Search
  • Follow NativePlanet
Share
» »உஸ்ஸ்ஸ்..! திருமணதிற்கு முன்னாலயே இங்கவெல்லாம் போய்ட்டு வந்துடுங்க!

உஸ்ஸ்ஸ்..! திருமணதிற்கு முன்னாலயே இங்கவெல்லாம் போய்ட்டு வந்துடுங்க!

நம்ம இளமையோட கதவ மூட வர கல்யாணத்துக்கு முன்னான்டியே சில இடங்களுக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டா நல்லாதானே இருக்கும். அப்படி எங்கவெல்லாம் போகலாம் ?

வயசு வேற அதிகமாகிட்டே போகுது, இவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான், எப்படா கல்யாணம், கல்யாண வயசு ஆகிடுச்சு இன்னுமா ஊர் சுத்திட்டு இருக்க... இப்படி, இல்ல இதுக்கும் மேல நம் வீட்டில் அடிக்கடி ஒரு குறல் ஓங்கி ஒலிச்சுட்டு இருக்கும். ஏன்னா, அதுக்கு மேல நம்மனால நிம்மதியா ஊர் சுற்ற முடியாது, குடும்பப் பொருப்பு இருக்குறதுனால வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒட்டிக்கிட்டே வரும். இப்படி நம்ம இளமையோட கதவ மூட வர கல்யாணத்துக்கு முன்னான்டியே சில இடங்களுக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டா நல்லாதானே இருக்கும். அப்படி எங்கவெல்லாம் போகலாம் ?

லட்சத்தீவு

லட்சத்தீவு


சுத்தமான வெள்ளை மணல் கடற்கரைகள், சக்குபா டைவிங் செய்யவும், சினார்கிளிங் செய்ய ஏதுவான கடல் பகுதிகளையும் கொண்டிருக்கும் லட்சத்தீவில் வேறெங்கும் இல்லாத இயற்கையின் பேரழகை எந்த தொந்தரவுமின்றி ரசிக்கலாம். லட்சத்தீவுகளில் தெள்ளத்தளிவான நீல நிறக்கடலில் இருக்கும் ஹோட்டல்களில் தங்குவதும் மிகப்புதுமையானதாகவும் புத்துனர்வூட்டுவதாகவும் அமையும். நண்பர்களுடன் ஜாலியான இரவு பார்ட்டிக்கு இதவிட பெஸ்ட் இடம் இருக்காது.

Kadmat Island

சன்பர்ன் பார்டி

சன்பர்ன் பார்டி


திருமணமான பிறகு நண்பர்களுடன் பார்டிக்கு போட்டு வரேன் என்றால் என்னவாகும். ஜயோ, அம்மா தான். அதுக்குதான் கல்யாணத்துக்கு முன்னான்டியே ஜம்முன்னு ஒரு பெரிய பார்ட்டிக்கு போய் அனுபவிச்சு வரனும்னு சொல்றது. ஆமா, பார்ட்டி எல்லாம் நம்ம ஊருல எங்க பாஸ் இருக்கு. இருக்குதுங்க, திருமணதிற்கு முன்பே நண்பர்களுடன் கோவா சென்று சன் பர்ன் பார்டி திருவிழாவில் கலந்துக்கோங்க. இந்தியாவுல நடக்குற பார்டிகளின் உச்சகட்டம் தான் இந்த சன் பர்ன் பார்டி.

Pdmsunburn

கோவா பார்ட்டி

கோவா பார்ட்டி


கோவாவில் ஆண்டுதோறும் கடற்க்கரையில் நடக்கும் இந்த சன்பர்ன் பார்டி கொண்டாட்டத்தில் உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசைமழை பொழிகின்றனர். விடிய விடிய நடக்கும் இந்த பார்டியில் நண்பர்களுடன் ஆசைதீர குடிச்சுட்டு ஒரு ஆட்டத்ததான் போடுங்களேன்.

Haritha Prasad

போட்டிக்கு நாங்க வரலாமா

போட்டிக்கு நாங்க வரலாமா


கோவாவின் புகழ்பெற்ற கடற்க்கரைகளில் ஒன்றான வகேடோர் பீச்சில் நடக்கும் இந்த பார்டி திருவிழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து டிக்கெட் பெறவேண்டியதும் அவசியங்க. வெறுமனே ஆட்டம், பாட்டம் மட்டும் இல்லாம இங்கே பீச் வாலிபால் விளையாடலாம், ஆபத்து நிறைந்த பாறை ஏற்றத்தில் ஈடுபடலாம், இங்கே உள்ள கடைகளில் வித்தியாசமான பொருட்களையும் ஷாப்பிங் செய்யலாம்.

MiraCosta Community College

அந்தமான் ஸ்கூபா டைவிங்

அந்தமான் ஸ்கூபா டைவிங்


கடலுக்கு அடியில் மூழ்கி நாம் பார்த்திராத வேறொரு உலகத்தினுள் நுழைவது எவ்வளவு சுவாரசியமா இருக்கும். அப்படியொரு அனுபவம் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது அந்தமான் தீவுகளுக்கு தான். அந்தமான்- நிகோபார் தீவுகளில் இருக்கும் மிக அழகான இடம் என்றால் அது ஹவேலோக் தீவு தான். வெள்ளை மணல் கடற்கரையும், அன்பானவருடன் இயற்க்கை ரசிக்க அமைதியான சூழலையும் கொண்டுள்ள இங்கு ஸ்குபா டைவிங் விளையாட்டும் பிரபலமடைந்து வருகிறது.

LASZLO ILYES

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்


இந்த தீவு அமைந்திருக்கும் வங்காள விரிகுடா பகுதிதான் உலகத்திலேயே மிக செழுமையான கடல் வளத்தை கொண்டுள்ள பகுதிகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. அந்த அளவு விதவிதமான மீன்களையும், ஆமைகளையும், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்களையும் நாம் இங்கே காண முடியும். நண்பர்களுடன் பேரமைதி நிறைந்த கடல் என்னும் உலகத்தினுள் மகிழ்ந்தருப்பது நம்முள் குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். திருமணதிற்கு முன்பு நிச்சயம் செல்ல வேண்டிய, செய்ய வேண்டிய விஷயம் இந்த அந்தமான் பயணமும் ஸ்கூபா டைவிங்கும் தான்.

Andrew Skudder

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X