Search
  • Follow NativePlanet
Share
» »மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4

மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4

மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4

By Udhaya

உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக் ஏரியில் மிதக்கும் தீவுகள், முடிவில்லாத பசுமை விரிப்புகள் , அதன் மிதவெப்பமான பருவநிலை மற்றும் பழங்குடியினங்கள் ஆகியவை இந்த வடகிழக்கு மாநிலத்தின் தனித்துவமான வியக்கத்தக்க குணாதிசயங்களாக உள்ளன.

மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3

மணிப்பூரிலுள்ள ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலா தலங்களில் மணிப்பூரின் தலைநகரம் இம்பால் கண்கவரும் இயற்கையழகு மற்றும் வனவிலங்குகளை காண ஏற்றதாகும். வாருங்கள் மணிப்பூர் காடுகளுக்குள் உலாவலாம்.

 மிதக்கும் ஏரி

மிதக்கும் ஏரி

பல சுற்றுலாதலங்களையும் தன்னகத்தே கொண்டு, மணிப்பூர் மாநிலம் சுற்றுலாவில் பெரும்பங்கு வகிக்கிறது. ஏரிகள், தோட்டங்கள் மற்றும் சிகரங்கள் மற்றும் பல... உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் ஏரியான பிஷ்னுபூரின் லோக்டாக் ஏரி புமிடிஸ் அல்லது மீனவர்கள் வசிக்கும் மிதக்கும் தீவுகளுடன் மணிப்பூரின் மதிப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக உள்ளது. லோக்டாக் ஏரியில் உள்ள சென்ட்ரா தீவு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்பட்ட இடமாகும். இந்த ஏரியிலிருந்து தெரியும் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமான சங்காய் மான்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்திட முடியும்.
+
Meghroddur

சாகசம் செய்ய தூண்டும் ஏரிகள்

சாகசம் செய்ய தூண்டும் ஏரிகள்

தெமங்லாங் மாவட்டத்திலுள்ள ஸெய்லாட் ஏரி கண்கவரும் சுற்றுச் சூழலுடனும் மற்றும் சாகசம் செய்ய தூண்டுவதாகவும் உள்ள அதே வேளையில், தௌபல் மாவட்டத்தில் உள்ள வைய்தௌல் ஏரியும் சிறப்பு மிக்க காட்சிகளை காட்ட வல்லதாக உள்ளது. மணிப்பூரின் விவசாய மாவட்டமான தௌபல் கண்கவரும் நெல் வயல்களை அதன் அப்பழுக்கில்லாத தெளிந்த அழகின் ஒரு பகுதியாக கொண்டிருக்கிறது. ஐகோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி ஆகியவை தௌபல் மாவட்டத்திலுள்ள மற்ற சில ஏரிகளாகும். உக்ருள்-ல் உள்ள காசௌபுங் ஏரியின் இயற்கையாகவே உருவாகியுள்ள நீர்ப்பரப்புகளாக அதன் அருகிலுள்ள காயாங் நீர்வீழ்ச்சி உள்ளன.

ch_

அள்ள அள்ளக் குறையாத அனுவங்கள்

அள்ள அள்ளக் குறையாத அனுவங்கள்

சூரசந்த்பூரில் இருக்கும் இங்கலாய் நீர்வீழ்ச்சி மற்றும் குகா அணைக்கட்டு ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாக அறியப்படுகின்றன. உக்ருள்-ல் இருக்கும் ஷிருய் காசுங் சிகரத்தில் ஷிருய் லில்லி பூக்கள் கோடைகாலத்தில் பூத்துக் கிடப்பது கண்கவரும் காட்சியாக இருக்கும் அதே நேரத்தில், சன்டெலில் உள்ள புனிங் புல்வெளிகளும் அதன் மேடுபள்ளமான மற்றும் முடிவில்லாத புல்வெளிகள் வானுடன் கலக்கும் வியக்க வைக்கும் காட்சிகளும், அந்த புல்வெளி முழுமையும் காட்டு லில்லி பூக்கள் மற்றும் ஆர்கிட் பூக்கள் கோடைக்காலத்தில் பூத்து கிடப்பதை காண்பதும் மறக்க முடியாத காட்சிகளாக உங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். எனவே, சுற்றுலாப் பயணங்களைப் பொறுத்த வரையில், மணிப்பூரில் உள்ள இடங்கள் உங்களுக்கு வேண்டியதை தாராளமாக அள்ளிக் கொடுக்கும் வல்லமை பெற்ற இடங்களாகும்.

