• Follow NativePlanet
Share
» »உச்சகட்ட காதலை வெளிப்படுத்தும் உல்லாசச் சுற்றுலா தலங்கள்..!

உச்சகட்ட காதலை வெளிப்படுத்தும் உல்லாசச் சுற்றுலா தலங்கள்..!

Written By:

புதுத் தம்பதியர்களுக்கு ஹனிமூன் ஒரு ஸ்பெஷலான சுற்றுலாவாகும். திருமணம் போன்ற மிகப்பெரிய சந்தடிகளுக்குப் பின்னர் தம்பதியர் இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவும் ஒரு விடுமுறை மட்டுமன்று, இருமனங்களும் பின்னிப் பிணைவதற்கு இது ஒரு இணைப்புப் பாலமாகவும் அமைகிறது. தம்பதியர்கள் இருவரும் ஒன்றாக, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கும் ஹனிமூன் சுற்றுலா ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஆனால், எங்கே ஹனிமூன் செல்வது என்பதை தீர்மானிப்பது மிகப்பெரிய வேலையாகத்தான் இருக்கும். ஏனென்றால் அந்த ஹனிமூன் நாட்களே ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள உதவும். இந்தப் பயணத்திற்கு பல திட்டங்களும், ஆலோசனைகளும் தேவைப்படும். அப்படி, திட்டம் போட்டுக்கொண்டிருப்பவர்கள் உங்களுக்காகவே நம் நாட்டில் உள்ள இந்த ஹனிமூன் தலங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள்.

பிலிகிரி ரங்கணா மலைகள்

பிலிகிரி ரங்கணா மலைகள்


கர்நாடகாவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு அங்கமான பிலிகிரி ரங்கணா மலைகளும், மலையை ஒட்டிய ரிசார்ட்டுகளும் இரவில் கொஞ்சி மகிழ ஏற்றதாக இருக்கும். ஒருவேலை உங்களது மனைவி சாகச விரும்பியாக இருந்தால், இயற்கையை ரசிப்பவராக இருந்தால் பகல் நேரத்துள அப்படியே காவேரி, கபிலா ஆறுகளில் ஆற்றுப்படகு சவாரிக்கும், தூண்டில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்குக்கும் போய்ட்டு வரலாம்.

Kalyan Varma

அரு

அரு

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அட்டகாசமான ஹனிமூன் தலமான அரு பகுதியில் ஏரிகள், சிகரங்கள், பனி படர்ந்த நதி, பள்ளத்தாக்குகள் என எங்கு திரும்பினாலும் கவிதை ஊற்றுப்பெற வைக்க பல காட்சிகள் காத்துக்கிடக்கும். அப்புறம் என்ன பாஸ், உங்க துணைவிக்கு ஒரு கவிதைய எடுத்து விட்டு காதல வெளிப்படுத்துங்க.

Shayaksen.ed

சோப்தா

சோப்தா


உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது சோப்தா. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பிரதேசம் கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. எந்நேரமும் சிலுசிலுவென வீசும் காற்று இருவரிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

Ayushbisht1

சைல்

சைல்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சைல் எனும் இந்த அழகிய மலைவாழிடம். பச்சை பள்ளதாக்கு, ஆப்பிள் தோட்டங்கள், கோல்ப் மைதானங்கள், பனி மலையில் குதிரை மேல் சவாரி செய்து கொண்டே மற்ற பனிமலைகளை கானும் வாய்ப்பு என சைல் சிலிர்க்க வைக்கிறது.

Alok Kumar

குஃப்ரி

குஃப்ரி


சிம்லாவில் அமைந்துள்ள குஃப்ரி என்னும் சிறிய நகரம் இயற்கையின் மிக அழகு நிறைந்த பகுதியாகும். அமைதியை விரும்பும் புதுத் தம்பதியினர் அனைத்தையும் மறந்து ஒருவரையொருவர் உள்ளத்தையும், உடலையும் பரிமாற்றிக் கொள்ள ஏற்ற ரிசார்ட்டுகளுக்கு குஃப்ரி சூப்பர் சாய்ஸ். இங்கு நிலவும் பேரமைதியில் உரசும் காற்றின் ஊசை, காதில் காதல் சொல்லும்.

Jayasree Sengupta

சோலன்

சோலன்

ஆண்டு முழுவதும் சோலனின் வானிலை நம்மை பரவசப்படுத்தும் வகையிலேயே இருக்கும். வருடத்தின் எந்த சாலத்தில் வேண்டுமானாலும் இங்கே நம்பிக்கையாக பயணிக்கலாம். அடர்ந்த பசுமைக் காடுகளும், தென்றல் காற்றும் மனதை சொக்க வைத்து விடும்.

Bhanu Sharma Solan

மாத்தேரான்

மாத்தேரான்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே போன்ற பரபரப்பான நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமும், ரொமான்ட்டிக்கான இடமாகவும் உள்ளது மாத்தேரான். குளிர்பிரதேசமாக உள்ள இங்கு சுற்றிப்பார்ப்பதற்கு மட்டும் ஏதுவாக 30க்கும் மேற்பட்ட தலங்கள் உள்ளன. ஹனிமூனில் நேரம் இருப்பின் மாத்தேரானில் உள்ள ஒன் ட்ரீ ஹில், உள்ளிட்ட முக்கியமான இடங்களை சென்று ரசித்து வரலாம்.

Jineshpanchal

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more