Search
  • Follow NativePlanet
Share
» »மங்கன் சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது

மங்கன் சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது

மங்கன் சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது

சிக்கிமில் உள்ள செழிப்பான சுற்றுலா தலங்களில் ஒன்றாக, வடக்கு சிக்கிம் மாவாட்டத்தில் அமைந்துள்ள மங்கன் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்த நகரம் மாநிலத் தலைநகரம் காங்க்டாக்கிலிருந்து 67 கிமீ தொலைவில் அமைந்திருப்பதுடன் சிக்கிமின் அனைத்து நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கிறது.

புவியியலமைப்பு

மங்கன் கடல் மட்டத்திலிருந்து 3136 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் தன்னாட்சி பகுதியைச் சேர்ந்த திபெத்திய பீடபூமிக்கும் மற்றும் மேற்கு சீனாவின் 'கின்ஹாய்' மாகாணத்துடன் சேர்ந்திருக்கும் ஜம்மு காஷ்மீரின் 'லடாக்' பகுதிக்கும் நுழைவாயிலாக மங்கன் விளங்குகிறது. மங்கன் தூர வடக்கிலுள்ள நகரங்களான லாசுங், சுங்தாங் மற்றும் லாசென் ஆகியவ்ற்றிற்கும் நுழைவாயிலாக உள்ளது.

மங்கன் சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது
cardboardbird

மங்கனின் கலாச்சாரம்

தொடர்ச்சியாக 3 நாட்கள் நடக்கும் இசைத்திருவிழாவிற்காக மங்கன் புகழ் பெற்றிருக்கிறது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 முதல் 14-ம் நாள் வரையிலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இங்கு புகழ் பெற்றிருக்கும் உணவுத் திருவிழா, பாரம்பரிய இசையை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கைவினைப்பொருட்களின் விற்பனை ஆகியவை மங்கனை ஆர்வமூட்டக்கூடிய சுற்றுலா தலமாக மாற்றியுள்ளன.

அருகிலுள்ள மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலுள்ள இசைச் குழுக்களும் இந்த திருவிழா தொடர்பான நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றன. இந்நாட்களில் நிலவும் சில்லென்ற பருவத்துடன், இசையும் கை கோர்த்திடும் போது, அது ஒரு சிறப்பான சூழலை உங்களுக்கு உருவாக்கி தந்திடும். மங்கனில் பேசப்படும் மொழிகள் நேபாளம் மற்றும் திபெத் போன்ற இடங்களிலிருந்து மங்கன் பகுதிக்கு யாராவது வந்தால், அவர்கள் தங்களுடைய மொழியிலேயே பிறரை தொடர்பு கொள்வதில் எந்தவிடத இடர்பாடும் இருக்காது. அதற்கு காரணம், நேபாளி மற்றும் பூடியா உள்ளிட்ட சில மொழிகள் மங்கன் நகரத்தின் அலுவலக மொழியாக உள்ளன. சிக்கிமில் வேறெங்கும் இல்லாத வகையில், பல்வேறு மொழிகள் மங்கனில் பேசப்பட்டு வருகின்றன. அவர்கள் நேபாளி, பூடியா, லெப்சா, லிம்பு, நெவாரி, ராய், குருங், மங்கர், ஷெர்பா, டாமங் மற்றும் சன்வார் ஆகிய மொழிகளை பேசி வருகின்றனர்

Read more about: sikkim
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X