Search
  • Follow NativePlanet
Share
» »சபரி மலைக்கு செல்லும் வழியில் இந்த கோவில்களுக்கு செல்வது கட்டாயமா?

சபரி மலைக்கு செல்லும் வழியில் இந்த கோவில்களுக்கு செல்வது கட்டாயமா?

சபரி மலைக்கு செல்லும் வழியில் எந்தெந்த கோவில்களுக்கு செல்லவேண்டும் என்பது தெரியுமா?

By Udhaya

திருச்செந்தூர் - கன்னியாகுமரி - சபரிமலை ஓர் ஆன்மீகச் சுற்றுலா

கார்த்திகை மாதம் பிறந்ததும் தாய் அல்லது குருசுவாமி கையால் மாலை அணிந்து, அசைவம் தவிர்த்து, காலை மாலை இருவேளை குளிர்ந்த நீரில் குளித்து, பூஜைகள் செய்து, 48 நாள்கள் விரதமிருந்து, அய்யப்பனை வழிபட சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் செல்லும் வழியில் பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் மிக முக்கியமான கோவிலான திருச்செந்தூருக்கும், புனித தலமான கன்னியாகுமரிக்கும் ஐயப்ப பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அந்த வகையில், திருச்செந்தூர் முதல் சபரிமலை வரை ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழிகள், கோவில்கள் பற்றி காணலாம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

தென் தமிழகத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக வரும் கோவில் திருச்செந்தூர். தற்போது அதிகளவிலான வடதமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பிற நகரங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு வருகை தரும் ஐயப்பப்பக்தர்கள், செந்தூர் முருகனை வேண்டிச் செல்கின்றனர்.

PC: Ramasubramaniyan Krishnamoorthy

கடலின் அழகியத் தோற்றம்

கடலின் அழகியத் தோற்றம்

திருச்செந்தூர் கோவில் அருகேயுள்ள கடலின் அற்புதமான தோற்றம் இதோ. இந்த கடலில் தான் ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி செந்தூர் முருகனை தரிசிப்பது வழக்கம்.

PC: Arvind Balaraman

கடற்கரையிலிருந்து கோபுரத் தோற்றம்

கடற்கரையிலிருந்து கோபுரத் தோற்றம்

கடற்கரையில் இளைப்பாறி அங்கிருந்து பார்க்கும்போது கோபுரத்தின் தோற்றம் இது. கடற்கரையிலிருந்து சூரியனை வழிபட்டு பின் கோபுரத்தை வழிபடுவார்கள்.

PC: srinavin kumar

கோவிலின் நுழைவு

கோவிலின் நுழைவு

கோயில் நுழைவு வாயிலின் அட்டகாசமான படம்.

PC: sivaram1951

கோவில் யானை

கோவில் யானை

கோயில் யானையிடம் ஆசி பெற்றால் நினைத்தது நடக்கும் என்பது பலரது நம்பிக்கையாகும்.

PC: Simply CVR

 கோவிலின் முதன்மை கோபுரம்

கோவிலின் முதன்மை கோபுரம்

இதுதான் கோவிலின் முதன் கோபுரம். மிகப்பெரிய அளவில் இருக்கும் கோபுரத்தில் நீல நிறத்தில் சுப்பிரமணியனின் வேல் அமைக்கப்பட்டிருக்கும்.

PC: Nellai S S Mani

 காவடி எடுத்து பிரகாரத்தைச் சுற்றிவரும் பக்தர்கள்

காவடி எடுத்து பிரகாரத்தைச் சுற்றிவரும் பக்தர்கள்

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை கோவிலைச் சுற்றி நிறைவேற்றுவர்.

PC: prasanna

மின்னொளியில் கோவிலின் அற்புத காட்சி

மின்னொளியில் கோவிலின் அற்புத காட்சி

இரவு நேரத்தில் மின்னும் கோவிலின் அழகு. கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

PC: Simply CVR

காஞ்சி காமாட்சி பீடம்

காஞ்சி காமாட்சி பீடம்

கடற்கரையோரம் அமைந்துள்ள காமாட்சி பீடம்

PC: Richard Collier

திருவள்ளுவர் சிலை அதிகாலைத் தோற்றம்

திருவள்ளுவர் சிலை அதிகாலைத் தோற்றம்

திருவள்ளுவர் சிலை அதிகாலை நேரத்தில் பார்க்கும்போது தெரியும் தோற்றம் அற்புதமானதாகும்.

PC: Mohamed Rafi

விவேகானந்தர் பாறை ஒளி அலங்காரம்

விவேகானந்தர் பாறை ஒளி அலங்காரம்

விவேகானந்தர் பாறை ஒளி அலங்காரம் செய்யப்பட்டு முற்றிலும் புதிய வண்ணத்தில் காட்சியளிக்கிறது.