Mongyamba

இம்பால்

இம்பால்

இம்பாலிலும் காட்டுயிர் வாழ்க்கை வாழலாம். இங்கு நகர அமைப்பு இருந்தாலும், காடுகளுக்குள் செல்வதென்பது மிக அழகான ஒன்று. மலைகளை சமவெளிகளுடன் இணைக்கும் வகையில் இருக்கும் முடிவில்லாத நிலப்பகுதிகள் உங்களுக்கு மனம் மயக்கும் உணர்வுகளை கொடுக்கும். இதன் காரணமாகவே இம்பால் எந்த நாட்களிலும் அழகிய நகரமாக இருக்கிறது. இம்பாலை சுற்றியிருக்கும் இந்த பசுமையான மலைகள் தான் அதனை அரண் போல காத்து நிற்கின்றன.

Mongyamba -

நதிகள்

நதிகள்

இந்த தலைநகரத்தை சுற்றியிருக்கும் மலைகளை இம்பால், சேக்மே, இரில், தௌபல் மற்றும் குகா போன்ற சில நதிகளும் கடந்து செல்கின்றன. இந்த நகரத்தில் நிறைந்திருக்கும் பலாப்பழ மற்றும் பைன் மரங்கள் அதன் அழகுக்கு மெருகேற்றுகின்றன. இம்பால் அதன் கானகங்களின் அழகிற்காகவே பெரும்பாலும் அறியப்படும் நகரமாக இருக்கிறது. இம்பால் நகரம் கோவில்கள், பழமையான மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் நிரம்பியிருப்பதால் அது வரலாற்று ஆய்வாளர்களை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது. இம்பாலில் உள்ள போர் நினைவுச்சின்னங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.

Herojit th

மக்கள்

மக்கள்

காபுய், டாங்குல் மற்றும் பைய்ட் என்ற மலைவாழின மக்களும் இங்கே வசித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் குடியேறியுள்ளதால் இம்பாலில் மார்வாரி, பஞ்சாபி, பீகாரி மற்றும் பெங்கால் மக்களும் உள்ளனர், ஆனால் அவர்களுடைய எண்ணிக்கை தற்போது வேகமாக குறைந்து வருகிறது. மெய்டெய்லன் அல்லது மணிப்புரியை முதன்மையான மொழியாக கொண்டிருக்கும் இம்பாலில் ஆங்கிலம், இந்தி, திபெத்திய மற்றும் பர்மிய மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. இம்பாலில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் பலவும் உள்ளன.

Chipemmi Keishing

 காங்லா கோட்டை

காங்லா கோட்டை

இம்பாலில் சுற்றுலா பயணிகளால் அதிகமாக பார்க்கப்பட்ட இடமாக இருக்கும் காங்லா கோட்டை 2004-ம் ஆண்டு வரையிலும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் கீழ் இருந்து வந்தது. பின்னர் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் முறையாக இந்த கோட்டையை மாநில அரசாங்கத்தின் பொறுப்பிற்கு கொடுத்தார். காங்லா என்ற வார்த்தைக்கு மெய்ட்டி மொழியில் 'வறண்ட இடம்' என்று பொருள், இது இம்பால் நதிக்கரையில் உள்ளது. இம்பாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் க்வய்ரம்பான்ட் பஜாருக்கு ஒரு முறை சென்று வர வேண்டும். சுருக்கமாக 'இமா கெய்தெல்' என்று அழைக்கப்படும் இந்த தனித்தன்மை வாய்ந்த பஜாரை முழுக்க முழுக்க பெண்களே நடத்தி வருகின்றனர். 'இமா கெய்தெல்' என்ற வார்த்தைக்கு 'தாய்மார்கள் சந்தை என்று பொருளாகும். இம்பாலுக்கு வெளியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்களாக கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா, மோய்ரங், அன்ட்ரோ, செக்டா ஆகியவற்றை சொல்லலாம்.

