» »குஜராத்தின் சபுத்திரா மலைப் பிரதேசத்தில் பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கு?

குஜராத்தின் சபுத்திரா மலைப் பிரதேசத்தில் பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கு?

By: Bala karthik

கடல் மட்டத்திலிருந்து தோராயமாக 1000 மீட்டர் உயரத்தில் காணப்படுமோர் அழகிய மலை வாசஸ்தலம் தான் இந்த சபுத்தராவாகும். குஜராத் மாநிலத்தின் டங்க் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபுத்தரா, டங்க் காட்டு பகுதியின் பீடபூமியில் காணப்படுகிறது. இந்த இடமானது, பெரும்பாலானோர் திட்டத்துக்கு ஏதுவாக சிறந்து விளங்கும் மலைப்பகுதி ஓய்விடமாக காணப்பட, நீர்வீழ்ச்சியும், சூரிய உதய மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளுமென நம்மை வெகுவாக கவர்கிறது.


இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் சர்பங்கா நதியானது நகரத்தின் வலதுப்பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இடத்தின் பின்புலமானது பெருமூச்செறிந்து நம்மை பார்க்க வைக்க, பயணத்திற்கு ஏற்ற மற்றும் படகு வசதிகளையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. இயற்கை ஆர்வலர்களுக்கும், சாகச சீக்காளிகளுக்கும் இந்த இடமானது சிறந்த விடுமுறை வருடலாக அமைகிறது.

எப்படி நாம் அடைவது & அடைய சிறந்த நேரங்கள் எவை:

எப்படி நாம் அடைவது & அடைய சிறந்த நேரங்கள் எவை:


இந்த இடத்தை காண சிறந்த நேரங்கள்:

சபுத்தராவிற்கு நாம் வருடமுழுவதும் வந்து செல்ல, அனைத்து நாட்களுமே இவ்விடமானது சிறந்த கால நிலையை கொண்டு விளங்குகிறது.


சபுத்தராவை நாம் அடைவது எப்படி:

ஆகாய மார்க்கமாக அடைவது:

சூரத் விமான நிலையம் தான் 172 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுமோர் விமான நிலையமாகும். இந்த விமான நிலையமானது, நாட்டின் பல முக்கிய நகரங்களான தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என பல இடங்களுடன் இணைந்து காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது:

இங்கிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் வாகை இரயில் நிலையம் தான் அருகில் காணப்படும் இரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையமானது குஜராத்தின் பல முக்கிய நகரங்களுடன் இணைந்திருக்க, மற்றும் சில நிலையங்களும் மாநிலத்தின் வெளிப்புறத்தில் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது:

சபுத்தராவை நாம் அடைய சிறந்த வழியாக சாலைவழி காணப்படுகிறது. இந்த நகரமானது சாலையோடு நன்றாக இணைந்திருக்க, பல முக்கிய நகரங்களிலிருந்து சபுத்தராவிற்கு தினசரி பேருந்துகளும் காணப்படுகிறது. மும்பையிலிருந்து சபுத்தராவிற்கு ஒட்டுமொத்தமாக 248 கிலோமீட்டர்கள் ஆகிறது.

wikimedia

 வழிகளின் வரைபடம்:

வழிகளின் வரைபடம்:


மும்பையிலிருந்து சபுத்தராவிற்கு நாம் செல்ல கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழியை நாம் பின்பற்றலாம்.

வழி 1:

மும்பை - தானே - இகத்புரி - நாசிக் - டின்டோரி - போர்கன் - சபுத்தரா வழி தேசிய நெடுஞ்சாலை 160 மற்றும் சபுத்தரா - நாசிக் சாலை

வழி 2:

மும்பை - தானே - வாசை - மனோர் - தலச்சேரி - வபி - தரம்பூர் - ஹட்காட் - சபுத்தரா வழி தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 360.

வழி 3:

மும்பை - தானே - வாசை - மனோர் - தலச்சேரி - வபி - வல்சாத் - வன்ஸ்டா - சபுத்தரா வழி தேசிய நெடுஞ்சாலை 48.

நீங்கள் முதலாம் வழியை தேர்ந்தெடுத்து சபுத்தராவை அடைய ஆசைக்கொண்டால், 248 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியதாக உள்ளது. மும்பையிலிருந்து 4 மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த 248 கிலோமீட்டர்களை நாம் கடக்க தேவைப்படுகிறது.

நீங்கள் தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் 360இன் வழியாக செல்ல ஆசைக்கொண்டால், 326 கிலோமீட்டர்களின் மூலம் நாம் சபுத்தராவை அடையலாம். இந்த 326 கிலோமீட்டர்களை கடக்க உங்களுக்கு 5.5 மணி நேரம் தேவைப்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலை 48இன் வழியாக நாம் செல்ல, 294 கிலோமீட்டரை நாம் கடக்க, 6 மணி நேரம் தேவைப்படுகிறது.

 நாசிக்கில் காணும் சிறு நிறுத்தங்கள்:

நாசிக்கில் காணும் சிறு நிறுத்தங்கள்:

மகாராஷ்டிர மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாக நாசிக் காணப்பட, எண்ணற்ற ஆலயங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் இது விளங்குவதோடு, இந்த பகுதியை ஆண்ட பல ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டவை இவை என்பதும் நமக்கு தெரியவருகிறது.

Mahi29

 நாசிக்கில் காணும் சிறு நிறுத்தங்கள்:

நாசிக்கில் காணும் சிறு நிறுத்தங்கள்:

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா இங்கே கொண்டாடப்பட, அவ்விழாவானது வெகுசிறப்பாக, உலகம் முழுவதும் பலரும் கூடும் விழாவாகவும் அமைகிறது. இங்கே நிகழும் இவ்விழாவானது மற்ற புனித நகரங்களான அலஹாபாத், உஜ்ஜைய்ன் மற்றும் ஹரித்வாருக்கு அப்பால்பட்டதாகவும் காணப்படுகிறது.