PC: Arvind Bhargava

கன்னியாகுமரி அம்மன் கோவில்

கன்னியாகுமரி அம்மன் கோவில்

கன்னியாகுமரி அம்மன் கோவிலின் வெளிப்புறத் தோற்றம்

PC: Martin Maravattickal


https://www.flickr.com/photos/martinartz/3091645737/in/photolist-5HcuyR-pT6YVY-4LYAHN-4LUruR-f4Vwv5-4LYAu7-4DG6Cj-fUDhFx-eHgqMS-4LYAEC-8tFpDm-4LYALU-4LYBfu-eHapKc-4LYBbL-aeVuwB-4LYBi7-5xSFsh-4LUrLt-4LYBjm-4LUs74-4LUs3P-4LYBp5-5643Qr-4LYAqj-4LUrsH-eHasne-4LYABs-4LYB6u-4LUrHT-4LUrDv-dyXN36-4DBPYZ-4LYAA5-4LUrUF-4LUrFp-4LUrhp-eiYSC9-4LUryX-4LYAX5-9Behnp-4LYAZb-aikMFU-4LYAY7-7evByX-4LYAyJ-eiqu5m-edQ11i-4LYAx7-doUDUk/

கன்னியாகுமரி அம்மன் கோவில் கோபுரம்

கன்னியாகுமரி அம்மன் கோவில் கோபுரம்

கன்னியாகுமரி அம்மன் கோவில் கோபுரம் சிறப்பான தோற்றத்தில் அமைந்து கடற்கரையிலிருந்தும் காட்சிக்கு புலப்படும் வகையில் அமைந்துள்ளது.

PC: Anulal

 மேற்புறத் தோற்றம்

மேற்புறத் தோற்றம்

கன்னியா குமரி அம்மன் அல்லது தேவி பகவதியம்மன் கோவிலின் மேற்புற த்தோற்றத்தில் கோபுரம் அழகாக காட்சியளிக்கிறது.

PC: Anulal

சபரிமலை அய்யப்பன் கோவில்

சபரிமலை அய்யப்பன் கோவில்

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் தரிசனத்தை முடித்துக்கொண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், சபரிமலை முதன்மை கோவிலை அடைய பல இடங்களைத் தாண்டி செல்லவேண்டும்

சபரிமலை அய்யப்பன் கோவில்

PC: AnjanaMenon

வாவர் மசூதி

வாவர் மசூதி

ஐயப்பனின் நெடுநாள் நண்பரான வாவருக்கு இங்கு ஒரு கோவில் அல்லது மசூதி எழுப்பப்பட்டுள்ளது.

இங்கு இந்து, இஸ்லாம் மத வேற்றுமை மறந்து ஒற்றுமையாக இரு மதத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

PC: Jay

 மகரஜோதி

மகரஜோதி

மகரஜோதி

PC: Makarajyothi

 பதினெட்டுப் படிகள்

பதினெட்டுப் படிகள்

சபரி மலைக்கு பல வழிகளில் சென்றாலும் இந்த பதினெட்டுப் படிகளைத் தொட்டு வணங்கி செல்லவேண்டும் என்பதே பல பக்தர்களின் ஆவலாக இருக்கும்.

மாலை அணிவித்து சென்று ஐயப்பனை வழிபட்டு வீடு திரும்புகையில் பக்தர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்கின்றனர் அவர்கள்

PC: Sailesh

ஸ்ரீகோவில்

ஸ்ரீகோவில்

ஸ்ரீகோவில்

PC: Sailesh

இருமுடி தேங்காய்

இருமுடி தேங்காய்

இருமுடி தேங்காய் என்பது சபரிமலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து தேங்காய், நெய், அரிசி என இருமுடியாக முடித்து தலையில் சுமந்து செல்லவேண்டும் என ஐதீகம்.

முற்காலத்தில், காட்டில் இருந்த ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் உணவுக்காக கொண்டு சென்ற பழக்கம் இப்படி திரிந்திருக்கலாம் என்கின்றனர் சிலர்.

PC: My View Reflex

ஆறு மொழிகளில் எழுதப் பட்ட வழிகாட்டிப் பலகை

ஆறு மொழிகளில் எழுதப் பட்ட வழிகாட்டிப் பலகை

சபரி மலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்து வரும் பக்தர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சபரிமலைக்கு செல்லும் வழி என இந்தி, மலையாளம், தமிழ்,தெலுங்கு கன்னடா மற்றும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை

PC: Coni Hörler

பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள கோவில்

பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள கோவில்

கோவில் அருகே அமைந்துள்ள பம்பை நதிக்கரையில் புனித நீராடி பின்னர்தான் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கின்றனர்

PC: Yesmk Photography Follow

Read more about: temple travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X