Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய எல்லையில் சண்டை மட்டுமா நடக்குது? இது பத்திலாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்களே!

இந்திய எல்லையில் சண்டை மட்டுமா நடக்குது? இது பத்திலாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்களே!

இந்திய எல்லையில் சண்டை மட்டுமா நடக்குது? இது பத்திலாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்களே!

By Staff

பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது.

2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கி காட்டப்பட்டுள்ளன. இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது.

பாங்காங் ட்சோ

பாங்காங் ட்சோ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே மாவட்டத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரி, 'பாங்காங் ட்சோ' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

படம் : Alin Dev

சீன எல்லையில்!

சீன எல்லையில்!

பாங்காங் ஏரி, சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தை ஒட்டியுள்ள சங்தாங் பீடபூமியில், கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

படம் : dipak123

இந்தியாவில் பாதி, திபெத்தில் மீதி!

இந்தியாவில் பாதி, திபெத்தில் மீதி!

134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரியின் பாதிக்கு மேற்பட்ட பகுதி திபெத் தேசத்துக்குள் பரவியுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடு

எல்லைக் கட்டுப்பாடு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் இது அமையப்பெற்றுள்ளது. இதன் நடுவே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு செல்கிறது.

படம் : kamaljith

பனிக்கட்டியாகும் உப்பு நீர்!

பனிக்கட்டியாகும் உப்பு நீர்!

பாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது.

படம் : Amareshwara Sainadh

3 இடியட்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்!

3 இடியட்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்!

2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

படம் : Praveenpn

இனப்பெருக்கம் செய்யும் பறவைகள்

இனப்பெருக்கம் செய்யும் பறவைகள்

புலம்பெயர் பறவைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக பாங்காங் ஏரிக்கு வந்து செல்கின்றன.

படம் : Praveenpn

பறவைகளும், விலங்குகளும்!

பறவைகளும், விலங்குகளும்!

பார் போன்ற தலையுடைய வாத்து மற்றும் பிராமினி வாத்துகள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி போன்ற பறவையினங்களும், மார்மோத், கியாங்க் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாங்காங் ஏரியில் காணப்படுகின்றன.

படம் : Stéphane Magnenat

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

பாங்காங் ஏரியின் பரந்த அழகை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.

படம் : Ashishinfogr8

எது பிரதிபலிப்பு??!!

எது பிரதிபலிப்பு??!!

பாங்காங் ஏரியின் நீர் அட்சர சுத்தமாக இருப்பதால் தண்ணீரில் விழும் பிரதிபலிப்பு உண்மையை போன்று அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.

படம் : kamaljith

பாங்காங் செல்லும் சாலை

பாங்காங் செல்லும் சாலை

பாங்காங் ஏரிக்கு நம்மை அழைத்துச் செல்லும் சாலை பனிமலைக்கு நடுவே ஒரு சிறிய கோடு போல் தோற்றமளிக்கும் காட்சி.

படம் : hansraj

கோடை காலத் தோற்றம்

கோடை காலத் தோற்றம்

பாங்காங் ஏரியின் பளிச்சிடும் அழகு ஒரு கோடை காலத்தில்!

படம் : Hansraj

பைக் பயணம்

பைக் பயணம்

பாங்காங் ஏரிக்கு பைக்கில் வந்து செல்லும் பயணிகள் அதிகம். இந்த ஏரி அமைந்திருக்கும் பகுதிக்கு பனிமலைகளை கடந்து வரும் பயணம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

படம் : Indianwanderlust

ஸ்படிக நீர்!

ஸ்படிக நீர்!

பாங்காங் ஏரியின் நீர் ஸ்படிகம் போல சுத்தமாக இருப்பதால் கீழிருக்கும் கற்களும், சில்லுகளும் கண்ணாடியில் தெரிவது போல அவ்வளவு தெளிவாக தெரிகின்றன.

படம் : Saurav Anand

வண்ணகலவை!

வண்ணகலவை!

பாங்காங் ஏரி பல வண்ணங்களில் காட்சியளிப்பதை பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் பல்வேறு காலகட்டங்களில் இங்கு வந்துசெல்ல வேண்டும்!

படம் : Atishayphotography

மிகப்பெரிய உவர்நீர் ஏரி

மிகப்பெரிய உவர்நீர் ஏரி

ஆசியாவிலுள்ள மிகப்பெரிய உவர் நீர் ஏரிகளில் பாங்காங் ஏரியும் ஒன்று.

