India
Search
  • Follow NativePlanet
Share
» »3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா? அதுவும் நம்ம ஊட்டியில்!

3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா? அதுவும் நம்ம ஊட்டியில்!

ஊட்டி என்றதும் ஜில்லென்ற மலைகளும், விரிந்து கிடக்கும் தேயிலைக் காடுகளும் எந்தளவிற்கு பிரசிதிபெற்றதோ அதற்கு ஈடாக புகழ்பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காகவே ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் ஊட்டியை நோக்கி படையெடுப்பது வழக்கம். அப்படி ஒரு நிகழ்வு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன் கொள்ளுத் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற தன் மனைவியுடன் ஊட்டிக்கு ஹனிமூன் வந்துள்ளார் கொள்ளுப்பேரன். கொள்ளூத்தாவின் ஆசை என்ன ? ஊட்டி ரயிலில் செய்தது என்ன, அவர்கள் சென்ற சுற்றுலாத் தலங்கள் என்னன்ன என பார்க்கலாம் வாங்க.

ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில்

மேலே கூறியது போல உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஊட்டிக்கு பெருமைசேர்ப்பது மலை ரயில் சேவை. ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பயணிகள் இதில் பயணிப்பதற்காகவே இங்கு வருவது வழக்கம். சீசன் காலங்களில் இதில் பயணிக்க கூட்டம் அழைமோதும். இதற்குக் காரணம், ஊட்டி ரயில் பயணிக்கும் மலைப் பாதைகளும், வழித்தடத்தில் உள்ள குகைகளுமே. குறிப்பாக, நூற்றாண்டு கடந்த இந்த ரயில் நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படுவதும் ஆகும்.

wikimedia

நீலகிரி எக்ஸ்பிரஸ்

நீலகிரி எக்ஸ்பிரஸ்

மலைகளின் ராணி என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஊட்டியில் கடந்த 1908-ஆம் ஆண்டு நாட்டை தன் கட்டுப்பாண்டில் கொண்டிருந்த ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டதுதான் மலைப் பாதையும், மலை ரயில் சேவையும். நீலகிரி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் நூற்றாண்டு கடந்த ஓர் வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.

Santoshvatrapu

மலைப் பாதை

மலைப் பாதை

தினமும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இந்த மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும் இந்த ரயில் வழித்தடத்தில் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் என மொத்தம் 11 நிலையங்களில் நின்று செல்கிறது. இதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி இன்ஜினாலும், அங்கிருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜினாலும் இயக்கப்படுகிறது.

wikimedia

ரயிலில் ஹனிமூன்

ரயிலில் ஹனிமூன்

எத்தனையோ காரணத்திற்காக பிரசிதிபெற்ற ஊட்டி மலை ரல் தற்போது மேலும் ஒரு புகழைச் சந்தித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர் இந்த மலை ரயிலின் ஒரு பயணத்தை முழுவதுமான தன்வசம் ஆக்கிக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தங்களது ஹனிமூன் பயணத்தை மேற்கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sandheep kumar s

இங்கிலாந்துத் தம்பதியினர்

இங்கிலாந்துத் தம்பதியினர்


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிரகாம் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்தவ சில்வியா ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பொதுவாக, உள்நாட்டில் இருந்து ஊட்டிக்கு ஹனிமூன் வருவது வழக்கம். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த இத்தம்பதியினர் தங்களது ஹனிமூனுக்காக ஊட்டியைத் தேர்வு செய்து பயணித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ஊட்டி மலை ரயிலே. இந்த மலை ரயிலுக்கும், அவர்களுக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்குன்னு தெரியுமமா ?

இது எங்க தாத்தாவின் சாலை..!

இது எங்க தாத்தாவின் சாலை..!


நூறு வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை மலை ரயிலை இயக்க முடிவு செய்ய பிரிட்டிஸ் அரசாங்கம் அப்போது ஊட்டியிலேயே குடியிருந்த பிரிட்டிஷ் மக்களைக் கொண்டு இப்பணியை மேற்கொண்டது. இந்த பாதை அமைத்ததில் முக்கிய பங்கு வகித்தது இந்த இங்கிலாந்து வெள்ளைக்கார மாப்பிள்ளையின் கொள்ளுத் தாத்தா. தாத்தாவை பார்த்ததே இல்லை, அவரது நினைவாக பிரசிதிபெற்ற இந்த மலை ரயிலில் ஹனிமூன் கொண்டாட வந்தோம் என சிலிர்க்கின்றனர் நம்ம விருந்தாளிகள்.

