Search
  • Follow NativePlanet
Share
» »உலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்! பாத்தாலே காதலிக்க தோன்றும்

உலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்! பாத்தாலே காதலிக்க தோன்றும்

உலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்! பாத்தாலே காதலிக்க தோன்றும்

இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் இந்த தேசம் கொஞ்சகாலம் முன்பு வரை பல்வேறு தேசங்களாக பிளவுபட்டு கிடந்தவைதான். ஒவ்வொரு தேசத்தையும் மன்னர் பரம்பரைகள் ஆண்டு வந்தன. அதன் பரம்பரைகளில் வீரமிக்க அரசர்களும், இளவரசர்களும் இருப்பார்கள். அவர்களின் ராணிகளும், இளவரசிகளும் மிக அழகாகவும் அதே நேரத்தில் போர்க்குணம் கொண்டும் காணப்பட்டனர். இந்த வகையில் இந்தியாவின் மிக அழகிய அரசிகளின் டாப் 5 பட்டியலும், அவர்கள் வாழ்ந்த அழகிய மாளிகை மற்றும் கோட்டைகளைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

ராணி சம்யுக்தா

ராணி சம்யுக்தா

மகாராஜா கன்னுஜ் என்பவரின் மகளும், பிரித்விராஜ் மகாராஜாவின் மனைவியுமாகிய ராணி சம்யுக்தாதான் இந்திய ராணிகளில் மிக மிக அழகானவராக இருந்துள்ளார். அவரின் புகைப்படங்களைக் கூட வெளியில் காட்டமாட்டார்களாம் அத்தனை அழகு. அரச பரம்பரையினர் மட்டுமே ராணியைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணமான பிரித்விராஜ் சவுகான் சம்யுக்தாவை கண்டு விரும்பி மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக வரலாறு. அழகின் சிகரம் என்றால் அது சம்யுக்தா ராணியை குறிப்பிட்டால் மிகை இல்லை என்ற அளவுக்கு அவர் அழகியாக இருந்துள்ளார்.

 ஆஸிகர் கோட்டை

ஆஸிகர் கோட்டை

ஆஹிர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆசா ஆஹிர் ஆசிகர் கோட்டையைக் கட்டினார். இதற்கு ஆசிகர் குய்லா என்றும் ஒரு பெயர் உண்டு. எவராலும் கைப்பற்ற முடியாத பாதுகாப்பன கோட்டை, ஆசிகர் கோட்டை என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது.

Amrahsnihcas

 கோட்டையின் பாதுகாப்பு

கோட்டையின் பாதுகாப்பு

முகலாயப் பேரரசர் அக்பர் கூட இந்தக் கோட்டையை கைப்பற்ற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கோட்டையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதன் கட்டுமானச் நுணுக்கச் சிறப்பு போன்றவற்றால், கோட்டையை கைப்பற்ற முடியவில்லை என்கிறது வரலாறு.

Pkindian23

சத்புரா வரம்பு

சத்புரா வரம்பு


கந்த்வாவில் இருந்து சுமார் 69 கிமீ தொலைவில் இருக்கும் ஆசிகர் கோட்டை சத்புரா வரம்பில் அமைந்திருக்கிறது. பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோட்டை, நர்மதா பள்ளத்தாக்கை இணைக்கிறது. மேலும், சத்புறா மலை வழியாக தபதி ஆறும் இங்கும் பாய்கிறது.

Pkindian23

 முகலாய - இந்திய பாணி கட்டிடம்

முகலாய - இந்திய பாணி கட்டிடம்

முகலாய கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஆசிகர் கோட்டை, பெர்ஷிய, இஸ்லாமிய, துருக்கிய மற்றும் இந்திய பாணிகள் கலந்து கட்டப்பட்ட ஒரு அற்புத கோட்டை. மாடி மாளிகைகள், தூண்கள் மற்றும் கல்லரைகளைக் கொண்டு ஆசிகர் கோட்டை பிரம்மிப்பாக காட்சியளிக்கிறது.