இங்கே காணப்படும் முக்கியமான ஆலயங்களாக... காலாராம், திரிம்பகேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் ஆலயங்கள் காணப்பட, இப்பகுதியில் காணப்படும் பழமையான ஆலயங்களுள் இதுவும் ஒன்று என்பதும் நமக்கு தெரிய வருகிறது. பாண்டவ்லேனி குகைகள் மற்றுமோர் முக்கிய ஈர்ப்பாக இங்கே அமைய, இந்த குகையானது 2000 வருடங்களுக்கு முன்னால் சில ஜெய்ன் அரசர்களால் செதுக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

Mahi29

 இலக்கு: சபுத்தரா:

இலக்கு: சபுத்தரா:

சபுத்தரா என்பதற்கு நாகங்களின் உறைவிடமென அர்த்தம் தர, இங்கே நம்மால் நாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயத்தையும் சர்ப்பகங்கா நதிக் கரையில் காண முடிகிறது.

இங்கே மேலும் சில இடங்கள், மதச்சார்புடன் முக்கியத்துவம் வாய்ந்து காணப்பட, அவை நாகேஷ்வர் மஹாதேவ் ஆலயம், சுவாமி நாராயணன் ஆலயம், மற்றும் ஜெய்ன் ஆலயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

nevil zaveri

 தோட்டங்கள்:

தோட்டங்கள்:


பல அழகிய தோட்டங்களுக்கு வீடாக இந்த மலைப்பகுதி காணப்பட, அவை படி தோட்டம், ரோஜா தோட்டம், மற்றும் ஏரி தோட்டம் என்பதும் நமக்கு தெரியவருகிறது. இங்கே நம்மால் கயிற்றின் மூலம் சறுக்கி விளையாடவும் முடிய, அதனை சுற்றியுள்ள இடங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Raneakshay00

 காந்தி ஷிகர்:

காந்தி ஷிகர்:

இங்கே முக்கியமான இடமாக காந்தி ஷிகர் அல்லது சூரிய அஸ்தமன புள்ளி காணப்படுகிறது. இந்த இடமானது சவுகரியமான நிலையை பெற்றிட, இங்கே டங்க் காடுகள் நம் மனதில் அழகிய காட்சியை பதிவு செய்கிறது. இங்கே பழங்குடி கிராமங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையையும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கு சிறந்த இடங்களுள் இதுவும் ஒன்றாகவும் விளங்குகிறது.

Yashsaboo99

 சூரிய உதயப் புள்ளி:

சூரிய உதயப் புள்ளி:

சூரிய அஸ்தமனப் புள்ளிக்கு எதிர்கோட்டில் காணப்படும் இவ்விடம், பசுமையான இலைகளை கொண்டு மனதை குதுகலிக்க செய்கிறது. இந்த குளுமையான இடமானது மனதினை வருட, இங்கே நாம் பார்ப்பதன் மூலம் தங்க நிற அழகிய கதிர்வீச்சுகள் மெல்ல எழுவது நம் கண்களை வெகுவாக கவர்கிறது.

Manisitlani

 கிரா நீர்வீழ்ச்சி:

கிரா நீர்வீழ்ச்சி:


இந்த நீர்வீழ்ச்சியானது கப்ரிக்கு துணையாக தொடங்க, இதன் நீரானது 30 மீட்டர் உயரத்தில் இருந்து அம்பிகா நதியில் விழுகிறது. பருவ மழைக்காலம் தான் இந்த நீர்வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரமாக அமைகிறது.

JB Kalola (patel)

 வன்ஸ்டா தேசிய பூங்கா:

வன்ஸ்டா தேசிய பூங்கா:

வன்ஸ்டா மஹாராஜாவின் தனியார் காடுகளில் இது காணப்பட்டது. இந்த தேசிய பூங்கா, 24 சதுர கிலோமீட்டர்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது. அளவில் இவ்விடம் சிறிதாகவும் காணப்பட, சிறுத்தைப்புலி, புலிகள், மலைப்பாம்புகள் என பல சிறந்த விலங்குகளின் வாழ்விடமாகவும் விளங்குகிறது.

Vijaymp

 கைவினைஞர் கிராமம்:

கைவினைஞர் கிராமம்:

கைவினைஞர்களின் திறமையை தெரிந்துக்கொள்ள உதவும் ஓர் சிறந்த இடமாக இது விளங்க, வார்லி ஓவியங்களின் அழகானது சபுத்தராவில் அமைந்து இந்த கைவினைஞர் கிராமத்தின் பெருமையை உணர்த்துகிறது. இந்த கிராமமானது பழங்குடியினரின் கலை நயத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்க, கைவினைஞர்களின் கைவினை அனுபவமும் நம்மை சிலிர்க்க வைக்கிறது. இந்த இடமானது நாம் கற்றுக்கொள்ள சிறந்த இடமாக அமைய, உள்ளூர் கலாச்சாரத்தை பற்றியும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

Unknown

 ஹட்காத் கோட்டை:

ஹட்காத் கோட்டை:

சபுத்தரா தொடர்ச்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை, பதினேழாம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜியால் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அடர்த்தி மத்தியில் கட்டப்பட்டதாகும். இந்த கோட்டையானது இன்று இடிபட்ட நிலையில் காணப்பட, சுற்றுபுறத்தின் அழகியலை தந்து நம்மை பரவசத்தில் தள்ளுகிறது.குஜராத்தின் சபுத்திரா மலைப் பிரதேசத்தில் பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கு?

Sumeet photography

Read more about: travel, hills