டிக்கெட் விலை என்ன தெரியுமா ?

டிக்கெட் விலை என்ன தெரியுமா ?

எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் இந்த ஊட்டி மலை ரயிலில் இத்தம்பதியினர் மட்டுமே தனியே பயணித்திருப்பது கூடுதல் அம்சம். ஆமாங்க, 153 பேர் பயணம் செய்யக்கூடிய ஒட்டுமொத்த ரயில் டிக்கெட்டுகளையும் இவர்களே வாங்கிவிட்டனர். டிக்கெட்டுக் விலை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய். இங்கிலாந்தில் இருந்தே இந்த ரயிலை முன்பதிவு செய்த விட்டு செம பிலேனோடுதான் வந்திருக்கிறார் கிரகாம்.

Nsmohan

சுற்றி ரசித்த தருணங்கள்

சுற்றி ரசித்த தருணங்கள்

மேட்டுப்பாளையத்தில் பயணத்தை தொடங்கியது முதல் மலைப் பாதையில் வரும் குகைகள், மேகக் கூட்டங்களின் ஊடாக ஊர்ந்து சென்ற ரயில், பள்ளத்தாக்குகள் என மெய்சிலிர்த்தபடிய பயணித்ததான தங்களது அனுபவத்தை பகிர்கின்றனர் இந்த புதுமன ஜோடிகள். அடுமட்டுமின்றி, ஊட்டியில் சில நாட்கள் தங்கியிருந்து சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், பூங்கா, தேயிலைத் தோட்டங்கள், தொட்டபெட்டா என ஒட்டுமொத்த ஊட்டியையும் சுற்றி ரசித்த பின்பே இங்கிலாந்திற்கு திருப்ப திட்டமிட்டுள்ளனர்.

David Brossard

வழித்தடத்தில் உள்ள சுற்றுலா

வழித்தடத்தில் உள்ள சுற்றுலா

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப் பாதை பயணிக்கும், ரயில் நிறுத்தங்கள் அனைத்துமே சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகும். அவற்றுள் குன்னூரில் அரிய வகை ஆர்க்கிட் மலர்கள், வண்ணமயமான பல வகை பூச் செடிகளை காண முடியும். குன்னூரில் தட்பவெப்ப நிலை எப்போதும் ஜில்லென்று நம்மை வரவேற்கும்.

AmanDshutterbug

வெலிங்க்டன்

வெலிங்க்டன்

ஊட்டி மலை ரயில் நிற்கும் வழித்தடத்தில் முக்கியமானது வெலிங்க்டன் நிறுத்தம். இப்பகுதியைச் சுற்றிலும், ஆன்மீகத் தலங்களான பாலசுப்பிரமணிய கோவில், ஜெயின் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளது. பசுமைக் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள வெல்லிங்க்டன் ஏரியும் முக்கிய சுற்றுலா அம்சமாக உள்ளது.

San95660

அருவங்காடு

அருவங்காடு

அருவங்காடு பகுதியில் சுற்றலாத் பயணிகள் கண்டு ரசிக்க ஏற்றதாக கிருத்துவ தேவாலயம், ராமர் கோவில், பாறை முனீஸ்வரர் கோவில் உள்ளன. அருவங்காட்டிற்கு அருகே எமரால்டு பள்ளத்தாக்கு எனும் பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கக் கூடியதாகும்.

Prof tpms

ஊட்டி

ஊட்டி

ஊட்டி முழுக்க முழுக்க ஏராளமான சுற்றுலா அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவற்றுள், தொட்டபெட்டா மலைச் சிகரம், பொட்டானிக்கல் கார்டன், ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, மலர் கண்காட்சி உள்ளிட்டவை உலகம் முழுவதும் அறியப்படக் கூடியதாகும்.

Mohammed Faris

தொட்டபெட்டா

தொட்டபெட்டா

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையிலேயே மிக உயர்ந்த மலைச் சிகரமாகும். ஊட்டியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொட்டபெட்டா சுற்றுலாப் பயணிகள் தவறவிடக் கூடாத தலங்களில் முக்கியமானது. தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து குல்குடி, கட்ல்தடு, ஹெகுபா உள்ளிட்ட பிற மலை முகடுகளையும் காண முடியும்.

Ananth BS

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X