Search
  • Follow NativePlanet
Share
» »மதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா?

மதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா?

நெருக்கடி நிறைந்த மதுரையில் இருந்து ஜாலியாக, அடர்வனக் காடுகளையும், பரந்துவிரிந்த கடற்கரையையும் காண கேரளாவை நோக்கி ஓர் பயணம் செல்வோம் வாங்க மக்கா.

மதுரை மாவட்டம் என்றாலே பெரும்பகுதி ஆன்மீகத் தலங்களுக்காக புகழ்பெற்றதாக இருப்பது நாம் அறிந்த ஒன்று தான். மதுரைவாசிகள் இயற்கை அம்சங்கள் நிறைந்த பசுமை வனக் காடுகளுக்கு சிற்றுலா செல்ல திட்டமிட்டால் சமணர் மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சிறுசிறு மலைவாசத் தலங்களுக்குத் தான் செல்ல முடியும். கடற்கரை தரிசனம் பெற தொண்டி, ராமேஷ்வரம் செல்ல வேண்டும். பெரும்பாலும் இப்பகுதிகள் சந்தடி நிறைந்த நகரமயமான பகுதிகளாகவே காணப்படும். இவையெல்லாம் தவிர்த்து ஜாலியாக, நகர நெரிசலில் இருந்து விலகி அடர்வனக் காடுகளையும், பரந்துவிரிந்த கடற்கரையையும் காண கேரளாவை நோக்கி ஓர் பயணம் செல்வோம் வாங்க மக்கா.

மதுரை - உசிலம்பட்டி

மதுரை - உசிலம்பட்டி


மதுரையில் இருந்து மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உசிலம்பட்டி. மக்கள் தொகை சற்று அதிகமான நகராட்சியாக இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சிதரல் இன்றும் கொஞ்சம் பசுமை நிறைந்த ஊராகவே உசிலம்பட்டி காணப்படுகிறது. பிரசித்தமான சுற்றுலாத் தலங்கள் இங்கே இல்லாவிட்டாலும் ஆங்காங்கே தென்படும் தோட்டங்களும், வயல்வெளிகளும் பயணத்தை மேலும் உற்சாகமட்டும்.

TAMIZHU

உசிலம்பட்டி - தேனி

உசிலம்பட்டி - தேனி


தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 85-யில் 38 கிலோ மீட்டர் பயணித்தால் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த தேனியை அடைந்து விடலாம். தேனியில் பல்வேறு கோவில்களும், மேகமலை, போடி மெட்டு என பிரசித்தமான பல சுற்றுலாத் தலங்கள் காந்தம் போல் பயணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

Eldho T Jai

தேனி சுற்றுலா

தேனி சுற்றுலா


தேனியில் சுற்றுலாத் தலங்கள் அதிகளவில் இருப்பது பல கட்டுரைகளின் வாயிலாக நாம் அறிந்ததே. இருப்பினும், தேனி மாவட்டத்தை நோக்கி பயணிப்போர் அங்குள்ள வைகை, சோத்துப்பாறை, சண்முகா நதி உள்ளிட்ட அணைக்கட்டுகளையும், சுருளி, கும்பக்கரை, சின்ன சுருளி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளையும் தவறாமல் சென்று ரசித்த வேண்டும்.

Shanmugam. M

தேனி - கம்பம்

தேனி - கம்பம்


தேனியில் சுற்றுலாத் தலங்களில் சிலவற்றை ரசித்துவிட்டு சற்று ஓய்வுக்குப் பின் பயணத்தை தொடர்ந்தீர்கள் என்றால் அடுத்த 40 கிலோ மீட்டர் மலைப் பாதை சட்டென பறந்து செல்வது போல் உணர்த்திவிடும். இருபுறங்களிலும் உள்ள காடுகள், வாகன போக்குவரத்து நெரிசலற்ற மலைப் பாதை, பறவைகளின் ரிங்காரம் என உற்சாகமூட்டும் பயணத்திற்குப் பின் காத்திருக்கிறது கம்பம்.

Ashwin Kumar

கம்பம் - குமுளி

கம்பம் - குமுளி


கம்பத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் குறைவாக இருப்பதால் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வது சிறந்தது. கம்பத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 183-யில் கூடலூர் வழியாக 23 கிலோ மீட்டர் பயணித்தால் அடர்த்தியான மலையின் நடுவே கேரளாவின் எல்லையாக உள்ளது குமுளி மலைப் பிரதேசம். கூடலூரில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் சாலை நேராக பயணித்தாலும், அடுத்த சில கிலோ மீட்டர்கள் இருபுறமும் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் வளைந்து நெழிந்த சாலை பயணத்தை குதூகளிக்கும்.