Herojit t

தெமங்லாங்

தெமங்லாங்

தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை மற்றும் கலாச்சார மாறுபாடுகள் நிரம்பிய மாவட்டமாக தெமங்லாங் உள்ளது. அரிய வகை ஆர்கிட் பூக்கள், கறைபடாத கானகங்கள், அரிய உயிரினங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளும் உள்ள தெமங்லாங், ஹார்ன்பில் பறவைகளின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

Dangmei

 தெமங்லாங்-ஐ சுற்றியிருக்கும் சுற்றுலாப் பகுதிகள்

தெமங்லாங்-ஐ சுற்றியிருக்கும் சுற்றுலாப் பகுதிகள்

பாரக் நதி மற்றும் ஏழு நீர்வீழ்ச்சிகள், தாரோன் குகை, ஸெய்லாட் ஏரி மற்றும் புனிங் (N-பியுலோங்) புல்வெளி ஆகியவை தெமங்லாங்கை சுற்றியுள்ள சில சுற்றுலா தலங்களில் முக்கியமானவையாகும். உயிர்-பன்முகதன்மையின் உறைவிடம் தெமங்லாங் பகுதிகள் சில வகையான மிகப்புதுமையான மற்றும் அரிய உயிரின வகைகளைச் சேர்ந்த பறவைகளும் மற்றும் விலங்குளும் இருப்பதால் இவ்விடம் உயிர்-பன்முக தன்மையின் உறைவிடமாக கருதப்படுகிறது. தெமங்லாங் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹாக் மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டு நாய்கள், கழுதைப்புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகளை காணும் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இதன் வனப்பகுதிகளில் புலிகளையும் காண முடியும். .

Dangmei

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

இந்த வனப்பகுதிகள் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள், மூங்கில் காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல காடுகள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஸேலியாங்ரோங் நாகாஸ் மற்றும் குகிஸ் இனத்தவர் தெமங்லாங்கின் முக்கியமான பழங்குடியினராக உள்ளனர். ஆரஞ்ச் திருவிழா, ரிஹ்-ங்காய் (சாகா ங்காய்), குடுய்-ங்காய், பன்ருஹ்மெய் மற்றும் டாரங் என பல்வேறு திருவிழாக்களும் தெமங்லாங்கில் கொண்டாடப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து மிகவும் கடினமாக மாறிவிடுவதால், மழைக்காலங்களை சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

Dangmei

 சண்டேல்

சண்டேல்


மணிப்பூரின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றான சண்டேல் இந்தோ-மியான்மார் எல்லையில் அமைந்து அருகில் உள்ள பல இடங்களுக்கு நுழைவு வாயிலாக இருந்து வருகின்றது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல்லுயிர்வாழ்வினங்கள் இயற்கை தாயால் ஆசீர்வதிக்கப்பட்ட சண்டேல் மாவட்டத்தில் பலவித தாவரங்களையும் விலங்குகளையும் காணலாம். வண்ணக் கொத்து மலர்களும், அலங்காரச் செடி கொடிகளும் காண்போரை ஈர்க்கும். அனிசொமிலெஸ் இண்டிகா , அனோடிஸ் பீட்டிகா, கிராஸ்செஃபாலும் கிரிபிடியோடஸ் போன்ற அரிய வகை தாவரங்களையும் இங்கு காணலாம்.
Rohit klar

வாலில்லா ஹாலாக் கிப்பன்

வாலில்லா ஹாலாக் கிப்பன்

மருத்துவத் தன்மை கொண்ட உள்ளூர் மூலிகை தாவரங்களும் இங்கு பிரபலம். இங்கு பல அரிய வகை விலங்கினங்களையும் காண முடியும். இந்தியாவில் உள்ள ஒரே வாலில்லா ஹாலாக் கிப்பன் வகைக் குரங்கினை இங்கு காண முடியும். ஸ்லோ லோரிஸ், ஸ்டம்ப்டு வால் மெக்கேக், பன்றி வால் மெக்கேக் போன்ற விலங்கினங்களும் இங்குள்ளன. இங்கு சிறுத்தை மற்றும் கோல்டன் கேட் ஊனுண்ணிகளையும் காணலாம். வானிலையின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கான மியான்மரின் அருகில் உள்ள இடங்களில் இருக்கும் யானைகள் இங்கு தஞ்சம் அடைகின்றன. இந்த பல்லுயிர் வாழ்வினங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

