» »கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

Posted By: Udhaya

வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரம் பாகா, கலங்கூட் மற்றும் அஞ்சுனா போன்ற கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது.

மேலும் கோவா தலைநகர் பனாஜி, மாபுஸாவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கோவாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் மாபுஸாவில் குறைந்த வாடகைக்கு ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்ள முடியும்.

கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

commons.wikimedia.org

மாபுஸாவின் வெள்ளிக்கிழமை சந்தையில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள், வேளாண்மை பொருட்கள், பழவகைகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

commons.wikimedia.org

அதுமட்டுமில்லாமல் மாபுஸா நகரம் அதன் பல்வகை கடற்கரை உணவுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

பனாஜி உள்ளிட்ட கோவாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாபுஸாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

commons.wikimedia.org

இது தவிர வாடகை கார்களின் மூலமும் நீங்கள் மாபுஸா நகரத்தை அடையலாம். ஆனால் ஒரு சில கார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீங்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.

செயின்ட் ஜெரோம் தேவாலயம்

கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

commons.wikimedia.org

கோவாவின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான ரெய்ஸ் மகோஸ் கோட்டையின் அடிவாரத்தில் செயின்ட் ஜெரோம் தேவாலயம் அமைந்திருக்கிறது. இந்த ரெய்ஸ் மகோஸ் கோட்டையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி நடக்கும் 'பெஸ்டா டோஸ் ரெய்ஸ் மகோஸ்' என்ற திருவிழா பயணிகளிடையே மிகப்பிரபலம்.

கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!

commons.wikimedia.org

கோவாவின் முக்கிய நகரங்களான பனாஜி, மார்கோ மற்றும் வாஸ்கோவிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக செயின்ட் ஜெரோம் தேவாலயத்தை அடைந்து விடலாம். அதேபோல கேண்டலிம், பாகா, கலங்கூட் போன்ற வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வருபவர்கள், வாடகை கார்களிலோ அல்லது ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டோ தேவாலயத்துக்கு வந்து சேரலாம்.

Read more about: travel