Search
  • Follow NativePlanet
Share
» »சீசன் இல்லாவிட்டிலும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்!

சீசன் இல்லாவிட்டிலும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்!

சீசன் இல்லாவிட்டிலும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்!

சரணாலயம் என்பது விலங்குகளின் புகலிடம். காட்டுவிலங்குகள் சில குறிப்பிட்ட காடுகளில் பரப்பில் குவிந்து இருக்கும். அவைகளின் நலவாழ்வுக்காக அவற்றை மனிதர்களிடமிருந்து பிரித்து தனியே வைத்திருப்பர். மேலும், சில இடங்களில் விலங்குகளை காட்சிபடுத்தியும் வைத்திருப்பர். ஆனால் பறவைகள் சரணாலயம் கொஞ்சம் வித்தியாசமானது.

பெரும்பாலும் பறவைகள் நாடோடிகளாக உலகம் முழுவதும் சுற்றிவரும். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இந்தியாவுக்கு வரும்,. ஆனால் இந்த முறை சீசன் இல்லை எனினும் இந்த சரணாலயத்துக்கு பல ஆயிரக்கணக்கான பறவைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

 பழமையான சரணாலயம்

பழமையான சரணாலயம்

நாட்டிலேயே மிகவும் பழமையான பறவைகள் சரணாலயம் சென்னை அருகேயுள்ள வேடந்தாங்கலில் உள்ளது. இங்கு அதே பெயரில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பு 40 ஹெக்டேர் ஆகும். இங்கு மே அல்லது ஜூன் மாதங்களில் சீசன் தொடங்கும் போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வரும்.

வேட்டைகிராமம்

வேட்டைகிராமம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது, இந்த ஏரியை பறவைகளை வேட்டையாட பயன்படுத்திவந்துள்ளனர்.இதனால் இது வேட்டைகிராமம் எனப்பெயர்பெற்றது. பின்னாளில் இது பறவைகள் சரணாலயமானது.

 இயற்கை எழில் கொஞ்சும் ஏரி

இயற்கை எழில் கொஞ்சும் ஏரி

வேடந்தாங்கல் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால் இங்கு எவ்வித இடையூறும் இன்று முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக ஏராளமான பறவைகள் வருகின்றன. கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரும்.

எங்குள்ளது

எங்குள்ளது

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.

பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயம்


வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் (அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பை பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், "வேட்டையாடும் களம்" என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட கட்டமைப்பாக அமைந்துள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை சரணாலயமாக மாற்றப்பட்டது.

wiki

 அரசாணை

அரசாணை

வேடந்தாங்கல் பகுதியை பறவைகள் சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரசாணை வெளியிடப்பட்டது, அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியது. பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு புகலிடமாக உள்ள வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி, மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.

wiki

 அருகிலுள்ள மற்ற இடங்கள்

அருகிலுள்ள மற்ற இடங்கள்

வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிகில்லி பறவைகள் சரணாலயம். சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள் சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுகொள்ளலாம்.

wiki

காலநிலை

காலநிலை


பொதுவாக, இங்கு மே அல்லது ஜூன் மாதங்களில் சீசன் தொடங்கும். ஆனால் தற்போது வேடந்தாங்கலில் சீசன் இல்லாத நிலையிலும் 5,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இதனால் இன்று முதல் மக்கள் பார்வைக்காக இந்த சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சரணாலயத்தை பார்வையிடலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X