Search
  • Follow NativePlanet
Share
» »மிதக்கும் ஏரியில் மிதக்கும் கிராமம்... இயற்கையின் அமானுஷ்யம்!

மிதக்கும் ஏரியில் மிதக்கும் கிராமம்... இயற்கையின் அமானுஷ்யம்!

இந்தியாவில் அமானுஷ்யங்கள் பல உண்டு. நம் கண்களை ஏமாற்றி, அதைக் காட்டி பிழைப்பவர்களும் நிறைய உண்டு. உண்மையிலேயே இயற்கை நமக்கு சில விசித்திரமான அறிவியல் ஆச்சர்யங்களை தந்துள்ளது. அவற்றை நாம் இன்றுவரை கண்

By Udhaya

இந்தியாவில் அமானுஷ்யங்கள் பல உண்டு. நம் கண்களை ஏமாற்றி, அதைக் காட்டி பிழைப்பவர்களும் நிறைய உண்டு. உண்மையிலேயே இயற்கை நமக்கு சில விசித்திரமான அறிவியல் ஆச்சர்யங்களை தந்துள்ளது. அவற்றை நாம் இன்றுவரை கண்டும்காணாமலும், அழித்துவருவது நமக்கு நாமே செய்யும் செய்வினையைப் போன்றது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்து வளர்ச்சியை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இயற்கை நமக்கு முன்னே அறிவியலை கற்றுக்கொண்டு, நமக்கும் கற்றுக்கொடுத்துக்கொண்டே வருகிறது. உலகின் அமானுஷ்யமான ஒரு ஏரி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா. அந்த ஏரியில் இயற்கை ஒரு விசித்திரத்தை உருவாக்கியுள்ளது. அதைப் பற்றி காணலாம் வாருங்கள்.

நன்னீர் ஏரி எங்குள்ளது

நன்னீர் ஏரி எங்குள்ளது


கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு, வாடகைக்கார்களில் அல்லது பேருந்துகள் மூலமாக வரலாம். லோட்டாக் ஏரியின் தென்பகுதியில், உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்காவான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா அமைந்துள்ளது.

Bungo

உலகின் ஒரே ஒரு மிதக்கும் பூங்கா

உலகின் ஒரே ஒரு மிதக்கும் பூங்கா


உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா என்பது இதன் தனிச்சிறப்பு வாய்ந்த பெருமையாகும். இங்குள்ள மக்களின் மொழியில் பும்டிக்கள் என்று அழைக்கப்படும் மிதக்கும் தீவுகள் இந்த ஏரி எங்கும் நிறைந்துள்ளன. இவற்றில் இங்குள்ள மீனவர்கள் வசித்துவருகிறார்கள். சில பும்டிக்கள், மீன் வளர்ப்பதற்கெனவே செயற்கையாக உருவாக்கப்பட்டவை.

ch_15march

செந்திரா தீவு

செந்திரா தீவு

லோட்டக் ஏரிப்பகுதிக்கு வந்துவிட்டு, செந்திரா தீவினைக் காணாமல் வந்துவிட்டால் உங்கள் பயனம் நிறைவு பெற்றதாக இராது. லோட்டக் ஏரியில் உள்ள செந்திரா தீவானது ஒரு சிறப்பான சிற்றுலாத்தலமாகும்.

rajkumar1220

படகு சவாரி

படகு சவாரி

சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து தங்கிச் செல்வதை மிகவும் விரும்புகிறார்கள். இத்தீவில் படகு சவாரி செய்ய வசதி உள்ளது. இங்கு உள்ள உணவகமும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

இவ்வுணவகத்திலிருந்து பார்த்தால், மிதக்கும் தீவுகள், நீல நிறத்திலுள்ள தெளிவான நீர், பத்துப் பன்னிரண்டு படகுகள் எனக் கண்ணைக்கவரும் காட்சிகளைக் கண்டு மகிழலாம். இவ்வேரியில், எண்ணற்ற இடம்பெயரும் பறவைகளும் உள்ளூர்ப்பறவைகளும் தஞ்சம் அடைந்துள்ளன.

rajkumar1220

சாங்கை மான்கள்

சாங்கை மான்கள்

பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், தற்போது சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. தென்பகுதியில், இவ்வகை மான்கள் வாழ்கின்றன

wikimedia.org

விலங்குகள் பறவைகள்

விலங்குகள் பறவைகள்

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலங்களுள், இப்பூங்காவும் ஒன்று. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவினைச்சுற்றிலும் லோட்டக் ஏரி அமைந்து, கண்களுக்கு விருந்தாகும் காட்சியை அளிக்கிறது.

