Search
  • Follow NativePlanet
Share
» »இயற்கையின் அற்புதம், வங்காளத்தின் சொர்க்கம்..! என்ன தெரியுமா ?

இயற்கையின் அற்புதம், வங்காளத்தின் சொர்க்கம்..! என்ன தெரியுமா ?

இயற்கை எழில் கொஞ்சும் வங்காளத்தில் அற்புதங்கள் நிறைந்த சுற்றுலாத் தலம் உள்ளது என்றால் அது ஓர் தேசியப் பூங்காதான். அப்படி அங்கே என்ன சிறப்புன்னு பார்க்கலாம் வாங்க.

பழமையும், புதுமையும் இணைந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டதுதான் மேற்கு வங்காள மாநிலம். சுந்தர்பன் காடுகள், முர்த்தி, பிர்பூம், தாராபீத், பக்காலி போன்ற சுற்றுலாத் தலங்கள் இம்மாநிலத்தில் மிகவும் பிரசிதிபெற்றவை. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கே பயணிக்கும் சுற்றுலாவாசிகள் தவறவிடக்கூடாத தலமாகவும் இவைகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இங்கே அற்புதங்கள் நிறைந்த சுற்றுலாத் தலம் உள்ளது என்றால் அது ஓர் தேசியப் பூங்காதான். அப்படி அங்கே என்ன சிறப்புன்னு பார்க்கலாம் வாங்க.

கோருமாரா தேசிய பூங்கா

கோருமாரா தேசிய பூங்கா


மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு பகுதியில் இமாலய மலையின் அடிவாரத்தில் புல்வெளிகள் நிறைந்த தேராய் பிரதேசத்தில் அமைந்துள்ளது கோருமாரா தேசிய பூங்கா. இன்னும் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத பகுதியாக இருக்கும் இந்த பூங்கா காண்டாமிருகங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

Tiyasakolkata2016

பிரிட்டிஸ் காலத்து பூங்கா

பிரிட்டிஸ் காலத்து பூங்கா


மேற்கு வங்காள மாநிலத்தில் ஜல்பைகுரி மாநிலத்தில் சுமார் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை பிரிட்டிஷ் அரசாங்கம் 1895-ஆம் ஆண்டே பாதுக்கக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தது. பின் 1949-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டு 1994-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது.

Dr. Satyabrata Ghosh

விலங்குகள் சரணாலயம்

விலங்குகள் சரணாலயம்


இயற்கை அம்சங்கள் நிறைந்த இமாலய மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பூங்காவினுள் 150-க்கும் மேற்பட்ட பறவைகள், 20க்கும் மேற்பட்ட ஆமை மற்றும் ஊர்வன உயிர்கள் வாழ்கின்றன. மேலும், இங்கே அதிகளவில் ஆசிய யானைகள், காண்டா மிருகங்கள், சிறுத்தைகள், சாம்பார் மான் ன்ற பாலுட்டி விலங்கினங்களும் உண்டு.

Ashishnoob

காட்சிக் கோபுரம்

காட்சிக் கோபுரம்


பிற தேசிய பூங்காக்களைப் போல் வனப்பகுதியில் நடைபயணமாகவோ, காரிலோ, யானை சவாரி உள்ளிட்டமைவயெல்லாம் செய்ய முடியாது. இங்கே, குறிப்பிட்ட பகுதிகளில் காட்சிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடி பைனாக்குலர் உதவியுடன் வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

DEBJANIDASGHOSH

பிரிட்டிஸ் மர விடுதி

பிரிட்டிஸ் மர விடுதி


இந்த பூங்காவினுள் இரவில் தங்கி சுற்றிப் பார்க்கவும், இயற்கையுடன் புதவித அனுபவம் பெற வேண்டும் என்றார் பூங்காவின் உள்ளேயே தங்கும் விடுதியும் உள்ளது. அதுவும் பிற விடுதிகப் போல் இல்லை. பிரிட்டிஷ் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்ட விடுதி ஒன்று மட்டுமே உள்ளது.

Jonoikobangali

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X