Search
  • Follow NativePlanet
Share
» »பஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..!

பஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..!

கிரேக்கர்கள் மற்றும் ஜொராஷ்டிரர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் முக்கியப் பகுதியாக இருக்கும் பஞ்சாப்’பின் வரலாறு சொல்லும் அந்த அழகிய கோட்டைகள் பற்றி தெரியுமா ?

வட மேற்கிந்தியாவில் வீற்றிருக்கும் பஞ்சாப் மாநிலமானது இந்தியாவில் மிகச்சிறிய மாநிலங்களின் ஒன்றாக இருந்தாலும் வளமான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பஞ்சாப்பின் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் மத்திய ஆசியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து போர்களை நிகழ்த்தினர். இந்திய மண்ணின் வரலாறு இக்காலம் முதலே மாறுகிறது. தொடர்ந்து, கடல் வழியாக இந்தியாவின் தென்பகுதிக்கு வந்து பின்னர் இந்தியா முழுமையும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. அது ஒரு தனி வரலாறாக நீண்டு முடிந்தது. கிரேக்கர்கள் மற்றும் ஜொராஷ்டிரர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் இந்த பஞ்சாப் பூமி உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கிறது. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் வளமான பூமியாக பஞ்சாப் தேசத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் அடுக்கிக் கொண்டே சேல்லலாம், அத்தனை உள்ளது இந்த பஞ்சாப்பில். இத்தகைய பஞ்சாப்பில் நம் வரலாறு தேடி கோட்டைகளுக்கெல்லாம் பயணம் செய்யலாம் வாங்க.

வரலாற்றுச் சின்னங்கள்

வரலாற்றுச் சின்னங்கள்


பஞ்சாப்'பில் சங்க்ரூரில் அமைந்துள்ள ஷீஷ் மஹால், ஃபரித்கோட்டில் அமைந்துள்ள ராஜ் மஹால், கிலா முபாரக், கபூர்தாலாவில் உள்ள எலிசீ அரண்மனை மற்றும் ஜகத்ஜீத் அரண்மனை, பட்டியாலா ஷீஷ் மஹால் உள்ளிட்டவை பிரசிதிபெற்ற அரண்மனைகளாகும். இதன் அழகையும், கட்டிடக் கலையின் நேர்த்தியையும் காண்பதற்காகவே வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகளும், வரலாற்று ஆய்வாலர்களும் என பல்லாயிரக் கணக்கானோர் பஞ்சாப் நோக்கி படையெடுக்கின்றனர்.

Guneeta

ஷீஷ் மஹால்

ஷீஷ் மஹால்


பஞ்சாப்பிற்கு வேலை நிமித்தமாகவோ, அல்லது சுற்றுலாவோ செல்ல நேர்ந்தால் தவறாமல் சென்று காண வேண்டிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று இந்த ஷீஷ் மஹால். சங்க்ரூரில் அமைந்துள்ள இது பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சங்க்ரூரிலிருந்து சுமார் 58 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஷீஷ் மஹால். இந்த மஹாலின் பெயரை போலவே இங்கே கண் கவரும் வண்ண கண்ணாடிகள் பல உள்ளன. பெரும்பாலும் இந்த மஹால் கண்ணாடி மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது. அழகிய தோட்டங்கள், அடுக்குத்தளங்கள், நீரூற்றுகள் மற்றும் செயற்கை ஏரியுடன் வண்ண மயமான இடமாக காட்சியளிக்கிறது. ஷீஷ் மஹால் நரேந்தர சிங் மகாராஜாவால் 1845-ஆம் கட்டப்பட்டதாகும். பின்னர் இது மலெர்கோட்லா நவாபிற்கு குடியிருப்பிடமாக திகழ்ந்தது. சங்க்ரூரிலிருந்து இத்தலத்தை வந்தடைய பேருந்து வசதிகளும், வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

Faizanahmad

ராஜ் மஹால்

ராஜ் மஹால்


ஃபரித்கோட் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ராஜ் மஹால், மகாராஜா பிக்ரமா சிங் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். மேலும், இது பல்பீர் சிங் மேற்பார்வையின் கீழ் நிர்மானிக்கப்பட்டது. இந்த அழகான மற்றும் பிரம்மாண்டமான மாளிகையின் உள்லே காவல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகைகள் பிரஞ்சு கட்டிடக்கலையின் தாக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. முன்னதாக, இந்த மஹால் அரச குடும்பத்தின் குடியிருப்பு இடமாக இருந்தது. தற்போதும் மகாராஜா பிக்ரம சிங்கின் வம்சாவளிகள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த அழகிய மஹால் பச்சை புல்வெளிகளுடனும் அழகிய காவல் கோபுரங்களுடனும் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த மாளிகையின் சுவர்கள் ஒவ்வொன்றும் பெருமை வாய்ந்த பழங்கால ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாரம்பரியமான கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு ராஜ் தியோரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் பல்பீர் மருத்துவமனை என்ற மருத்துவமனையும் தற்போது செய்லபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Arumes

கிலா முபாரக்

கிலா முபாரக்


கிலா முபாரக் முதலில் ராஜா மோகல்ஸியால் கட்டப்பட்டு, ராகா ஹமிர் என்பவரால் புதுபிக்கப்பட்டது. ராஜா பிக்ரம் சிங் மற்றும் ராஜா பல்பீர் சிங் போன்றோர் இங்கு பல புதிய கட்டிடங்களைக் கட்டி விரிவு படுத்தியுள்ளனர். இந்த பழையான நினைவுச்சின்ன வளாகத்தில் அரச அரண்மனை, டொஸ்ஹ க்ஹனா, மோடி க்ஹனா மற்றும் கருவூலம் போன்றவை உள்ளன. நன்கு கட்டப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் ஓய்வெடுக்கத் தகுந்த ஒரு அழகிய தோட்டமும் உள்ளது.

Basukashyap

எலிசீ அரண்மனை

எலிசீ அரண்மனை


கபூர்தாலாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான எலிசீ அரண்மனை தற்போது பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 1862ல் கன்வார் விக்ரம சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை பிரஞ்சு குடியரசுத்தலைவரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dr Graham Beards

ஜகத்ஜீத் அரண்மனை

ஜகத்ஜீத் அரண்மனை


சைனிக் பள்ளி என வழங்கப்படும் ஜகத்ஜீத் அரண்மனை மஹாராஹா ஜகத்ஜீத்சிங் என்பவரால் 1900 ஆம் ஆண்டு பிரஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் மார்சல் மற்றும் அல்லா திட்டா ஆகியோரை வைத்து கட்டப்பட்டது. கலை வடிவமிக்க இது சற்று சிதிலமடைந்து காணப்பட்டாலும் இன்றும் தன் கம்பீரத்தை இழக்காமல் வரலாற்றை நமக்கு நினைவு கூறும் வகையிலேயே உள்ளது.

MSharma

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X