Search
  • Follow NativePlanet
Share
» » தந்தையர் தினத்தன்று தந்தையை மகிழ்விக்க அவருடன் ஒரு சுற்றுலா சென்று வரலாமே!!

தந்தையர் தினத்தன்று தந்தையை மகிழ்விக்க அவருடன் ஒரு சுற்றுலா சென்று வரலாமே!!

2022ஆம் ஆண்டின் தந்தையர் தினம் நெருங்கிவிட்டது! நமக்கு எல்லாமுமாக இருக்கும் அப்பாவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்க நினைக்கிறீர்களா? வாழ்க்கையை மாற்றும் அனுபவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான விடுமுறையுடன் அவரை ஆச்சரியப்படுத்த இதோ உங்களுக்கு ஒரு சரியான யோசனை!

தந்தையர் தினத்தன்று அவருக்கு ஒரு பரிசு கொடுப்பது நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் தவிர வேறு ஏதாவது சுவாரஸ்யமாக செய்யலாம் என்று தோன்றுகிறதா? இந்த தந்தையர் தினத்தில் அவருடன் ஒரு பயணத்தை மேற்கொள்வதும், ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்வதும் நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை உங்கள் தந்தைக்குக் காட்ட சிறந்த வழியாக இருக்கும்.

எனவே இந்த நேரத்தில், உங்கள் அப்பாவுடன் வேடிக்கையான பயணத்தை மேற்கொள்வதன் மூலம் தரமான நேரத்தை செலவிடுங்கள். உங்கள் தந்தையுடன் நீங்கள் பார்க்கக்கூடிய இந்தியாவில் உள்ள சில சிறந்த இடங்களின் பட்டியல் உங்களுக்காக!

Father day

வரலாற்றுச் சின்னங்கள்:

உங்கள் தந்தை ஒரு வரலாற்றுப் பிரியரா? இந்தியாவில் நிரம்பியுள்ள கோட்டைகள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள், குகைகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்ல நீங்கள் திட்டமிடலாம். பல அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் இப்போது ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன, அங்கு நீங்கள் தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தைக்கு அரச மரியாதை அளிக்கலாம். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இவை ஏராளமாக உள்ளன.

சாகசச் சுற்றுலா:

உங்கள் தந்தை இளைஞரை போன்ற உற்சாகம் கொண்டவரா? நீர் விளையாட்டுகள் மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபட ஆர்வம் கொண்டவராக இருந்தால் ரிஷிகேஷ், கோவா, பெங்களூரு போன்ற இடங்களுக்கு உங்களது பயணத்தை திட்டமிடுங்கள். நீங்கள் இந்தத் திட்டத்தை அவரிடம் தெரிவிக்கும்போது உங்கள் உள்ளுணர்வை உங்கள் தந்தை நம்பாமல் இருக்கலாம், ஆனால் அவர் இறுதியில் ஒப்புக்கொள்வார், மேலும் அவர் ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு தண்ணீரில் நனைந்து ரிவர் ராஃப்டிங், ஸ்னோர்கிளிங், ஸ்கூபா டைவிங் செய்வதை பார்த்து நீங்களும் நிச்சயம் மகிழ்வீர்கள்.

கோயில் சுற்றுலா:

நம்மில் எவருக்குத்தான் கோயில்களுக்கு செல்வது பிடிக்காமல் இருக்கும். அதுவும் நாமே போய் நம் தந்தையை அழைத்தால் அவர் எப்படி உணருவார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோயில்கள் நிரம்பி வழிகின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் தஞ்சை, ராமேஸ்வரம், மதுரை என நீங்கள் திட்டமிடலாம் அல்லது வாரணாசி, கயா, கேதர்நாத், பத்ரிநாத் எனவும் நீங்கள் திட்டமிடலாம். அது உங்கள் விருப்பம்!

நகர சுற்றுலா:

உங்கள் தந்தையின் கனவு நகரத்தைப் பற்றிய கதைகள் அல்லது அவர் தனது இளமைப் பருவத்தை ஒரு நகரத்தில் எப்படிக் கழித்தார், அவருடைய வாழ்க்கையின் சிறந்த நாட்கள் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய கதைகளை நீங்கள் கட்டாயம் கேட்டிருக்க வேண்டும். எனவே, நீங்கள் அவருக்கு பிடித்த நகரத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடலாம் மற்றும் நகரத்தில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். நிச்சயம் இந்த பயணம் அவருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஃபிலிம் ஸ்டுடியோ சுற்றுலா:

உங்கள் தந்தை திரைப்படங்களின் தீவிர ரசிகராக இருந்தால், அவரை மும்பை அல்லது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள திரைப்பட ஸ்டுடியோக்களுக்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் சுற்றுப்பயணத்தின் போதும் அதன் பிறகும் அவர் முகத்தில் இருக்கும் புன்னகையை நீங்கள் ரசிப்பீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.

தேசிய பூங்கா பயணம்:

உங்கள் தந்தை வனவிலங்கு பிரியர் என்றால், இந்த தந்தையர் தினத்தன்று அவருடன் தேசிய பூங்காவிற்கு ஒரு பயணத்தை திட்டமிடுங்கள். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்களும் ஐநூறுக்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன, இந்த தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையுடன் மறக்கமுடியாத நாளை நீங்கள் செலவிட இது ஒரு சரியான யோசனை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X