Search
  • Follow NativePlanet
Share
» »தெக்கால போனா திற்பரப்பு, இங்கிட்டு திருமூர்த்தி காணும் இடமெல்லாம் அருவிகள் - இந்த விசயம் உங்களுக்கு

தெக்கால போனா திற்பரப்பு, இங்கிட்டு திருமூர்த்தி காணும் இடமெல்லாம் அருவிகள் - இந்த விசயம் உங்களுக்கு

தெக்கால போனா திற்பரப்பு, இங்கிட்டு திருமூர்த்தி காணும் இடமெல்லாம் அருவிகள் - இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

By Udhaya

குளிர் கொஞ்சம் கொஞ்சமா விலகி கொளுத்த ஆரம்பிக்குது வெய்யில். முன்னாடிலாம் மார்ச் மாத இறுதியில் வரக்கூடிய அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் இப்போதே வந்துடிச்சி. இந்த நேரத்த அருமையாக பயன்படுத்தி பலர் சுற்றுலாவுக்கு போவாங்க.. அருவிகளையும், மலைகளையும் கண்டு ரசிப்பாங்க. இப்பதான் அலுவலகங்களிலும் சரி, கல்வியகங்களிலும் சரி வருட இறுதி, வேகமாக ஓடு என்று விரட்டி விரட்டி உங்கள் மூளையை பிச்சி ஜூஸ் போட்டு குடிக்க ஏற்பாடு பண்ணுவாங்க.. நீங்கனு இல்ல. பிப்ரவரி மாதம் ஆரம்பிச்சிடிச்சினாலே இனி வேலைப்பளுவும் அதிகமாக மண்ட சூடாகிடும். அத ஜில் பண்ண சூப்பரான தலங்களுக்கு நாம பிக்னிக் போகணும். வார இறுதியில சூப்பரா ஒரு பிளான் போட்டு இப்படிப்பட்ட இடங்களுக்கு ஒரு சூப்பர் டூப்பர் டூர் போய்ட்டு வந்துடலாமா வாருங்கள். செல்லலாம்.

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவி


திற்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிர பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பனை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.

Balurbala

 திற்பரப்புக்கு வழிகாட்டி

திற்பரப்புக்கு வழிகாட்டி

நம் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பித்தோமேயானால், இந்த அருவி கிட்டத்தட்ட 60கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

தேசியநெடுஞ்சாலை எண் 66 வழியாக பயணித்தால் 1.30மணி நேரத்தில் அடையமுடியும்.

கன்னியாகுமரியிலிருந்து மூன்று வழிகளில் இந்த அருவிக்கு செல்லமுடியும்.

தடம் 1 : புத்தளம் - ராஜாக்கமங்கலம் - கந்தன்விளை - தக்கலை - வேர்கிளம்பி - திற்பரப்பு

தடம் 2 : கொட்டாரம் - சுசீந்திரம் - நாகர்கோயில் - தக்கலை - திருவட்டாறு

தடம் 3 : நாகர்கோயில் - அழகிய பாண்டி புரம் - குலசேகரம் - திற்பரப்பு

இதில் இரண்டாவது வழித்தடம் குறைந்த தூரம் என்றாலும் சற்று போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. முதல் வழித்தடம் போக்குவரத்து குறைந்த ஓரளவுக்கு சிறப்பான பாதை.

அகத்தியர் அருவி

அகத்தியர் அருவி


அகத்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால் கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.

L.vivian.richard

அகத்தியர் அருவிக்கு வழிகாட்டி

அகத்தியர் அருவிக்கு வழிகாட்டி

திருநெல்வேலியிலிருந்து 58கிமீ தூரத்தில் இருந்தாலும், இதன் பயண தூரம் 1.30மணி நேரம் ஆகும். மேலும் அதிக போக்குவரத்து நெரிசலை நேரத்துக்கு ஏற்றவாறு அனுபவிக்க வேண்டி வரும். எனினும் மாற்று பாதையும் உள்ளது.

வழித்தடங்கள்

தடம் 1: திருநெல்வேலி - சேரன்மாதேவி - கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் - பாபநாசம்

தடம் 2 : திருநெல்வேலி - பத்தமடை - முக்கூடல் - எடைக்கல் - ஆழ்வார்குறிச்சி - பாபநாசம்

தடம் 3 : திருநெல்வேலி - அபிசேகப்பட்டி - நலன்குறிச்சி - கீழாம்பூர் - பாபநாசம்

முதல் பாதையே சிறந்தது. மற்றும் எளிமையானதும் கூட..

 குற்றாலம்

குற்றாலம்


தமிழ்நாட்டில் குற்றாலம் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை. குற்றால அருவிகள் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பாலருவி என்று ஒன்பது அருவிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவிகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும். எனவே ஜூன் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலும் குற்றாலம் வருவதற்கு ஏற்ற காலங்களாகும்.

