Search
  • Follow NativePlanet
Share
» »மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சோமவன்ஷிய மஹாமன்னர்களால் ஒரு காலத்தில் உன்னதமாக ஆளப்பட்ட இந்த மஹாசமுந்த் மாவட்டம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வாய்க்கப்பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மத்திய கிழக்கு பகுதியை உள்ளடக்கியதாக இந்த மஹாசமுந்த் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சிர்பூர் ஒரு ஒரு முக்கியமான புராதன வரலாற்று சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதியின் கரைப்பகுதியில் இந்த சிர்பூர் நகரம் அமைந்திருக்கிறது. சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் கிரானைட் எனப்படும் பளிங்குப்பாறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

மஹாசமுந்த் கலாச்சாரம்!

மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Ms Sarah Welch

மஹாசமுந்த் மாவட்டத்தில் ஹல்பா, முண்டா, சோனார், சன்வாரா, பர்தி, பஹாலியா போன்ற பழங்குடி இனத்தவர்கள் வசிக்கின்றனர். பழங்குடி கலாச்சாரம், பழங்குடி திருவிழாக்கள், பழங்குடி சந்தைகள் என்று இந்த பிரதேசத்தின் வாழ்க்கை முறை முழுக்க முழுக்க பழங்குடி இனத்தாரின் அடையாளங்களுடன் ஒளிர்கிறது. தனித்தன்மையான உடை அலங்காரத்தை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பின்பற்றுகின்றனர். ஆண்கள் வேட்டி,குர்தா, தலைப்பாகை மற்றும் பண்டாய் எனப்படும் தோல் காலணியுடனும், பெண்கள் புடவை உடுத்தும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். பிச்சியா, கர்தான் எனும் இடுப்பு பட்டி, பர்பட்டி எனும் வளையல்கள், ஃபுலீ எனும் வெள்ளி காது வளையங்கள் போன்ற ஆபரணங்களை இப்பகுதி பெண்கள் அணிகின்றனர்.

திருவிழாக்களை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதில் இவர்கள் அதிகம் விருப்பம் கொண்டுள்ளனர்.

மஹாசமுந்த் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்

மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Satyajeet Sahu

மஹாசமுந்த் நகரம் மற்றும் மாவட்டத்தில் லக்ஷ்மணா கோயில், ஆனந்த் பிரபு குடி விஹார், பாம்பினி ஸ்வேத் கங்கா, கல்லாரிமாதா கோயில், கௌதாரா(தல்டலி), சண்டி கோயில் (பிர்கோனி), சண்டி கோயில் (குச்சபாலி), ஸ்வஸ்திக் விஹார், கந்தேஷ்வர் கோயில் ஆகியவை பார்க்க வேண்டிய விசேஷ அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

எப்படி செல்வது?

மஹாசமுந்த் நகரம் மற்றும் மாவட்டம் சாலைப்போக்குவரத்து வசதி மற்றும் ரயில் சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தலைநகரான ராய்பூரில் விமான நிலையமும் உள்ளது.

Read more about: chhattisgarh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X