Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம தூத்துக்குடில இப்படி ஒரு மயில் பூங்கா இருக்குறது இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

நம்ம தூத்துக்குடில இப்படி ஒரு மயில் பூங்கா இருக்குறது இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

நம்ம தூத்துக்குடில இப்படி ஒரு மயில் பூங்கா இருக்குறது இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை. இத்தனை இருந்தாலும் இங்கிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள மயூரா தோட்டம் முக்கியமாக குழந்தைகள் விரும்பும் இடமாக உள்ளது. வாருங்கள் ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்.

Cover Picture Courtesy: Udaykumar PR

∎ மயூரா தோட்டம்

மயூரா தோட்டம் தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மயில் பண்ணையாகும். இது மிகவும் அழகான சுற்றுலா அம்சம் கொண்ட ஒரு இடமாகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆதலால் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சென்று மகிழலலாம்.

∎ மயில் பண்ணை பரப்பு


இது மயில் பண்ணைகளின் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தூத்துக்குடியில் இருக்கும் மிக குறைந்த சுற்றுலாத் தளங்களுள் ஒன்றான இது 55 ஏக்கர் பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மயில்கள் வாழ்ந்து வருகின்றன. சொல்லப்போனால் அவைகளுக்கு இந்த பண்ணை புகலிடமாக அமைந்துள்ளது.

∎ எப்போது செல்லலாம்

வழக்கமாக தூத்துக்குடி வறண்ட காடு என்ற எண்ணம் எல்லாருக்கும் உண்டு. உண்மைதான் என்றாலும் கோடைக் காலம் தவிர்த்த மற்ற நாட்களில் இதமான சூழ்நிலைகளில் இந்த இடத்துக்கு சுற்றுலா செல்லலாம். இந்த பறவைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படுகின்றன. எனவே அதற்கு ஏற்றவாறு உங்கள் சுற்றுலாவைத் திட்டமிடுங்கள்.

சிறப்பு

மற்ற காட்சியிடங்கள் மாதிரி இல்லாமல், இந்த பண்ணையில் மயில்கள் மிகவும் அழகான முறையில் பார்வை படுத்தப்பட்டுள்ளன.
இந்த பண்ணைகளில் தென்படும் மயில்களின் நடனம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருக்கும். உங்கள் குழந்தைகள் நிச்சயம் மகிழ்ந்திருப்பார்கள்.

∎ அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

வல்லநாடு மான் சரணாலயம்

தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். மான்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட இடமாகும்.


❁ குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

கன்னியாகுமரி செல்லும் பாதையில் 76 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். 150 ஆண்டுகள் பழமையானது.


❁ மணப்பாடு தேவாலயம்

திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ளது இந்த தேவாலயம்.


❁ ஹரே தீவு

தூத்துக்குடியிலிருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தீவு. மயில்கள் நிறைந்து காணப்படுகிறது இந்த தீவு.

Read more about: travel thoothukudi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X