Manuae

மணீப்பூரின் பின்தங்கிய கிராமம்

மணீப்பூரின் பின்தங்கிய கிராமம்

மணீப்பூரின் இந்த பின்தங்கிய கிராமத்தின் அழகையையும் உயிரினங்களையும் காண்பதற்காகவே உலகின் பல்வேறு இடங்கலிலிருந்து மக்கள் இங்கு சுற்றுலா வந்து, இயற்கை அழகில் மறைந்து விட ஆசைகொள்கின்றனர். இங்கு உயரத்திலிருந்து மணிப்பூரின் பல இடங்களைக் காணமுடியும். வேற்றுமையில் ஒற்றுமை வடகிழக்கு பகுதிகளில் பல பழங்குடியினர் ஒற்றுமையாக வாழும் இடங்களில் சண்டேலும் ஒன்று. இங்கு தலைமுறை தலைமுறையாக 20 பழங்குடி சமூகங்கள் வாழ்ந்து வருகின்றனர். மயோன், அனல், மாரிங், குகிஸ், பைட், சோதெ மற்றும் தாடு போன்ற பழங்குடியினர் இங்கு காணப்படும் முக்கிய பழங்குடியினர் ஆவர். பாரம்பரியமாக இங்கு வாழ்ந்து வரும் பழங்குடியினரை தவிர மற்ற இடங்களிலிருந்து வரும் பழங்குடி மக்களுக்கு இவ்விடம் வாழ்வளித்து வருகின்றது.

Asitjain

 மான்களின் தாயகம்

மான்களின் தாயகம்

பிஷ்ணுபூர் நகரத்திலும் அதனைச்சுற்றிலும் உள்ள சுற்றுலாத்தலங்கள் சாங்கை எனப்படும் அரியவகை நடனமாடும் மான்களின் தாயகம் பிஷ்ணுபூர் ஆகும். இன்றைய காலகட்டத்தில், உலகத்திலேயே இவ்வகையான மான்கள் காணப்படுவது மணிப்பூர் மாநிலத்தில் மட்டும்தான். கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் தென்பகுதியில், இவ்வகை மான்கள் வாழ்கின்றன. பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், தற்போது சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலங்களுள், இப்பூங்காவும் ஒன்று. கெய்புல் லாம்ஜாவ் தேசியப் பூங்காவினைச் சுற்றிலும் லோட்டக் ஏரி அமைந்து, கண்களுக்கு விருந்தாகும் காட்சியை அளிக்கிறது.

en.wikipedia.org

 உக்ருள்

உக்ருள்

பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், `உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. ஜனநெருக்கடியில் இருந்தும், கார்களின் அருவருப்பான ஒலியிலிருந்தும், உயரமான மற்றும் நெருக்கடியான கட்டிடங்களிருந்தும் இந்த சிறிய நகரம் பல மைல்கள் விலகி இருக்கிறது. இங்கு நீங்கள் வரும்போது சொர்கத்தின் வாசனையை கட்டாயம் உணர்வீர்கள். உக்ருளின் குடிமக்கள் போர்க்கலையில் வல்லவர்களான, `டங்க்ஹுல்' நாகா பழங்குடியினரின் இருப்பிடமான, உக்ருள் ஒரு வளமான பண்பாட்டு மையமாக திகழ்கிறது. இங்கு நடை பெறும் புகழ் பெற்ற உக்ருள் திருவிழா அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நாம் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள், மலைக் குன்றுகள், மற்றும் பசுமையை கண்டு ரசிக்கலாம்.

மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3

Zingkhai

Read more about: manipur india forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X