Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கோவில்களுக்கு ஒருமுறை சென்றால் போதும் 2019ல் திருமணம் நிச்சயம்

இந்த கோவில்களுக்கு ஒருமுறை சென்றால் போதும் 2019ல் திருமணம் நிச்சயம்

இந்த கோவில்களுக்கு ஒருமுறை சென்றால் போதும் 2019ல் திருமணம் நிச்சயம்

முப்பதை கடந்து இன்னும் சிங்கிளாக இருக்கும் என்றென்றும் இளமையாக இருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் ஒன்றும் தலையானதுமானது திருமணம்தான். இந்த வருடம் திருமணம் நடக்கும், அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என 5 வருடங்களை கடந்தும் கதை சொல்லிக்கொண்டே மனதைத் தேத்திக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ், இப்போதுதான் வேலையே கிடைத்திருக்கிறது இனிமேல் திருமணம் என்று ஆசை வரும்போதுதான் தெரியும் திருமணத் தடை என்னும் ஒரு தடைச் சொல். அடடே.... உங்களுக்கு தெரியுமா இந்த கோவில்களுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட முறை சென்று திரும்பினால் போதும் உங்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். 2019ம் வருடத்தில் நீங்களும் ஆகலாம் குடும்பஸ்தர்..

தமிழ்நாடு வெறுமனே பொழுது போக்கு சுற்றுலா என்று மட்டுமல்லாமல், கூடவே ஆன்மீகத் தலங்களையும் கொண்டே இருக்கும். பொதுவாகவே தமிழகத்தின் மிக பிரபலமான சுற்றுலாத் தளங்கள் மதுரை, நெல்லை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி என எல்லா இடங்களும் ஆன்மீகத்தை முன்னிறுத்தியே இருக்கின்றன. சரி வாருங்கள் சுற்றுலாவையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் கோவில்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒரு வருடத்துக்குள் திருமணம்

ஒரு வருடத்துக்குள் திருமணம்

திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்கும் ஒரே வருடத்தில் திருமணத்துக்கு உதவும் கோவில் எது தெரியுமா? மணவாளேஸ்வரர் கோவில், திருவேள்விக்குடியில் அமைந்துள்ள திருமணத்துக்கு உதவி செய்யும் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்தான் இது.

பெயர் காரணம்

பெயர் காரணம்


சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து யாகம் செய்த தலம் என்பதால் திருவேள்விக்குடி என்று அழைக்கப்படுகிறது.
இது காவிரி வடகரைத் தலம் 23 ஆகும்.

பிரார்த்தனை

பிரார்த்தனை


இங்கு வந்த பிரார்த்தன செய்து திரும்பினால் உங்களுக்கு இருக்கும் திருமணத் தடை நீங்கி உடனடியாகத் திருமணம் நடக்கும்.
இங்குள்ள இறைவன் - மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

எப்படி அடைவது

எப்படி அடைவது

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உல்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கில் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது திருவேள்விக்குடி.

நடை திறப்பு

நடை திறப்பு

காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த கோவிலின் நடை திறந்திருக்கும்.

மூன்றே மாதத்தில் திருமணம்

மூன்றே மாதத்தில் திருமணம்

30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகவில்லை என்று கவலையில் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று பிரார்த்தனை செய்தால் நிச்சயம் திருமணம் நடக்குமாம். இந்த கோவில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இது கீழ கபிஸ்தலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

கோவிலின் இறைவன் இறைவி

கோவிலின் இறைவன் இறைவி

இறைவன் ஏகாம்பரேஸ்வரர்
இறைவி காமாட்சி அம்பிகை

90 நாட்கள் போதும்

90 நாட்கள் போதும்

திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும், 30 வயதைத் தாண்டியும் திருமணம் தள்ளிப் போகும் ஆண்களும் இந்த கோவிலுக்கு சென்றால் 90 நாட்களில் திருமணம் நடைபெறும்.

 வேண்டுதல் எப்படி?

வேண்டுதல் எப்படி?

கண்ணாடி வளையல்களை மாலையாக அணிவித்து வணங்க வேண்டும். வளையல்கள் அணிவித்து பின் அதை பிரசாதமாக மற்ற பெண்களுக்கு வழங்கினால் பெண்களுக்கு திருமணம் நிச்சயம்.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழ கபிஸ்தலம்.

சற்குண லிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி

சற்குண லிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி


காவிரி தென்கரையில் அமைந்துள்ள 69வது தலம் சற்குண லிங்கேஸ்வரர் கோவில் ஆகும். இது திருமணத் தடை நீக்கும் தலம் என்று அழைக்கப்படுகிறது. மருதாநல்லூர் என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்குள்ள இறைவன் பெயர் சற்குணலிங்கேஸ்வரர். மேலும்
கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் இறைவி சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி,
கல்யாணி எனும் பெயர்களின் வழங்கப்படுகிறார்.

 எப்படி அடைவது

எப்படி அடைவது

கும்பகோணம் - நீடா மங்கலம் சாலையில் சாக்கோட்டை்கு தென் பகுதியில் 2 கிமீ தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X