India
Search
  • Follow NativePlanet
Share
» »பிரண்ட்ஷிப் டே 2022 ஐ உங்கள் நண்பர்களுடன் சென்னையில் அட்டகாசமாக கொண்டாடுங்கள்! டிப்ஸ் இதோ!

பிரண்ட்ஷிப் டே 2022 ஐ உங்கள் நண்பர்களுடன் சென்னையில் அட்டகாசமாக கொண்டாடுங்கள்! டிப்ஸ் இதோ!

உங்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் மனதிற்கு பிடித்த நபர்கள் யார்? நிச்சயம் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அந்த லிஸ்டில் இருப்பார்கள். ஆனால் இவர்களிடமும் கூட பகிரந்து கொள்ளாத விஷயங்களை நாம் நம் மனதிற்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறுகிறோம். நண்பர்கள் என்றாலே ஒரு வித மகிழ்ச்சி தான், இல்லையா?

எந்தவொரு எதிர்மறையான எண்ணமும் இல்லாமல், செய்யும் உதவிக்கு பதில் எதிர்பாராமல், உற்ற நேரத்தில் தோளுக்கு தோளாய் நின்று, நம் சுகம், துக்கம், சந்தோஷம், வெற்றி, தோல்வி என நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நம் நெருங்கிய நண்பர்கள் தூண்களாய் நிற்கிறார்கள்!

இந்த நண்பர்களைக் சிறப்பிக்க ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு ஆண்டும் நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் நம் நண்பர்களுடன் ஏன் வெளியே செல்லக் கூடாது? பிரண்ட்ஷிப் டே வை சென்னையில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான யோசனைகளை இக்கட்டுரையில் காண்போம்!

மால்கள் மற்றும் சினிமாக்கள்

மால்கள் மற்றும் சினிமாக்கள்

ஒரே இடத்தில் அற்புதமான உணவகங்கள், பிராண்டட் ஷோரூம்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தையும் பெறக்கூடிய 'ஆல் இன் ஒன்' விருப்பத்தை தான் மால்கள் நமக்கு வழங்குகின்றன. அதிலும் சென்னையில் ஏகப்பட்ட பிரமாண்டமான மால்களும், சினிமா அரங்கங்களும் உள்ளன.

காலையில் நண்பர்களுடன் சென்றால், சினிமா, ஷாப்பிங், கேளிக்கை, உணவு என எல்லாவற்றிலும் குதுகலித்துவிட்டு இரவு தான் வெளியே வர முடியும். அந்த அளவிற்கு சென்னையில் சாய்ஸ் உண்டு.

இந்தியாவின் மூன்றாவது பெரிய பொழுதுபோக்கு வளாகமான வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், எக்ஸ்பிரஸ் அவென்யு, விஆர் மால், மரினா மால், ஃபோரம் மால்,காற்றோட்டமான ஓபன் டிரைவ் - இன் தியேட்டரான பிரார்த்தனா,ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சினிமா பார்க் ஆனமாயாஜால் சினிமாஸ் மாயாஜால் சினிமாஸ்

கடற்கரைகள்

கடற்கரைகள்

சென்னை இயற்கையான கண்கவர் காட்சிகளை வழங்கும் ஏராளமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. இந்த கடற்கரைகள் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரு சரியான நண்பர்கள் தின கொண்டாட்டத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குதிரை சவாரி, காத்தாடி விடுவது, பல வகை சுவையான உணவுகளை ருசிப்பது என பல அமசங்களைக் கொண்ட ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையான மரினா பீச், நவநாகரீக உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நிறைந்த சுத்தமான கடற்கரையான எலியட்ஸ் பீச்,
நீச்சல் மற்றும் சர்ஃபிங்கிற்கு ஏற்ற கோவளம் கடற்கரை
ஆகியவை உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

மேலும், கூட்ட நெரிசல் இல்லாத அமைதியான சூழலில் அமைந்துள்ள ப்ரீஸி பீச், போட்டோஷூட்டிற்கு ஏற்ற பெப்பில் பீச், அழகான மகாபலிபுரம் பீச் ஆகியவற்றையும் நீங்கள் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

கடற்கரைகள், கோவில்கள், பார்க், சினிமா என்று செல்வதை காட்டிலும் சில பேருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும். சென்னையில் அதற்கும் இடமுண்டு! ஆம், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் பல ஷாப்பிங் அவென்யூக்கள் சென்னையில் உள்ளன.