Dr. Raju Kasambe

தனிச்சிறப்பு

தனிச்சிறப்பு

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பூங்காவாகும். உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இதுவேயாகும். கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் ஒருங்கிணைந்த பகுதியாக, கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா விளங்குகிறது.

Ranjan Jyoti Dutta

எங்குள்ளது

எங்குள்ளது

பிஷ்ணுபூர் மாவட்டத்தின் தங்கா நகருக்கு அருகில் இது அமைந்துள்ளது. தற்போது இங்கு, எல்டு மான்கள் எனப்படும், கிளைகளுடன் கூடிய கொம்புகளை உடைய சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. இவை நடனமாடும் திறன் படைத்தவை என்பதால், இவற்றால், பிஷ்ணுபூருக்கும், மணிப்பூருக்கும் பெருமை கிடைக்கிறது. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது முன்னதாக சாங்கை மான்களுக்கான சரணாலயமாக இருந்தது. இவை அழிந்துவரும் உயிரினங்கள் என்பதால் இவற்றைப்பாதுகாக்கும் நோக்கத்துடன், இப்பூங்காவானது 1977-ல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

Jivya mul

தனித்தன்மை

தனித்தன்மை

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவின் தனித்தன்மையான சுற்றுச்சூழல் அமைப்பினால் இது மிதக்கிறது. இங்கு உள்ள பெரும்பான்மையான தாவரங்கள், பும்டி என்றழைக்கப்படும் மிதக்கும் தாவரங்களாகும். சுற்றுலாப்பயணிகள், இம்பாலிலிருந்து 53 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இவ்விடத்தை வந்தடையலாம். அக்டோபருக்கும் பிப்ரவரிக்குமிடைப்பட்ட காலத்தில், இங்கு வருவது சிறந்ததாகும்.

Dr. Raju Kasambe

எபுதொவ் தங்க்ஜிங்க் கோவில்

எபுதொவ் தங்க்ஜிங்க் கோவில்

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மொய்ராங்க் என்னும் நகரில் அமைந்துள்ளது எபுதொவ் தங்க்ஜிங்க் கோவில். எபுதொவ் தங்க்ஜிங்க் கோவிலானது, மணிப்பூர் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டுவரும் கடவுள்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவரான, தங்க்ஜிங்க் கடவுளுக்கெனக் கட்டப்பட்டுள்ள கோவிலாகும். மொராங்க் மக்களையும் மொய்ராங்க் நகரினையும் தங்க்ஜிங்க் கடவுள் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறார் என்பது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கையாகும்.


ch_15march

இம்பாலில் நீங்கள் செய்யவேண்டிய பத்து விசயங்கள்

இம்பாலில் நீங்கள் செய்யவேண்டிய பத்து விசயங்கள்

1 இம்பால் நகரத்தை கழுகு பார்வையில் பார்ப்பது

2 காங்க்லா கோட்டையை பார்வையிடுவது

3 லோக்தால் ஏரியில் படகு சவாரி செய்வது

4 கோரஸ் ரிப்பெர்ட்டரி திரையரங்கின் கலையரங்கத்தை ரசிப்பது

5 இம்மா சந்தைக்கு சென்று பொருள்கள் வாங்குவது

6 மணிப்பூரின் நறுமணங்களின் சுவையை உண்டு களிப்பது

7 ஆண்ட்ரோவின் மௌட்டுவா அருங்காட்சியகத்து செல்வது

8 மணிப்பூரின் மாநில விலங்கு சாங்கா மானை காணச் செல்வது

9 கோங்காம்பட் பூங்காவின் இயற்கை அழகை ரசிப்பது

10 இம்பால் போர் நினைவுச் சின்னங்களை பார்ப்பது போன்ற பத்து விசயங்களை இம்பால் செல்பவர்கள் கட்டாயம் மறக்காமல் செய்யவேண்டும். இவைதான் உலகின் பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகள் இங்கு வரும்போது செய்வதாகும்.

Read more about: travel temple manipur india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X