படம் : Avriti.chauhan

வாத்துகள்

வாத்துகள்

பாங்காங் ஏரியின் சலனமற்ற நீரில் நீந்துகின்ற வாத்துகள்.

படம் : Akbarmasood

மிதக்கும் மேகங்கள்!

மிதக்கும் மேகங்கள்!

பாங்காங் ஏரியின் நீர் மிகவும் தூய்மையானதாகவும், தெளிவானதாகவும் இருப்பதால் தண்ணீரில் தெரியும் மேகத்தின் பிரதிபலிப்பு உண்மையைப் போலவே காட்சியளிக்கிறது.

படம் : Absthebest

எங்கும் நீலமயம்!

எங்கும் நீலமயம்!

பாங்காங் ஏரி காலத்துக்கேற்ப, நேரத்துக்கேற்ப, தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப பலவகையான வண்ணங்களில் கட்சியளிகக்கூடியது. அந்த வகையில் நீல வானத்தோடு ஜோடி போட்டுக்கொண்டு அழகிய நீல நிறத்தில் தோற்றமளிக்கிறது.

படம் : Coolgama

நீரில் நிற்கும் பறவை

நீரில் நிற்கும் பறவை

பாங்காங் ஏரி ஆழமற்று காணப்படுவதால் அதன் மீது ஒரு பறவை காலை ஊன்றி நிற்கும் காட்சி.

படம் : Tara0211

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

பார்பதற்கு ஒரு கடலை போன்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் பாங்காங் ஏரி.

படம் : Croquant

வெள்ளிமலை

வெள்ளிமலை

பாங்காங் ஏரியின் வனப்பும், அழகும் போதாதென்று இந்த வெள்ளிமலையின் எழிலும் உங்களை கிறங்கடிக்கப்போகிறது.

படம் : Ja3.maria

அமைதியான ஏரி

அமைதியான ஏரி

அமைதியான ஏரியில் ஆங்காங்கு நீந்திச் செல்லும் பறவைகள்.

படம் : Mvkulkarni23

நுண்ணுயிரிகளும், தாவரங்களும்!

நுண்ணுயிரிகளும், தாவரங்களும்!

பாங்காங் ஏரியின் தண்ணீரில் உப்பு மிகுந்து காணப்படுவதால் நுண்ணுயிரிகளும், தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன. எனினும் இந்த ஏரியை சுற்றிலுமுள்ள சதுப்பு நிலத்தில் சிலவகை பல்லாண்டு தாவரங்களும், புதர்களும் காணப்படுகின்றன.

படம் : Mahuasarkar25

ராம்சார் கன்வென்ஷன்

ராம்சார் கன்வென்ஷன்

நீர்வாழ் உயிரிகளை காப்பாற்றுவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட, ராம்சார் கன்வென்ஷன் (Ramsar Convention) எனப்படும் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்த ஏரி உள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், இவ்வமைப்பினால் தேர்ந்தெடுக்கப்படும் எல்லைக்கு அப்பாலுள்ள முதல் தெற்கு ஆசிய ஏரி இதுவாகத்தானிருக்கும்.


படம் : Atishayphotography

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

பாங்காங்கிலிருந்து 218 கிலோமீட்டர் தொலைவில் லே விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகைக் கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் பாங்காங் வந்து சேரலாம். அதேபோல ரயில் பயணிகள், ஜம்மு தாவி ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்து, பின்னர் அங்கிருந்து வாடகை கார்கள் மூலம் பாங்காங் வந்தடைய முடியும். மேலும் பாங்காங்கிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பியாங்க் ட்ரோக்போ பேருந்து நிலையம் வந்தபின்னர், அங்கு வாடகை கார்களும், தனியார் வாகனங்களும் கிடைக்கின்றன. பல பயண நிறுவனங்கள் கார்களையும், மோட்டார் சைக்கிள்களையும் பாங்காங் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிக்கின்றன.

படம் : kamaljith

எப்போது சுற்றுலா வரலாம்?

எப்போது சுற்றுலா வரலாம்?

இப்பகுதியில் வெம்மையான கோடையும், மிகக் குளிரான பனிக்காலமும் நிலவுகிறது. மே முதல் செப்டம்பர் வரை நீளும் கோடையில் இப்பகுதிக்கு சுற்றுலா வர பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இக்காலத்தில் இங்கு வெப்பநிலையானது 5°C முதல் 40°C வரை நிலவும். மேலும் ஜூலை முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்திலும் இப்பகுதிக்கு சுற்றுலா வரலாம்.

படம் : Hansraj

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X