Search
  • Follow NativePlanet
Share
» »என்ன பாஸ், புரோபோசல்லா... அப்ப இங்க கூட்டிட்டு போய் பாருங்க!

என்ன பாஸ், புரோபோசல்லா... அப்ப இங்க கூட்டிட்டு போய் பாருங்க!

முதன் முறையாக மனதிற்கு பிடித்தவரிடம் காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தனை அழகானது. அதுவே, ஓர் அழகான பகுதியில் வைத்து வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் ?

உங்களது மனதிற்கு பிடித்தவர்களிடம் காதலிக்கிறேன் என்று சொல்லும் அந்த தருணம் எத்தனை போராட்டம், அழுத்தம், திக்திக்திக் என அறுதியில் அழகானது. கொஞ்சல், வெட்கம், தயக்கம், பயம் என அந்த நேரத்தில் நமக்குள் எழும் உணர்வுகளை அதை அனுபவித்தால் மட்டுமே பிறறால் உணர முடியும். சரியோ, தவறோ நம் வாழ்க்கையையே இனிமையானதாய் மாற்றக்கூடிய அந்தத் தருணத்தை அழகானதொரு இடத்தில் இது கனவா? என நினைக்கும் வகையில் ஒரு இடத்தில் வைத்து சொல்லும்போது வாழ்க்கை முழுவதும் நாம் நினைத்து மகிழக் கூடியதாய் அந்த தருணம் மாறும்தானே. அப்படி ஒருசில இடத்திற்கு காதலைத் தேடிச் செல்வோம் வாருங்கள்.

லேக் பேலஸ்

லேக் பேலஸ்


இந்தியாவின் வெனிஸ் நகரம் என்று அழைக்கப்படும் அழகிய இடம்தான் ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூர். இங்கு புகழ்பெற்ற உதய்பூர் ஏரிக்கு நடுவே அமைந்திருக்கிறது லேக் பேலஸ். இதன் நடுவே இருக்கும் இடத்தில் நிலவொளியில் உங்கள் காதலை சொல்லிப் பாருங்கள். உங்கள் அன்பானவர் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வார்.

Shiva Shenoy

வியாஸ் சத்ரி

வியாஸ் சத்ரி


நீங்கள் நேசிப்பவருக்கு வரலாற்றின் மீதோ, அமானுஷ்யமான விஷயங்களின் மீதோ விருப்பம் இருந்தால் அவரை வியாஸ் சித்ரிக்கு அழைத்துச் செல்லுங்கள். ரிதம் படத்தில் காற்றே என் வாசல் வந்தாய் பாடல் படம்பிடிக்கப்பட்ட அந்த இடம் தான் வியாஸ் சத்ரி. பாலைவனத்தில் சூரியன் மறையும் அந்த பொன் மாலைப் பொழுதில் இருக்கும் அற்புதமான நேரத்தில் உங்கள் அற்புதமான உணர்வை சொல்லிவிடுங்கள்.

Tapish2409

டோனா பௌலா கடற்க்கரை

டோனா பௌலா கடற்க்கரை


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை ஆட்சி செய்த போர்த்துகீசிய வைஸ்ராயின் மகள் இங்கு வாழ்ந்துவந்த இந்திய மீனவர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். அவரது காதலை தந்தை ஏற்றுக்கொள்ள மறுக்கவே இந்த கடற்க்கரையில் காதலுக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார் டோனா பௌலா. அவரின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த காதல் கடற்கரையில் உங்கள் காதலை சொல்லுங்கள். காதலைச் சொல்லும் முன் அவரிடம் இந்த வரலாற்றை முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

SahilSahadevan

காதல் ஏரி

காதல் ஏரி


கேரளாவின் அற்புதமான இடங்களில் ஒன்றான வயநாட்டில் செம்ப்ரா மலையின் மேல் அமைந்துள்ளது இந்த காதல் ஏரி. இயற்கையாகவே காதலின் சின்னமான இதயவடிவில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் வைத்து உங்கள் காதலருடன் மனதை பகிர்ந்துகொள்ளுங்கள். பசுமைச் சூழலும், இனிமைக் காற்றும் உங்களது காதலை மேலும் வலுவுடன் வெளிப்படுத்தும்.

Tanuja R Y

கோவா

கோவா


கோவா, தன்னுள் ஒரு மாயாஜாலத்தை கொண்டுள்ளது. நண்பர்களுடனே, புது மணத் தம்பதியினராகவோ, அலுவலக பார்ட்டியோ எப்படிச் சென்றாலும் நம்மை முழுத் திருப்தியுடன் ஊர் அனுப்பக்கூடியது. இந்த இடத்தில் நம் மனதுக்கு பிடித்தவருடன் மாலை நேரத்தில் தங்க நிறமாய் ஒளிரும் கடலின் நடுவே ஒரு படகில் வைத்து உங்கள் காதலை வெளிப்படுத்துகையில், அவர் கை கோர்த்து கண் பார்க்கையில் உங்கள் அன்பானவர் தன்னை மறந்து உங்கள் காதலை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.

Marina Aguiar

தர்மஷாலா

தர்மஷாலா


இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை பிரதேசம். தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். அதோடு மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது தர்மஷாலா. இப்படி ஒரு சூழ்நிலையில் உங்கள் காதல் துணையோடு இருக்கின்ற தருணத்தை கொஞ்சம் சித்தித்து பாருங்களேன்!.

sanyam sharma

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X