Search
  • Follow NativePlanet
Share
» »மாத்தேரான் மலை - மும்பைக்கு பக்கத்தில் இருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலம்

மாத்தேரான் மலை - மும்பைக்கு பக்கத்தில் இருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலம்

By Naveen

மும்பையில் வாரநாளில் ரயிலில் வேலைக்கு சென்று வருவதை விட கொடுமையான அயர்சியூட்டக்கூடிய விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது. ஜன நெரிசலும், முடிவற்றதாக தோற்றமளிக்கும் டிராபிக்கும், சிரிக்க மறந்துபோன மனித முகங்களும் நம்மை இதையெல்லாம் விட்டு எங்காவது தப்பித்து போக முடியாதா என தினம் எங்க வைக்கும்.

இதுபோன்ற இடங்களில் வாழும்போது வாழ்தல் மீதான பிரியத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்சொன்னவை ஏதுமற்ற இயற்கையுடன் இயைந்து வாழ வாய்ப்பிருக்கும் இடங்களுக்கு செல்வது அவசியமாகும். மும்பையிலிருந்து 90கி.மீ தொலைவில் இருக்கும் மாத்தேரான் மலை அப்படிப்பட்டதொரு பசுமை ததும்பும் இடமாகும். அதனைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

மாத்தேரான் மலையானது மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயிகட் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 2,625 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

இது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்களான மும்பையில் இருந்து 90கி.மீ தொலைவிலும், புனேவில் இருந்து 120கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

nitin pai

பெயர் காரணம்:

பெயர் காரணம்:

மாத்தேரான் என்றால் மலையில் நெற்றியில் அமைந்திருக்கும் காடு என்று அர்த்தமாம். அதீத பசுமை நிறைந்திருக்கும் இந்த இடம் மாசுபடுவதில் இருந்து தடுக்க புகைவெளியிடும் வாகனங்களை மகாராஷ்டிர அரசு இந்த மலையில் நுழைவதில் இருந்து தடை செய்திருக்கிறது.

Ashwan Lewis

சிறப்புகள்:

சிறப்புகள்:

ஆசியாவில் இருக்கும் ஒரே 'automobile-free' மலை வாசஸ்தலம் என்ற சிறப்பை பெற்றதாகும் இந்தமாத்தேரான் மலை.

உலகில் அதிக காற்று மாசுபாடு உள்ள நகரங்களில் ஒன்றாக இருக்கும் மும்பைக்கு அருகில் இப்படிப்பட்ட ஓரிடம் இருப்பது வரம் என்றே சொல்லலாம்.

Ankur Dave

வரலாறு:

வரலாறு:

மாத்தேரான் மலை 1850ஆம் ஆண்டு அப்போதைய தானே மாவட்டத்தின் ஆட்சியரான ஹுக் மலேட் என்பவரால் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். பின்னர் லார்ட் எல்பின்ஸ்டன் என்பவர்மாத்தேரான் நகருக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து கோடை காலத்தில் ஆங்கிலேயே அதிகாரிகள் ஓய்வெடுக்கும் இடமாக வெகுகாலம்மாத்தேரான் மலை இருந்தது.

wishwasdeep srivastav

என்ன செய்யலாம் இங்கே?:

என்ன செய்யலாம் இங்கே?:

மாத்தேரான் மலை மலையேற்றம் செய்ய மிக அற்புதமான இடங்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் இரண்டு ஏரிகள், இரண்டு பூங்காக்கள், நான்கு முக்கிய ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் 28 மலையேற்ற ஸ்தலங்கள் இருக்கின்றன.

Elroy Serrao

என்ன செய்யலாம் இங்கே?:

என்ன செய்யலாம் இங்கே?:

அலெக்சாண்டர், லார்ட்ஸ், எக்கோ, பனோரமா, லூசியா, மயூரா போன்றவை தான் மாத்தேரான் மலையில் இருக்கும் ட்ரெக்கிங் செய்ய ஏற்ற இடங்களாகும்.

பொதுவாக இந்த ட்ரெக்கிங் பயணங்களை முடிக்க 2-3 நாட்கள் ஆகும்.மாத்தேரான் மலையில் இருந்து நமக்கு காணக்கிடைக்கும் சூரிய உதயமும் அஸ்தமனமும் விவரிக்க முடியாத அழகுடையதாகும்.

delna k

என்ன செய்யலாம் இங்கே?:

என்ன செய்யலாம் இங்கே?:

இங்குள்ள சார்லோட் ஏரிப்பகுதி ஏகாந்தமாக ஓய்வெடுப்பதற்கு உகந்த ஸ்தலமாகும். இங்கு பயணிகள் பறவை வேடிக்கை, கரையோர நடைப்பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம். குழந்தைகளுடன் பூங்காவில் விளையாடி மகிழவோ அல்லது அன்புக்குரியவருடன் நடக்கவோ ஏற்ற இயற்கைச்சூழல் இங்கு காணப்படுகிறது.

Sadia

என்ன செய்யலாம் இங்கே?:

என்ன செய்யலாம் இங்கே?:

அடர்ந்து காணப்படும் மாத்தேரான் காட்டுப்பகுதி சில இடங்களில் உள் நுழைய முடியாதபடி உள்ளது. இந்த பிரதேசம் முழுக்க குரங்குகள் சுதந்திரமாக திரிவதை பயணிகள் ஆச்சரியமாக பார்க்கலாம்.

Magiceye

என்ன செய்யலாம் இங்கே?:

என்ன செய்யலாம் இங்கே?:

ஷாப்பிங் பிரியர்கள் இங்குள்ள பஜார்களில் கண்டதையும் வாங்கி குவிக்கலாம். பயணிகள் திரும்பிச்செல்லும்போது வாங்கிச்செல்வதற்காக வித்தியாசமான கைவினைப் பொருட்களிலிருந்து பலவிதமான ஞாபகார்த்தப்பொருட்கள் என்று ஏராளம் இங்கே கிடைக்கின்றன.

Magiceye

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் எளிதில் சென்றடையும்படி மாத்தேரான் ஸ்தலம் அமைந்துள்ளது. விமானம், ரயில், சாலை மார்க்கம் என்று எப்படி வேண்டுமானாலும் இப்பகுதிக்கு வந்தடையலாம்.
நேரம் ரயில் நிலையம் மாத்தேரானுக்கு வெகு அருகில் உள்ளது.

நேரல் நிலையத்திலிருந்து மாத்தேரான் மலைஸ்தலம் வரையிலான சிறு சுற்றுலா ரயிலில் பயணிப்பது ஒரு ஆனந்தமான அனுபவமாகும். இது ஊட்டி ரயிலைப்போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Arpan Bhowmick

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

வெயிலிலிருந்து தப்பிக்கவோ, இயற்கையை ரசிக்கவோ, சந்தடியிலிருந்து விலகி அமைதியை நாடவோ இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலம் மிக பொருத்தமாக உள்ளது. ஒரு முறை வந்தபின் திரும்ப எப்போது வரலாம் என்று யோசித்தபடியே திரும்புவீர்கள்.

Malay Maniar

ஹோட்டல்கள்:

ஹோட்டல்கள்:

மாத்தேரான் மலை இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Harsha S

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X