Pkindian23

ராணி பத்மாவதி

இந்தியாவின் அழகிய ராணிக்களில் இரண்டாவதாக ராணி பத்மாவதி இருக்கிறார். தன் அழகை அலாவுதீன் கில்ஜி அடைந்துவிடக்கூடாது என்று தற்கொலைச் செய்துகொண்டவர் பத்மாவதி. எப்பேர்பட்ட நாடுகளையும் வென்றுவிடும் அலாவுதீன் கில்ஜி ராணியின் அழகைப் பற்றி கேள்வியில் தெரிந்துகொண்டே எல்லாவற்றையும் விட்டுவிட்டு பத்மாவதிக்காக வந்தார் என்றால் அவரின் அழகை புரிந்துகொள்ளமுடிகிறது.

சித்தோர்கர் கோட்டை


சித்தோர்கர் நகரின் மஹோன்னத வரலாற்றுப் பின்னணிக்கான சான்றாக இந்த சித்தோர்கர் கோட்டை கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. இது மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற கதைகளின்படி மௌரியர்கள் இந்த கோட்டையை 7ம் நூற்றாண்டில் கட்டியதாக சொல்லப்படுகிறது.

தொழில் நுட்பத்தின் கிரீடம்


மிக அற்புதமான கட்டிடக்கலை அதிசயமான இது 180 மீ உயரமுள்ள மலை ஒன்றின் மீது 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அக்கால இந்திய கட்டிடக்கலை தொழில் நுட்பத்தின் கிரீடம் என்று சொல்லும் அளவுக்கு இது பல்லாண்டு கால இயற்கை அழிவுகளையும் எதிர்கொண்டு காலத்தில் நிலைத்து நிற்கிறது.

சுலபான காரியம் அல்ல

இக்கோட்டைக்கு செல்வதென்பது அவ்வளவு சுலபான காரியம் என்று சொல்வதிற்கில்லை. செங்குத்தான வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியே சுமார் ஒரு மைல் தூரமாவது நடக்கவேண்டியுள்ளது. இந்த கோட்டைக்கு ஹிந்து கடவுளர்களின் பெயர்களால் அழைக்கப்படும் ஏழு பிரம்மாண்டமான, உலோக ஈட்டிகள் பொருத்தப்பட்ட வாசல்கள் உள்ளன.

ராணி பத்மினி

இந்த கோட்டை வளாகத்துக்குள்ளேயே ராணி பத்மினி மற்றும் மஹாராணா கும்பா ஆகியோரின் அரண்மனைகள் அமைந்துள்ளன. இது தவிர பல அழகிய கோயில்களையும் இந்த கோட்டைக்குள் காணலாம். மழைநீர் மற்றும் இயற்கை வடிகால்கள் மூலமாக நீரைப்பெறும் பல நீர்த்தேக்கங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராணி காயத்திரி தேவி

மகாராணி காயத்திரி தேவி

ஜெய்ப்பூரின் இராசமாதா என்றும் "மகாராணி காயத்ரி தேவி" என்றும் அழைக்கப்பட்டவர் இவர். மேற்கு வங்காளம், கூச் பெகர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெகர் என்ற ஊரில் இளவரசியாகப் பிறந்தார். ஜெய்ப்பூரின் மகாராசா இரண்டாம் சவைமான் சிங் என்பவரை மணந்ததன் மூலம், ஜெய்ப்பூரின் மூன்றாவது மகாராணியாகத் திகழ்ந்தார்.

தன் இளவயதுகளில் அழகுப் பதுமையாகவும் அங்கீகாரம் பெற்றிருந்தார். குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு இந்தியாவின் வெற்றிகரமான அரசியல்வாதியானார். தன்னுடைய தொண்ணூறாவது வயதில் ஜெய்ப்பூரில் இறந்தார்.


Unknown

 ஆம்பேர் கோட்டை

ஆம்பேர் கோட்டை

ஆம்பேர் கோட்டையானது ராஜ மான் சிங், மிர்ஸா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.

Kuldeepsingh Mahawar

 கச்சவாஹா ராஜவம்சம்

கச்சவாஹா ராஜவம்சம்

ஜெய்ப்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே இந்த ஆம்பேர் எனும் ஸ்தலம் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. மூத்தா எனும் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள் இந்த ஆம்பேர் கோட்டை பல அரண்மனைகள், மண்டபங்கள், சபைக்கூடங்கள், கோயில்கள் மற்றும் நந்தவனங்களை கொண்டுள்ளது.

