Search
  • Follow NativePlanet
Share
» »நிசப்தம் நிலவும் இமாலய பள்ளத்தாக்கு பகுதிக்கு ஓர் அற்புத பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்

நிசப்தம் நிலவும் இமாலய பள்ளத்தாக்கு பகுதிக்கு ஓர் அற்புத பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்

நிசப்தம் நிலவும் இமாலய பள்ளத்தாக்கு பகுதிக்கு ஓர் அற்புத பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக நக்கர் எனும் இந்த புராதன நகரம் அமைந்துள்ளது. இது குல்லு மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியிருக்கிறது.

அருமையான இயற்கைக்காட்சிகளை கொண்ட இந்த சுற்றுலாத்தலம் வடமேற்கு பள்ளத்தாக்குகளின் அழகை ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது. விசுத்பால் மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரத்தை 1460ம் ஆண்டில் ஜகத்சிங் எனும் மன்னர் கைப்பற்றி தலைநகரை சுல்தான்பூருக்கு (தற்போதைய குல்லு) மாற்றினார். அதற்குமுன்பு வரை குல்லு ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இந்த இடம்தான் இருந்துள்ளது.

கோட்டைகள்

கோட்டைகள்


நக்கர் சுற்றுலாத்தலத்தில் சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஜகதிபட் மற்றும் நக்கர் கோட்டை ஆகிய இரண்டும் பிரதான அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

hpkullu.nic.in

பழமை

பழமை

500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள நக்கர் கோட்டை தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டு பியாஸ் ஆற்றங்கரையின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

himachaltourism.gov.in

 ஓவியங்கள்

ஓவியங்கள்

இவை தவிர, நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரியில் ரஷ்ய ஓவியரான நிக்கோலாஸ் ரோலரிச் மற்றும் அவரது மகன் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

commons.wikimedia.org

 மடாலயம்

மடாலயம்


தக்போ ஷெத்ருப்லிங் எனப்படும் மடாலயமும் இங்கு பியாஸ் ஆற்றின் இடது கரையில் வீற்றுள்ளது. இது தலாய் லாமா அவர்களால் 2005ம் ஆண்டில் திறக்கப்பட்டுள்ளது.

Akshat Sharma

 கோயில்கள்

கோயில்கள்

ஆன்மீக யாத்ரீகர்கள் விரும்பும் படியாக எண்ணற்ற கோயில்கள் இந்த நக்கர் நகரத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் திரிபுர சுந்தரி கோயில், சாமுண்ட பகவதி கோயில் மற்றும் முரளிதர் கோயில் ஆகியவை கட்டிடக்கலை அம்சங்களுக்கும் திருவிழாக்களுக்கும் புகழ்பெற்று அறியப்படுகின்றன.

Anubhav K

 மீன் பிடி பொழுதுபோக்கு

மீன் பிடி பொழுதுபோக்கு

நக்கர் சுற்றுலாத்தலம் சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களான மீன் பிடிப்பு, டிரக்கிங் மற்றும் ஆற்று படகுப்பயணம் போன்றவற்றுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. தூண்டில் மீன் பிடிப்பில் ஆர்வம் உள்ள பயணிகள் பியாஸ் ஆற்றில் இந்த பொழுது போக்கில் ஈடுபடலாம்.

AthulBiju94

 மலையேற்றம்

மலையேற்றம்

பிரம்மாண்டமான இமயமலையின் அடிவார மலைகளில் உள்ள சந்தர்கனி பாஸ், ஜலோரி பாஸ் மற்றும் பின் பார்வதி பாஸ் போன்ற மலைப்பாதைகள் ட்ரெக்கிங் எனும் மலையேற்றத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளன.

 திரிபுர சுந்தரி கோயில்

திரிபுர சுந்தரி கோயில்

நக்கர் சுற்றுலாத்தலத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா அம்சமாக இந்த திரிபுர சுந்தரி கோயில் அமைந்துள்ளது. பகோடா பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கோயில் மரக்கட்டுமானங்களுடன் மூன்று அடுக்குகளைக்கொண்டுள்ளது.

వేదపండిత

 சாமுண்ட பகவதி கோயில்

சாமுண்ட பகவதி கோயில்

நக்கர் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள நிஷாலா எனும் கிராமத்தில் உள்ள இந்த சாமுண்ட பகவதி கோயில் அதே பெயரைக்கொண்ட தெய்வத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

Koshy Koshy

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

நக்கர் சுற்றுலாத்தலத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரையான பருவம் இங்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. நக்கர் சுற்றுலாத்தலத்தின் குளிரை அனுபவிக்க விரும்பும் பயணிகள் குளிர்காலத்திலும் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

Vanamonde93

Read more about: silent valley himalayas
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X