Search
  • Follow NativePlanet
Share
» »மணப்பாடு - கடலும், நீர்பறவையும் சேரும் இடம்!!

மணப்பாடு - கடலும், நீர்பறவையும் சேரும் இடம்!!

By Staff

மணப்பாடு, தூத்துக்குடி அருகே இருக்கும் ஒரு அழகிய கடற்கரை கிராமம்.

Manapad1

Photo Courtesy : Sa.Balamurugan

மணப்பாடு கடற்கரை, திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த ஊருக்கு ஒரு முக்கிய வரலாறு இருக்கிறது. கி.பி. 1540'இல், போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த கப்பல் கடும் சூறாவளியில் சிக்கி மூழ்கும் நிலைக்குப் போனது. தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட அந்தப் கப்பலின் கேப்டன், கிருஸ்துவிடம், தன் கப்பல் எதேனும் ஒரு கரையை பத்திரமாக அடைந்தால் அங்கு ஒரு சிலுவையை நிறுவுவதாக வாக்குறுதி அளித்தான். அதிசயமாக, அந்தப் படகு மணப்பாடு கரைக்கு வந்தது. சொன்னபடியே கப்பலின் கேப்டன் தன் கப்பலின் மர கொடிக்கம்பத்தில், ஒரு சிலுவையை மணப்பாடின் கரையில் அமைத்தான்.

Manapad2

Photo Courtesy : Sa.Balamurugan

சில நாட்களுக்குப் பிறகு, மணப்பாடைச் சேர்ந்த ஒரு நபர், காலில் பட்ட அழுக்கை இந்த மர சிலுவையில், துடைத்திருக்கிறார், , அவர் காலில் வலியும் வீக்கமும் வரத் தொடங்கியது. அன்றிரவே அவரது கனவில், அந்த சிலுவையை, எண்ணெயில் சுத்தப்படுத்தி, மீதி இருக்கும் எண்ணையை தன் காலில் உள்ள வீக்கத்தில் மருந்தாய் போட்டால் குணமாகும் என்று. அந்த நபர் அது போலவே செய்ய காயம் குணமானது.ஆச்சர்யத்தின் உச்சியில் இதை எல்லோரிடம் சொல்ல அந்த சிலுவையின் சிறப்பு மணப்பாடு முழுதும் பரவியது. பிறகு அந்த கேப்டனின் சிலுவையை ஒரு குன்றின் மீது வைத்து எல்லோரும் வழி பட்டார்கள்.

Manapad3

Photo Courtesy : தகவலுழவன்

1542'ஆம் ஆண்டில், ஃப்ரான்சிஸ் சேவியர் எனும் போர்ச்சுகிய பாதிரியார் இங்கு வந்து ஒரு குகையில் சில காலம் வாழ்ந்தார். இவர் மூலமாக கத்தோலிக்க கிருத்துவ மதம், மணப்பாடு, அதன் சுற்று வட்டாரம் முழுதும் பரவியது. இங்குள்ள‌ மக்களுக்கு போர்த்துக்கீசிய குடும்ப பெயர்களான பர்னாந்து, மிராந்த, வாஸ், டிசில்வா, டிகோஸ்தா, டிரோஸ் போன்ற பெயர்களையும் இவரே வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

Manapad4

Photo Courtesy : Sa.Balamurugan

மணப்பாடில் பாரம்பரிய‌ மிக்க பல தேவாலயங்கள், நினைவுச் சின்னங்கள் இருப்பதாலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கடைப்பிடிக்கப் பட்டு வருவதாலும் இவ்வூர் "சின்ன ரோமாபுரி" என்று அழைக்கப்படுகிறது.

மணப்பாடின் கடற்கரை, அதை சுற்றியிருக்கும் வீடுகள், அத்தனை அழகானது.

நீதானே பொன்வசந்தம், நீர்ப் பறவை, கடல் படத்தில் வரும் பெரும்பாலான கடற்கரை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டன.

ஐரோப்பாவின் கட்டிட முறையில், பிரமாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவாலயங்கள், புனித ஜேம்ஸ் தேவாலயம், தூய ஆவியானவர் ஆலயம். இவ்விரண்டும் ஒன்றை, ஒன்று நோக்கும் வண்ணம் ஒரே தெருவின் இரு புறங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: manapad tuticorin churches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X