Firoze Edassery

 யானை சவாரி

யானை சவாரி

யானை மீது சவாரி செய்தவாறே சுற்றுலாப்பயணிகள் கோட்டை முழுவதையும் சுற்றிப்பார்க்கும்படியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஷீலா மாதா தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான கோயிலையும் இந்த கோட்டைக்குள் பார்க்கலாம்.

Vssu

கோட்டை வளாகம்

திவான்-இ-ஆம், ஷீஸ் மஹால், கணேஷ் போல், சுக் நிவாஸ், ஜஸ் மந்திர், திலராம் பாக் மற்றும் மோஹன் பாரி போன்றவை இந்த கோட்டை வளாகத்துக்குள் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சங்களாகும்.

இந்தியா, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய கூட்டு

இந்தியா, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய கூட்டு

லட்சுமி விலாஸ் மாளிகை 1890-ம் ஆண்டில் மஹாராஜா சயாஜிராவ் மேஜர் சார்லஸ் மாண்ட் அவர்களை நியமித்து கட்டத் துவங்கிய இந்த அரண்மனை . R.F.கிஸோல்மினால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தோ-சார்செனிக் பாரம்பரியத்தில் உருவாக்ப்பட்ட இந்த அரண்மனையில் இந்தியா, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வடிவமைப்புகளைக் காண முடியும்.

வடிவமைப்பு சிறப்பு

வடிவமைப்பு சிறப்பு

மொசைக் டைல்ஸ்கள், பல்வேறு வண்ணங்களாலான மார்பிள் கற்கள், எண்ணற்ற கலை வேலைப்பாடுகள், அற்புதமான நீரூற்றுகள் மற்றும் பார்வையை கொண்டிருக்கும் அரசவை ஆகியவை இந்த அரண்மனை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக வைத்துள்ளன. அந்த நாட்களிலேயே எலிவேட்டர் போன்ற நவீன வசதிகளை கொண்டதாக இந்த அரண்மனை இருந்தது.

CHIRAG D DHORAJIYA -

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

இதன் தர்பார் ஹாலில் உள்ள பெல்லிஸியின் வெண்கல, மார்பிள் மற்றும் களிமண் சிற்ப சேகரிப்புகளும், வில்லியம் கோல்ட்ரிங்கினால் வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் காண்பவரை மகிழ்விக்க காத்துக் கொண்டுள்ள காட்சிகளாகும். இந்த அரண்மனைக்கு உள்ளே இருக்கும் மோடி பாக் அரண்மனை மற்றும் மஹாராஜா பதே சிங் அருங்காட்சியகம் ஆகிய இடங்களும் காண வேண்டிய இடங்களாகும்.

Amit20081980

விளையாட்டு அரங்கம்

விளையாட்டு அரங்கம்

மோடி பாக் அரண்மனைக்கு அருகில் மோடி பாக் கிரிக்கெட் மைதானத்தில், தேக்கினாலான தளத்தை கொண்டுள்ள டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் மைதானமும் உள்ளது. இராஜா இரவி வர்மாவின் ஓவியங்களில் பெருமளவினை பெற்று அவற்றை மஹாராஜா பதே சிங் சிறப்புற உருவகப்படுத்தியுள்ளார்.

Rahul Bagal

 முன் அனுமதி

முன் அனுமதி


இங்குள்ள மியூசியத்தில் மார்பிள் மற்றும் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய, சீன மற்றும் இத்தாலிய சிற்பங்களும் உள்ளன. அண்டை நாடுகளிலிருந்து சீனா மற்றும் ஜப்பானிய சிற்பங்களை மஹாராஜாவும் மற்றும் இத்தாலிய சிற்பங்களை இத்தாலிய சிற்பக் கலைஞரான பெலிஸியும் இங்கே உருவாக்கியுள்ளனர். இந்த அரண்மனைக்கு பார்வையிடுவதற்கு மஹாராஜாவின் செயலரிடம் முன் அனுமதி பெற வெண்டும்.

Tanay Bhatt

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

அழகிய லட்சுமி விலாஸ்

லட்சுமி விலாஸின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel palaces
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X