Mdsuhail

குற்றாலம் வழிகாட்டி

குற்றாலம் வழிகாட்டி

பாபநாசத்திலிருந்து குற்றாலம் மிக அருகில் அமைந்துள்ளது. மலைப்பாதை என்பதால் சரியாக 1 மணி நேரத்தில் சென்றடையும் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இதன் பயணம் சுற்றிலும் பசுமையானதாக அமையும்.
மொத்தம் மூன்று வழித்தடங்கள் எளிமையாக செல்லும் வகையில் உள்ளது. எனினும் இவை கிட்டத்தட்ட ஒரே பாதை ஆகும்.

முதல் தடம் பாபநாசம் - ஆழ்வார்குறிச்சி - முத்துமலைபுரம் - குற்றாலம்

இரண்டாம் தடம் ஆழ்வார்குறிச்சி - பொட்டல்புதூர் - ஆவுடையனூர் - முத்துமலைபுரம்

மூன்றாம் தடம் வெங்கடம்பட்டி - சிவகாமிபுரம் - புல்லுக்கட்டு வலசை

முதல் தடமே சிறந்தது. எனினும் மற்ற இரு தடங்கள் மாற்றுப்பாதையாக வைத்துக்கொள்ளலாம்.

 சுருளி அருவி

சுருளி அருவி


தேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Mprabaharan

சுருளி அருவிக்கு வழிகாட்டி

சுருளி அருவிக்கு வழிகாட்டி

தேனியிலிருந்து 43கிமீ, மதுரையிலிருந்து 124கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த சுருளி நீர்வீழ்ச்சி. தேனியிலிருந்து தேநெஎ 183வழியாக வந்தால் 1 மணி நேரத்தில் வந்தடையலாம். மேலும் சில மாற்று வழித்தடங்களும் இருக்கின்றன. அதுவும் தேனியிலிருந்து ஒரே சாலையில் வந்தாலும், இடையிடையே மாற்று வழிகளிலும் பயணிக்க ஏதுவாக அமைந்துள்ளன.

தடம் 1 தேனி - சின்னமன்னூர் - உத்தமபாளையம் - சுருளிப்பட்டி - சுருளி நீர்வீழ்ச்சி

தடம் 2 தேனி ஓடைப்பட்டி கன்னிசேர்வாய்ப்பட்டி சுருளிநீர்வீழ்ச்சி

தடம் 3 சீபாளக்கோட்டை வழியாக சின்னமனூரை அடையலாம்.

குரங்கு நீர்வீழ்ச்சி

குரங்கு நீர்வீழ்ச்சி

மங்கீ ஃபால்ஸ் எனப்படும் குரங்கு நீர்வீழ்ச்சி ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

Siva301in -

குரங்கு நீர்வீழ்ச்சி வழிகாட்டி

குரங்கு நீர்வீழ்ச்சி வழிகாட்டி

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரே பாதை. அழகான வழித்தடத்துடன் அமைதியாக செல்லும் வகையில் அமைந்துள்ளது சமத்தூர், வேடச்சந்தூர் வழியாக குரங்கு நீர்வீழ்ச்சியை அடையலாம். இதன் அருகிலேயே ஆழியாறு அணை மிகச்சிறப்பாக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

 திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Hayathkhan.h

 திருமூர்த்தி அருவி வழிகாட்டி

திருமூர்த்தி அருவி வழிகாட்டி


பொள்ளாச்சியிலிருந்து ஒரு மணி நேரத்தில் செல்லும் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருமூர்த்தி அருவி. இதற்கு செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன.

வழித்தடம் 1 : கோலார்பட்டி - கொடிங்கியம் - மொடக்குப்பட்டி - திருமூர்த்தி அருவி

வழித்தடம் 2 : கோமங்கலம் புதூர் - அந்தியூர் - முக்கோணம்- வாழவாடி - தாலி

வழித்தடம் 3 : சமத்தூர் - பொன்னாச்சியூர் - வேடச்சந்தூர் - திருமூர்த்தி அருவி

கிளியூர் அருவி

கிளியூர் அருவி

கிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

Antkriz

கிளியூர் அருவி வழிகாட்டி

கிளியூர் அருவி வழிகாட்டி

சேலத்திலிருந்து 1 மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளது இந்த கிளியூர் அருவி. இதன் அருகினில் ஏற்காடு அமைந்துள்ளது.

சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி, 60அடி பாலம் தாண்டி தேநெஎ 188 வழியாக சென்றுக்கொண்டிருந்தால், மலையேற்றப்பாதையில் ஒரு மணி நேரத் தொலைவில் ஏற்காடு மலையை அடையலாம். அங்கிருந்து பத்து நிமிடங்களில் இந்த நீர்வீழ்ச்சியை அடையமுடியும்.

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார்பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது அற்புதமான அனுபவம். மேலும் அருவிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.

Mithun Kundu

 ஒகேனக்கல் அருவி வழிகாட்டி

ஒகேனக்கல் அருவி வழிகாட்டி

ஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 48கிமீ தொலைவில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்தூர் மற்றும் பென்னாகரம் வழியாக 1 மணி நேரத்தில் எளிதாக அடையமுடியும்.

பெங்களூருவிலிருந்தும் இந்த அருவியை எளிதாக அடையலாம். இதுமிகவும் சிறப்புமிக்க சுற்றுலாத் தளமாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X