Jaseem Hamza

குமுளி

குமுளி


குமுளி மற்றும் இதனருகே உள்ள தேக்கடி தென்னிந்தியாவில் பிரசிதிபெற்ற மலைச் சுற்றுலாத் தலங்களாகும். இயற்கை நேசிப்பவர்களுக்காகவே இங்கே இயற்கை எழில் சூழ்ந்த அழகிய வனப்பகுதிகளும், நீர்வீழ்ச்சிகளும், சவாரிகளும் என பல புகழ்பெற்ற சுற்றலாத் தலங்கள் உள்ளன.

sabareesh kkanan

குமுளி - குட்டிகண்ணம்

குமுளி - குட்டிகண்ணம்


குமுளி மற்றும் தேக்கடியில் நேரத்திற்கு ஏற்ப சுற்றுலாத் தலங்களை தரித்து விட்டு மதிய உணவை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தீர்கள் என்றால் அடுத்த 36 கிலோ மீட்டர் தொலை மலைப் பாதையில் குட்டிக்கண்ணத்தை அடைந்து விடலாம். இதனிடையே உள்ள பீர்மேடு, வண்டிபெரியர் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் ரம்மியமான காட்சித் தலங்களாக இருக்கும். இடையே, தேயிலைத் தொழிற்சாலைகளும், தேவாலயங்களும், மலைச் சரிவில் தேயிலைத் தொட்டங்களும் என மேகங்கள் சூழ்ந்த மலைப் பாதைப் பயணம் பல அனுபவங்களை வழங்கும்.

Rojypala

குட்டிகண்ணம் - முண்டகாயம்

குட்டிகண்ணம் - முண்டகாயம்


குட்டிகண்ணத்தில் இருந்து முண்டகாயம் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இடையில் உள்ளள வளைஞம்கண்ணம் நீர்வீழ்ச்சி, ஜங்கில் விலா குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் கேரளாவின் சமவெளிப் பகுதி இங்கிருந்துதான் துவங்குகிறது. மலைப் பாதையில் வளைவு நெழிவு சாலையைக் கடந்து அடுத்து தொடரும் பயணம் கேரளாவிற்கு உட்பட்ட இந்த சமவெளியாகத்தான் இருக்கும்.

Kattapana

முண்டகாயம் - பத்தனம்திட்டா

முண்டகாயம் - பத்தனம்திட்டா


முண்டகாயத்தில் இருந்து 46 கிலோ மீட்டர் பயணித்தால் பத்தனம்திட்டாவை அடைந்துவிடலாம். கேரளாவிலேயே மிகப் பெரிய மாவட்டமான பத்தனம்திட்டா படகுப்போட்டிக்கு புகழ்பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருடத்தில் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சபரி மலை இம்மாட்டத்தில் தான் அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆன்மீகத் தலங்களுக்காக பிரசிதிபெற்றுள்ள இங்கு ஸ்ரீ வல்லபா கோவில், மலங்கரா ஆர்தோடக்ஸ் தேவாலயம், குடமன் சிலந்தியம்பலம், கவியூர் மஹாதேவா கோவில் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க, பயணிக்ள் அதிகம் பயணிக்கக் கூடிய தலங்களாகும்.

Samson Joseph

பத்தனம்திட்டா - கொல்லம்

பத்தனம்திட்டா - கொல்லம்


பத்தனம்திட்டாவில் இருந்து அதூர், பரனிகாவு, குந்தரா வழியாக அடுத்த 58 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொல்லம் கடல் நகரம். எழில் அம்சங்களையும், சுற்றுலா தலங்களையும் ஏராளமாக தன்னுள் கொண்டுள்ள கொல்லம் பகுதி வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் நோக்கி ஈர்க்கும் தன்மை மிக்கதாக உள்ளது. குறிப்பாக, மதுரை போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டத்தில் இருந்து பயணிப்போருக்கு கேரளாவின் கொல்லம் வரப்பிரசாதமே.

rajaraman sundaram

தவறவிடக்கூடாதவை

தவறவிடக்கூடாதவை


கொல்லம் நகருக்கே புகழ் என்றால் கடற்கரை தான். கொல்லம் பீச், தங்கசேரி பீச், சாகசங்கள் நிறைந்த அட்வெஞ்சர் பார்க், திருமுல்லாவரம் கடற்கரை போன்றவை சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை அள்ளித் தரும் பொழுதுபோக்கு அம்சங்களாகும். இதைத் தவிர, நீண்டகரா துறைமுகம், அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம், அலங்கடவு படகுக்கட்டுமான தளம், மன்ரோ தீவு, சாஸ்தாம்கொட்டா ஏரி உள்ளிட்டவை இயற்கை எழில் மிக்க சுற்றுலாத் தலங்களாகும்.

Surajram Kumaravel

ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்


கடற்கரைகளும், பீடகுச் சவாரிகளையும் தவிர்த்து ஆன்மீகத் தலங்களுக்காகவும் கொல்லம் சிறப்பு பெற்றுள்ளது. இங்கே காணப்படும் அச்சன்கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. கொட்டாரக்கரா, ஆரியக்காவு, ஓச்சிரா உள்ளிட்ட தலங்களும் பிரசிதிபெற்றவை.

Gnlogic

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X