Search
  • Follow NativePlanet
Share
» »மதுரை சித்திரை திருவிழாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

மதுரை சித்திரை திருவிழாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

By Super Admin

தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

  • சித்திரை திருவிழாவின் மிக முக்கிய வைபவமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
  • லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு வந்திருந்தனர். காணும் இடமெங்கும் மனித தலைகளாக காட்சியளித்தது.
புராண வரலாறு:

புராண வரலாறு:

  • முன்பொரு காலத்தில் மதுரையை மலையத்வஜன் பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்திருக்கிறான்.
  • நெடுங்காலம் ஆகியும் வாரிசு இல்லாததால் குழந்தை பேறு வேண்டி பெரும் யாகம் ஒன்றை நடத்துகிறான்.
  • அந்த யாகத்தீயில் உதித்தவள் தான் மீனாட்சியம்மன் ஆவார்.
  • யாகத்தீயில் இருந்து சிறுமியாக மீனாட்சி வெளிவந்தவுடன் வானில் ஒலித்த அசரீரி இவள் சக்தியின் அவதாரம் என்றும் உரிய காலம் வரும்போது எம்பெருமான் சிவனே வந்து இவளை மணமுடிப்பார் என்றும் சொல்லியிருக்கிறது.
  • Timo

    புராண வரலாறு:

    புராண வரலாறு:

    • ஆயக்கலைகள் 64 தேர்ச்சி பெற்றவளாக வளர்ந்த மீனாட்சி தன் தந்தையின் மறைவுக்கு பிறகு மதுரையின் அரசியானார்.
    • பெரும்படை கொண்டு தென்னாடு அனைத்திலும் மீன் கொடி நாட்டிய மீனாட்சி வட நாட்டையும் தன் வசமாக்கும் பொருட்டு கைலாய மலைக்கு படைபரிவாடங்களுடன் செல்கிறார்.
    • அங்கே சென்றதும் புலித்தோலின் மேல் வீற்றிருந்த சிவபெருமானை கண்ட கணத்தில் தான் சக்தியின் அவதாரம் என்ற உண்மை மீனாட்சிக்கு விளங்கியது.
    • Arian Zwegers

      புராண வரலாறு:

      புராண வரலாறு:

      • தானே மதுரைக்கு வந்து உன்னை மணமுடிப்பேன் என்று மீனாட்சியிடம் உறுதியளித்த சிவபெருமான் சில காலம் கழித்து தேவரும் ரிஷிகளும் புடைசூழ மதுரைக்கு வந்து மீனாட்சியம்மனை திருமணம் செய்தார்.
      • திருமணம் செய்த பிறகு மீனாட்சியம்மனுடன் சேர்ந்து சுந்தர பாண்டியனாக சிவபெருமான் மதுரையை ஆண்டதாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
      • Ajay Goyal

        சித்திரை திருவிழா:

        சித்திரை திருவிழா:

        • மதுரையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சித்திரை திருவிழாவை பற்றி வழக்கில் இருக்கும் ஒரு கதையின்படி மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணத்தில் பங்கேற்க மீனாட்சியின் அண்ணன் அழகர் தனது இருப்பிடமான மதுரையில் இருந்து 20கி.மீ தொலைவில் இருக்கும் அழகர் மலையில் இருந்து கிளம்பியதாகவும் அடர்ந்த வனப்பகுதியின் ஊடாக வரும் வழியில் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க தானும் கொள்ளையர் வேடம் தரித்து பொன்னையும் மணியையும் கொண்டு வந்தாராம்.
        • படம்: அழகர் கோயில்

          Feng Zhong

          சித்திரை திருவிழா:

          சித்திரை திருவிழா:

          • தானே கொள்ளையர் வேடத்தில் இருப்பதால் காவலர்களிடமும் மற்ற கொள்ளையர்களிடமும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து வைகையாற்றில் இறங்கி அதனை கடக்கும்போது திருக்கல்யாணத்திற்கு அழகர் ஒரு நாள் தாமதாக வந்திருப்பதும் அழகர் இல்லாமலேயே மீனாட்சி-சுந்தரேஸ்வர் கல்யாணம் நிறைவடைந்துவிட்டது என்ற தகவலும் அழகருக்கு தெரியவருகிறது.
          • wishvam

            தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

            சித்திரை திருவிழா:

            சித்திரை திருவிழா:

            • இது கேட்டு கோபமுற்ற அழகரை சமாதானப்படுத்தி தங்கள் நிலையை விளக்க மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வைகைக்கரைக்கே வருகின்றனர்.
            • அவர்களின் சமாதானத்தை ஏற்காத அழகர் தான் கொண்டுவந்திருந்த ஆபரணங்கள், பரிசுப்பொருட்கள் அனைத்தையும் வைகையாற்றின் நடுவே இருக்கும் சிறிய மண்டபத்தில் வைத்து மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் கொடுத்துவிட்டு மதுரையினுள் வராமலேயே திரும்பி செல்வதாக அந்த கதை நீள்கிறது.
            • wishvam

              தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

              சித்திரை திருவிழா - நிரல்:

              சித்திரை திருவிழா - நிரல்:

              • மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழா பின்னர் மீனாட்சியம்மனுக்கு மதுரையின் அரசியாக முடிசூட்டும் பட்டாபிஷேக விழா, கயிலாய மலைக்கு சென்றதை குறிக்கும் திக்விஜயம், அதனை தொடர்ந்து பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேர் திருவிழா, அழகரை வரவேற்கும் எதிர் சேவை மற்றும் இறுதியாக வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
              • Military karthick

                தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

                சித்திரை திருவிழா:

                சித்திரை திருவிழா:

                • சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமாக இருப்பது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு தான்.
                • அழகர் மலையில் உள்ள அழகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்படும் கள்ளழகர் தங்க குதிரையின் மேல் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகின்றனர்.
                • மதுரை நகரின் உயிர்ப்பை நேரடியாக உணரவேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் சித்திரை திருவிழாவுக்கு வரவேண்டும்.
                • Arun Bharhath

                  தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  சித்திரை திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில அட்டகாசமான புகைப்படங்களின் தொகுப்பு.

                  wishvam

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  அழகு குத்தி வரும் பக்தர்கள்.

                  Maduraipandi

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  அழகு குத்தி வரும் பக்தர்கள்.

                  Maduraipandi

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  அழகு குத்தி வரும் பக்தர்கள்.

                  Maduraipandi

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  சித்திரை திருவிழா-புகைப்படங்கள்:

                  அழகு குத்தி வரும் பக்தர்கள்.

                  Maduraipandi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X