Search
  • Follow NativePlanet
Share
» »இளைஞர் பட்டாளம் படையெடுக்கும் பாண்டிச்சேரி - இது கேரளாவுலங்கோ!

இளைஞர் பட்டாளம் படையெடுக்கும் பாண்டிச்சேரி - இது கேரளாவுலங்கோ!

அரபிக்கடலிலும் ஒரு பாண்டிச்சேரி ஜெராக்ஸ் போயி பாத்துருக்கீங்களா?

அட.. என்னப்பா பாண்டிச்சேரி வங்கக் கடல்லல இருக்கு.. என்ன தப்பு தப்பா சொல்றனு மனசுக்குள்ள யோசிக்கிறீங்களா?அப்ப உங்களுக்கு ஒரு விசயம் சொல்ல நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். ஆம்..

இது சரித்திரம் அல்ல. பூகோளம்.. பூகோள வரைபடத்தில் நாம் அனைவரும் கண்டும், கேட்டும் மகிழ்ந்த பாண்டிச்சேரி எனும் புதுச்சேரி வங்கக் கடலில் இருக்கிறது என்பது உண்மைதான்,. ஆனால், மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள்ளும், தனியே சட்டமன்றமும் பெற்றுள்ள பாண்டிச்சேரி ஒண்ணு இல்ல ரெண்டு....

வாங்க அது பற்றி விரிவாக பாக்கலாம்.

 இரண்டு நிலப்பகுதிகள்

இரண்டு நிலப்பகுதிகள்

தமிழகத்துக்கு அருகே உள்ள பாண்டிச்சேரி இரண்டு நிலப் பகுதிகளாக உள்ளது. அதன் இன்னொரு பகுதிதான் மாஹே...

mahe.gov.in

 பாண்டிச்சேரி ஆட்சி

பாண்டிச்சேரி ஆட்சி

பாண்டிச்சேரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதைத்தான் இப்படி சுற்றி வளைத்து சொல்கிறோம். ஆனால் புதுச்சேரியையும் மிஞ்சும் வகையில் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது இந்த மாஹே.

 கேரள நாட்டிளம்

கேரள நாட்டிளம்

கேரளத்தின் இயற்கை வளங்களை மூன்று பக்கங்களிலும், அரபிக் கடலை ஒரு புறத்திலும் அரணாகப் பெற்றிருக்கிறது இந்த மாஹே.

http://mahe.gov.in/

 மாஹே நெஹி மாஹி

மாஹே நெஹி மாஹி

பெரும்பாலும் இது மாஹே என்றழைக்கப்பட்டாலும், இதன் சரியான உச்சரிப்பு மாஹி என்பதாகும்.

அழகிய கடலும், கதிரவனும் இணையும் இடம் என்பது இதன் பொருளாகும்.

Prof tpm

 மக்கள் தொடர்பு

மக்கள் தொடர்பு

சுமார் 35,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், சுமார் 98.35% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளதனால், இது, நாட்டிலேயே, அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட முனிசிப்பாலிட்டிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால் வெளியூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு மொழி சிக்கல்கள் இருப்பதில்லை.

ShajiA -

 பிரெஞ்சு

பிரெஞ்சு

இந்நகரம், அந்நியரான பிரெஞ்சு ஆட்சியின் கீழ், 1954-ம் வருடம் வரை இருந்துள்ளதனால், இங்கு பிரெஞ்சு கலாச்சாரத்தின் மிச்சங்களை, பொதுமக்கள் சிலரிடையேயும், கட்டுமானங்கள் சிலவற்றிலும் காணலாம். 1855-ம் வருடம் கட்டப்பட்டுள்ள அரசு விடுதி, இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

Ezhuttukari

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


இந்தியாவில், பிரெஞ்சு கொள்கையின் முக்கிய வடிவமைப்பாளராக இருந்த, பெர்ட்ராண்ட் ஃப்ரான்காய்ஸ் மாஹி டி லா பௌர்டோன்னாய்ஸ் -சின் பெயரிலேயே இந்நகரம் அழைக்கப்படுகின்றது.
இப்பெயர் தோன்றிய விதம் பற்றி இரு வேறு விதமான கூற்றுகள் உலவுகின்றன. முதல் கூற்றின்படி, இப்பெயரில் உள்ள ஒரு பிரெஞ்சு மனிதரை கௌரவிக்கும் வகையில், இந்நகர் இவ்வாறு பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது கூற்றின்படி, கவுன்ட் டி லா பௌர்டோன்னாய்ஸ், ஏற்கெனவே இவ்வாறு வழங்கப்பட்டு வந்த இந்நகரின் பெயரையே, தான் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

Unknown

 மாஹே மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

மாஹே மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


மாஹே பள்ளி என்றழைக்கப்படும் தேவாலயம், இதன் சுற்றுப்புறங்களில் வாழ்ந்து வரும் கிறித்தவர்கள், மத வழிபாடு செய்யும், மிகப் பிரபலமானதொரு தலமாகும்.

Prabhupuducherry

 படகு வீடுகள்

படகு வீடுகள்

விசைப்படகுகள், பெடல் படகுகள், மற்றும் காயக் என்றழைக்கப்படும் பனிக் கடற் படகுகள், ஆகியவற்றாலான மாஹே படகு வீடுகள், இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கியமான அம்சங்களாகும்.
இந்த அமைதியான இயற்கை வனப்பு மிக்க பகுதியைக் கண்டு ரசிக்க, வருடந்தோறும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

Unknown

 மாஹே செல்வதற்கு ஏற்ற காலகட்டம்

மாஹே செல்வதற்கு ஏற்ற காலகட்டம்

மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம், மாஹே சென்று வருவதற்கு ஏற்ற காலகட்டமாகும்.

Sebasteen Anand

 மாஹேவை அடைவது எப்படி?

மாஹேவை அடைவது எப்படி?

மாஹே, நாட்டிலுள்ள பிற முக்கிய நகரங்களுடன் வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம், நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

Ezhuttukari.

 தலைநகரம்

தலைநகரம்

இதன் தலைநகரம் பாண்டிச்சேரி ஆகும். இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் வழக்கில் உள்ளன. மாவட்டங்கள் காரைக்கால், யானம், மாஹி ஆகியன. மாஹியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்

ShajiA

Read more about: travel pondicherry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X