புதுவிதமான குர்திகள், ஷர்ட்ஸ், பேன்ட்ஸ், அணிகலன்கள், ஷூ, செருப்புகள், மொபைல் கேஸ், ஹேன்ட் பேக்ஸ், புடவைகள் என எல்லாவற்றையும் நாம் வாங்கி மகிழலலாம். இவை அனைத்தும் நாம் அசரக்கூடிய அளவிற்கு மலிவு விலையில் கிடைக்கின்றன.

பாண்டி பஜார், சவுகார்பேட்டை மார்கெட், ரிச்சி ஸ்ட்ரீட், தி.நகர், ஜார்ஜ்டவுன், பர்மா பஜார், காட்டன் ஸ்ட்ரீட், பனகல் பார்க், பாரிஸ் கார்னர் ஆகியவை நீங்கள் ஷாப்பிங்கிற்காக செல்ல வேண்டிய இடங்களாகும்.

பார்ட்டிகள்

பார்ட்டிகள்

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே ஒரு விருந்து அல்லது கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் சூழ்நிலைகள் நிறைய உள்ளன என்பது மிகவும் வெளிப்படையான ஒரு விஷயம் தான்.

அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது யாருக்குத் தான் பிடிக்காது. சென்னையில் இரவு நேர வாழ்க்கை மிகவும் துடிப்பானது, வண்ணமயமானது.

சென்னையில் பிரதான நிலப்பரப்பில் உள்ள ஒரு ஆடம்பரமான பிரிட்டிஷ் பப் ஆன 10 டவுனிங் ஸ்ட்ரீட்,
நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபலமான பாஷா,
எப்போதுமே களைக்கட்டி இருக்கும் கேட்ஸ்பை 2000, பார்க் ஹயாட் இல் உள்ள தி ஃபிளையிங் எலிஃபென்ட், பார்க், பிளேன்ட், பே 146
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று இந்த பிரண்ட்ஷிப் டே வை கொண்டாடுங்கள்.

உயிரியல் பூங்காக்கள்

உயிரியல் பூங்காக்கள்

நெரிசலான நகரத்திலிருந்து விலகி உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதில் உயிரியல் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

அமைதியான சூழல், வனவிலங்குகள் என இயற்கையின் சாம்ராஜ்யத்தில் அந்த நாளை சிறப்பாக அனுபவிக்க முடியும். அவற்றில் வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை ஸ்நேக் பார்க், கிண்டி தேசியப் பூங்கா, க்ரோக்கடைல் பார்க், புலிகட் லேக், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், இவை யாவும் சென்னைக்கு மிக அருகில் தான் அமைந்துள்ளன.

நீங்களும் உங்கள் நண்பர்களும் வனவிலங்குகளையும் அமைதியையும் விரும்புபவராக இருந்தால், இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்.

கேளிக்கை பூங்காக்கள்

கேளிக்கை பூங்காக்கள்

கேளிக்கை பூங்கா என்ற பெயரைப் போலவே, இவை ஒரு பெரிய வளாகத்தில் அற்புதமான சவாரிகள், நீர் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்ட மெகா கேளிக்கை மையங்களாக திகழ்கின்றன.

எல்லாவற்றையும் மறந்து சாகச உணர்வில் திளைத்து நண்பர்களுடன் ஆனந்தாமாக இருக்க இப்பூங்காக்கள் ஒரு இனிய வாய்ப்பை வழங்குகின்றன.

எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட், குயின்ஸ்லாந்து, விஜிபி யுனிவர்சல் கிங்டம், விஜிபி ஸ்னோ கிங்டம், கிஷ்கிந்தா தீம் பார்க், வைல்ட் ட்ரைப் ராஞ்ச், டாஷ்-என்-ஸ்பிளாஸ்

ஆகியவை முற்றிலும் உங்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே, இந்த பிரண்ட்ஷிப் டே வை நண்பர்களுடன் மேலே குறிப்பிட்ட இடங்களில் ஏதோ ஒன்றிக்கு சென்று குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X