இயங்குகிறது. இந்த அரண்மனை வளாகத்திலேயே செயிண்ட் ஜோசப் பள்ளியும் அமைந்துள்ளது. ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக இருந்த சர் ஆஸ்மன் என்பவர் இந்த அரண்மனையை 1885ம் ஆண்டில் கட்டியுள்ளார்.

Nayeem

நேரு விலங்கியல் பூங்கா

நேரு விலங்கியல் பூங்கா


1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊர்வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன.

Cephas 405

உல்லாச பொழுதுபோக்கு பூங்கா

உல்லாச பொழுதுபோக்கு பூங்கா


ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள இந்த ஓஷன் பார்க் நாட்டிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய ‘அம்யூஸ்மெண்ட் பார்க்'குகளில் (உல்லாச பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றாக அறியப்படுகிறது. நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு பூங்கா ஓஸ்மான் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. நன்கு பராமரிக்கப்பட்டு அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளையும் சுத்தமான நீர் நிறைந்து காணப்படும் நீர்த்தடாக அமைப்புகளையும் இது கொண்டுள்ளது.

official site

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.

இந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது.

Haseeb1608

ஓஸ்மான் சாகர் ஏரி

ஓஸ்மான் சாகர் ஏரி


ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது. 1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி ஹைதராபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது. வெள்ளப்பெருக்கிலிருந்தும் இப்பகுதியை ஓஸ்மான் சாகர் ஏரி பாதுகாத்துவருகிறது. இந்த ஏரி உருவாவதற்கு முன்னர் 1908ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கில் ஹைதரபாத் நகரம் முழுவதுமே பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Sankarshansen

Read more about: travel hyderabad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X