Search
  • Follow NativePlanet
Share
» »மணலில் புதையுண்ட ஊர்கள்! தமிழகத்தில் இப்படியும் கூட இடமிருக்கா?

மணலில் புதையுண்ட ஊர்கள்! தமிழகத்தில் இப்படியும் கூட இடமிருக்கா?

மணலில் புதையுண்ட ஊர்கள்! தமிழகத்தில் இப்படியும் கூட இடமிருக்கா?

செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி என்றும் தேரிக்காடு என்றும் அழைப்பர்.

இப்படி பட்ட இடங்கள் பெரும்பாலும் நீர் ஆதாரம் இல்லாமல், செம்மண் காடுகளாக இருக்கும். இங்கு பனை போன்ற அதிகம் நீர்த் தேவைப்படாத மரங்கள் வளரும்.

சுற்றுலா வசதிகள் பெரும்பாலும் இல்லை என்றாலும், இப்படியும் இடங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் என்ன என்று சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நாமும் சென்று வரலாமே...

 தமிழகத்தில் எங்குள்ளது

தமிழகத்தில் எங்குள்ளது

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, இராதாபுரம் வட்டங்களில் ஏறத்தாழ 390 சதுர கி.மீ. பரப்பில் தேரிநிலம் காணப்படுகிறது.

K.Natarajan

 தேரி மணல் மேடுகள்

தேரி மணல் மேடுகள்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம், சாயர்புரம் பகுதிகளில் தேரி மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. அக்காலத்தில் கடல் மட்டங்கள் ஏற்ற இறக்கமாக இருந்திருப்பதை காட்டுகிறது.

ArulPrasad

 கண்டெடுக்கப்பட்ட கருவிகள்

கண்டெடுக்கப்பட்ட கருவிகள்

இந்த இடங்களில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் வெண்மண் படிந்த கருவிகள் இடைப்பட்ட காலத்தியதாகவும், செம்மண் படிந்த கருவிகள் அதற்கு முந்தைய காலத்தியதாகவும் இருக்கும். மேலும் இடைக்கற்கால, புதிய கற்கால கருவிகளும் காணப்படுகின்றன.

wiki

 மணலில் புதையுண்ட ஊர்கள்

மணலில் புதையுண்ட ஊர்கள்

இடையன்குடி, நடுவக்குறிச்சி, அரசூர், குதிரைமொழி போன்ற ஊர்களில் சில மண்மேடுகளுக்கடியில் பழைய ஊர்கள் புதையுண்டிருக்கலாமென வாய்மொழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. சொக்கன்குடியிருப்பு என்ற ஊரில் மணலுக்கடியிலிருந்த மணல்மாதா கோவில் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

K.Natarajan

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள்


மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குரங்கு ஆறு, பணகுடி, வடக்கன்குளம் என ஓடி, பெருமணலில் கடலில் கலக்கிறது. நம்பியாறு கூத்தங்குழி அருகே கடலில் கலக்கிறது.

மணப்பாடு, குலசேகரப்பட்டினம் இடையே கறுமேனி ஆறு கடலில் கலக்கிறது.

K.Natarajan

மீன்வளத்தைக் காக்கும் செம்மண் மடை

மீன்வளத்தைக் காக்கும் செம்மண் மடை

ஆற்றுவெள்ளம் கடலை அடையும்போது, தேரிக்களின் வழி ஓடி செம்மண்களையும் இழுத்துச் செல்லும். கடலின் அடியில் படியும் இந்த மடைப்பகுதியில் மீன்கள் முட்டையிடும். இதனால் மீன் வளம் அதிகரித்துகடல் வாழ்வாதாரம் சிறக்கும்.

மயில்களின் உலகம்

மயில்களின் உலகம்


இந்த பகுதிகளில் அதிக அளவில் மயில்களும் காட்சியளிக்கின்றன. பனை மரங்களும், முருங்கை மரங்களும் அதிகளவில் காட்சிதருகின்றன.

K.Natarajan

உடன்குடி

உடன்குடி

கருப்புக்கட்டி எனப்படும் கருப்பட்டி பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவு. இது மிகவும் சுவையானது அத்துடன் உடலுக்கும் ஏற்றது. உடன்குடி எனும் ஊர்தான் ஆசியாவிலேயே அதிகம் கருப்பட்டி தயாரிக்கும் இடமாக கருதப்படுகிறது.

wiki

 பனைமரத்தொழில்கள்

பனைமரத்தொழில்கள்

பனைசார் தொழில்களே தேரிக்காட்டின் மிகப்பரவலான தொழிலாகும். பனை மரமேறி நுங்கு, பதநீர், கள் முதலானவற்றை இறக்குவதும், பதநீரிலிருந்து கருப்புக்கட்டி என்ற கருப்பட்டி காய்ச்சுவதும், பனையோலைகளைக்கொண்டு பெட்டி, பாய் முதலானவற்றைச்செய்வதும், பனைநாரைக்கொண்டு கட்டில் கட்டுதல், நாற்காலி பின்னுதல், வடக்கயிறு செய்தல், மட்டையைச்சீவி விற்பது போன்ற தொழில்களே முதன்மையானவை.

K.Natarajan

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயிலிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் வசதிகள் உள்ளன.

K.Natarajan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X